(Reading time: 10 - 20 minutes)

புன்னகைத்துவிட்டு “எத்தன நாளா இருக்கீங்க?” என்றான்

“ரெண்டு வருஷமா”

“இந்த ரெண்டு வருஷத்துல அமைதி கிடைச்சிதா?”

“இன்னும் முழுமையா கிடைக்கல” 

“முழுசா கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கா?”

“இருக்கு”

“முழு அமைதி கிடைச்சிட்டா வெளில உலகத்துக்கு வந்துடுவிங்களா?”

“நிச்சயமா வருவேன்” என்றாள்

“உங்களுக்கு குடும்பம் இருக்கா?” கேட்டான்

ஆமென தலையசைத்தாள் ஒருநொடி அவள் கண்முன் தன் குடுமபம் வந்ததை ஆகாஷ் உணர்ந்தான்.

“உங்க பேமலி” அவளும் விடவில்லை.

“தாயே உன்னாலதான்மா எனக்கு பேமிலியே அமையணும்” என முணுமுணுத்தான் அவள் காதில் சரியாக விழாத்தால் “என்ன?” என மீண்டும் கேட்டவளிடம்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எனக்கும் லவ்லி அண்ட் பியூடிபூல் பேமிலி இருக்கு” என்றான்

“குட் . . எனக்கு வேலை இருக்கு அப்புறமா பேசலாம்” என சென்றவளை தடுத்து “சுவாதி உங்களுக்கு எப்ப எந்த ஹெல்ப் தேவைபட்டாலும் தயங்காம என்னை கேளுங்க” என்றான். பிறகு “உளறிட்டேனா?” எனவும் தோன்றியது.

“குடும்பம் கொடுக்க முடியாத சந்தோஷமும் அமைதியுமா இந்த இடத்துல கிடைக்கப் போகுது” என நாக்கு கேட்க துடித்ததை வேறுவழியில்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.

அன்றைய நாள் மாலை சுவாமிஜி சிஷ்யர்களுடன் மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்றுவிட்டார். ஆசிரமத்தில் ஒன்றிரண்டு வயதானவர்களும் இரண்டு ஆசிரம காப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.

அன்று மாதாந்திர சிவராத்திரி அதனால் கோயிலில் இரவு சிறப்புப் பூஜை நடைபெறும். பூஜை முடிந்து அனைவரும் மறுநாள் அதிகாலையில்தான் வருவார்கள்.  

ஆகாஷ் அவர்களோடு செல்வதைப் போல சென்றான். சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்து மெல்ல பின் வாங்கினான். ஆசிரமத்தை அடைந்தவன் வேகமாக தனது அறைக்கு சென்றான்.

அறையில் இருந்த தன் நண்பனும் சிறிது விடுதலைப் பெற்று உளாவினான். அப்பொழுதுதான் ஆகாஷ் பெரிய அறையின் கதவு திறந்திருப்பதை பார்த்தான்.

அவசரமாக கீழே வந்தவன். மெதுவாக அறை கதவு அருகில் நின்றான். கதவின் பக்கவாட்டில் இரண்டு புரமும் விளக்கு இருந்தது. அவனுக்கு முதலில் எதற்கு என புரியவில்லை.

ஆனால் அங்கே நிற்பவர் நிழல் தரையில் நன்றாக தெரியும்படி அமைதிருந்தது. உள்ளே இருப்பவர்கள் வெளியே யாரோ இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும்படி அமைப்பு இருந்தது.  ஒரு நொடியில் அதை புரிந்துக் கொண்டான்.

யாரும் இல்லாததால் அந்த பெரிய அறையை சுற்றி வந்தான். ஆசிரமத்தில் அனைவரும் இருக்கும் சமயங்களில் அங்கே யாருக்கும் அனுமதி இல்லை.

நிதானமாக சுற்றி வந்தவன் கண்ணில் எதுவும் விசேஷமாக படவில்லை. அந்த அறையின் மேலே ஒரு சிறிய துவாரம் இருந்தது. பெரிய மரக்கிளை செல்கிறது அதை வெட்ட மனமில்லாமல் அப்படியே அறையை கட்டி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. மர கிளையே தடிமனாக இருந்தது.

மரத்தில் ஏற தொடங்கினான். மரத்தின் அடர்த்தி அவனுக்கு சிரம்மாக இருந்தது. அந்த துவாரம் அருகில் சென்று உள்ளே பார்த்தான். நீளமான பெரிய அறை. இலைகள் ஒரு பக்கம். பச்சை நிர திரவங்கள் ஒரு பக்கம் என ஏதேதோ இருந்தது.

நடுநாயகமாக ஒரு கல் மேடை இருந்தது. ஒர் இளைஞனும் சுவாதியும் மட்டுமே அங்கு  பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன் ஒரு மேப் விரிக்கப்பட்டிருந்தது. அந்த இளைஞன் சுவாதிக்கு சில இடத்தை காட்டி விளக்கிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கரைந்தபின் இளைஞன் மற்றொரு பக்கம் சென்று எதையோ எடுத்து தலையில் மாட்டினான் பின் தாடியை ஒட்ட வைக்க சுவாமிஜியாக மாறிவிட்டான்.

சுவாதி அவன் தாடி விக்கையும் சரி செய்துவிட்டாள். இருவரும்  அறையைவிட்டு வெளியேறினார்கள்.

தொடரும் . .

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.