(Reading time: 59 - 118 minutes)

ஹாஸ்பிட்டல உங்கள முதல்ல பாத்தவுடனே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை பெற்று கொண்ட என்னபத்தி உங்க வீட்ல என்ன நினைப்பாங்களோங்கற எண்ணம் தலை குனிய வச்சது.

இப்ப எதுக்குடா அதெல்லாம்.அதுதான் எல்லாம் சரியாகிடுச்சே. அஜூ.

இல்ல அஜூ இன்னைக்கு நான் உங்களோட இருக்கனா அதுக்கு முழு காரணம் கீதா.அவ வாழ்க்கையும் நல்லா ஆகனும் அப்பதான் எல்லாம் சரியாகிடுச்சினு அர்த்தம்.

நாமதான் ஒண்ணும் பண்ண கூடாதுனு சொல்லிட்டியே? அப்புறம் எப்புடி?

அவர்களோட காதலே அவர்களை சேர்த்து வைக்கும் அஜூ.

நான் உங்களுடன் பேச வேண்டும் என்று நேற்று சொன்னது இதைபற்றிதான் ஆனால் நீங்கள்தான் என்னை பேசவே விடவில்லை.

எனக்கு புரியுது வது.ஆனா நடந்து முடிந்த விஷயங்களை பேசி என்ன பயன்.நாம கஷ்டப்பட்ட நாட்களை மீண்டும் நினைப்பதைவிட இனி வரும் நாட்களை எப்படி மகிழ்ச்சியாக்குவது என்றுதான் பார்க்க வேண்டும்.

இல்ல அஜூ நீங்க எப்படி உங்களோட காதல எனக்கு புரிய வச்சீங்களோ அதே மாதிரி நானும் என்னோட காதல உங்ககிட்ட சொல்லனும் என்றவள் திருமணத்திற்கு பிறகு தான் இருதலை கொள்ளி எறும்பாக துடித்தது.ஊருக்கு சென்ற போது அர்ஜூன் பேசியதை கேட்டு மனம் தெளிந்தது.கோவிலுக்கு சென்ற போது ரம்யாவை சந்தித்தது என்று அனைத்தையும் சொன்னவள் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அஜூ.

வீட்டில் மாலதியின் டைரியில் உங்கள் போட்டோ பார்த்து எத்தனை நாட்கள் அழுதேன் என்று தெரியுமா?என்றவள் அந்த நியாபகத்தில் இன்றும் கண்ணீர் சிந்தினாள்.

ஆனால் பாருங்க அஜூ எனக்கு மாப்பிளை பார் என்று விளையாட்டுக்கு நான் சொன்னதை கூட அப்படியே செய்துவிட்டாள்.அவள் ரொம்ப நல்லவ அஜூ சத்தமாகூட பேசமாட்டா அவளுக்கு ஏன் அஜூ அந்த கடவுள் இப்படி ஓர் முடிவை கொடுத்தார் என்று அழுகையினுடே பேசினாள்.

அவள் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் வெளியில் வந்தால்தான் அவளுக்கு மன அமைதி கிடைக்கும் என்று அவளை பேச விட்டு அமைதியாக காத்திருந்தான் அஜூ.

அம்மாவைபற்றி சிறிது நேரம் மாலதிபற்றி சிறிது நேரம் என்று பேசி அழுதுகொண்டே அவன் தோளில் சாய்ந்து தூங்கி போனாள்.

சிறு குழந்தையென தூங்கும் தன் மனைவியை பார்த்தவன்.இந்த சின்ன வயதில் இவள் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருக்கிறாள்.இதில் நான் வேறு இவள் கஷ்டத்திற்கு காரணம் ஆகிவிட்டேன்.இனி இவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வர விட மாட்டேன் என்று தனக்குள் சொல்லி கொண்டவன் அவளை அணைத்தவறே தூங்கி போனான்.

அன்று முழுவதும் தான் எங்கிருக்கிறேன் என்பதை கூட யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து விட்டு இரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தான் நகுலன்.தன்னிடம் இருந்த மற்றொரு சாவி கொண்டு உள்ளே வந்தவன் மீண்டும் கதவை மூடிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

கீதா அங்கு எப்போதும் தான் படுக்கும் இடத்தில் படுத்து கொண்டு இருந்தாள்.ஆனால் என்ன கண்ணில் கண்ணீர் கரையுடன் உறங்கி இருந்தாள்.

அவள் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்தவன் அப்படியே கீழே உட்கார்ந்து அவள் விழித்திருப்பது போல் அவளுடன் பேச ஆரம்பித்தான்.

நீ எதற்காக அழுகிறாய் என்னை அழ வைத்துவிட்டு உனக்கு என்ன வந்தது என்று இந்த அழுகை.நீ தான் அமெரிக்கா போக போகிறாயே பிறகு ஏன் இந்த கண்ணீர்.உன் கனவு நிஜமாகிவிட்டது வாழ்த்துக்கள் கீது மேடம் என்று பேசி கொண்டே தூங்கி போனான்.

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்த நகுலன் விரைவாக கிளம்பி கீழே வந்தான்.அங்கு அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த சுந்தரி மகனை பார்த்ததும் திட்ட ஆரம்பித்தார்.

அம்மா பிளீஸ் ஆரம்பிக்காதீங்க.எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்டிங்கனா சாப்பிட்டு போவேன் இல்லை இப்படியே கிளம்பறேன்.எனக்கு நேரமாச்சு என்று வீம்பு பிடிக்கும் மகனை என்ன செய்வது என்று புரியாமல் சென்று இட்லியை பறிமாறினார்.

அம்மா எனக்கு நிறைய வேலை இருக்கு அடுத்த வாரம் டெல்லி போக வேண்டும் ஒரு வாரம் மீட்டிங்.அதற்கான எல்லா வேலையும் பார்க்க வேண்டும் இரவு நான் வர நேரம் ஆகும் அதனால் எப்போதும் போல் நான் வந்துவிடுவேன் போன் பண்ணி எங்கிருக்கிறேன் என்று கேட்டு கொண்டே இருக்காதீர்கள்.ஓகே பாய் மா . நகுல்.

என்ன பையன் இவன்.மற்றவர் பேச இடம் தராமல் இப்படி படபடவென பேசுகிறான்.அடுத்த வாரம் கீதா அமெரிக்கா போக வேண்டும் இவன் வழி அனுப்ப வர மாட்டான் போல இருக்கே. என்ன புள்ளைங்களோ.இவன் வேலை வேலைனு அழையறான் அவளும் என்னோட ஆசை என்னோட கனவுனு சொல்றா.அதுக்கா இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணுனாங்க.ஆளுக்கு ஒரு இடத்தில் இருக்க எதுக்கு கல்யாணம் என்று ஆற்றாமையை புலம்பி கொண்டு இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.