(Reading time: 59 - 118 minutes)

ரொம்பதான்.அவ்ளோ அக்கரை இருக்கறவரு போய் வைப்கிட்ட பேசறது.

நிச்சயமா இப்ப கீதுக்குதான் கால் டிரை பண்ணுவான்னு நெனைக்கறேன்.வா போய் பார்க்கலாம். அஜூ.

அப்புடிங்கறீங்க.எனக்கு என்னமோ நம்பிக்க இல்ல. சுதி.

வா.போய் பார்ப்போம். அஜூ.

சுதி சொன்னதை கேட்ட நகுலனுக்கு கோபம்தான் வந்தது.இங்க ஒருத்தன விட்டுட்டு போனமே என்ன ஆனான்னு ஏதாவது கவலை இருக்கா?அங்க போன உடனே பிரண்டு புடிச்சுட்டளாம்.இவ பேசற பேச்சுக்கு இன்னும் பிரண்டு புடிக்கலனாதான் ஆச்சரியம்.இவள என்னதான் பண்றதோ?இப்புடி என்ன தனியா பொலம்ப விட்டுட்டாலே சரி போன் பண்ணி பாப்போம் என்று போன் பண்ண ஆரம்பித்தான்.

மனைவியை பார்த்த அஜூ.சொன்னன்ல கண்டிப்பா போன் பண்ணுவான்னு பாத்தியா.எனக்கு தெரியாதா என்னோட உடன் பிறப்பபத்தி.

ரொம்பதான்.சரி வாங்க போலாம்.அவங்க பேச ஆரம்பிச்சுறுவாங்க. சுதி.

இருடி நம்ம போட்ட நாடகம் ஒர்க் அவுட் ஆயிருக்கா இல்லையானு பாக்கலாம். அஜூ.

என்னங்க நீங்க.அதுக்காக ஹஸ்பண்டும்,வைப்பும் பேசறத கேட்கறதா என்று சங்கடமாக அஜூவை பார்த்து சுதி கேட்க.

இவ ஒருத்தி தேவை இல்லாம லாஜிக் பாத்துக்கிட்டு. அவங்க கொஞ்சறத ஒண்ணும் நம்ப ஒட்டு கேட்கல.சண்டை போடறத தான் கேட்க போறோம்.

அப்ப உங்க தம்பி நம்ம சொன்னதுனால பேசலையா.சண்ட போடதான் பேசறாரா.

ஸ்ஸ்ஸ்.....பேச ஆரம்பிச்சுட்டான் கவனி.

நகுலனிடம் இருந்து கால் வரவும் மித்ரனுடன் விளையாண்டு கொண்டு இருந்த கீதா சந்தோஷமடைந்தாள். உற்சாகமாக பேச ஆரம்பித்தாள்.

ஹாய் நகுலன் வாட் எ ஸர்ப்ரைஸ்.இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்.மித்ரனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பேசலாம் என்று அவனிடம் காத்திருக்க சொன்னாள்.ஆனால் தன்னைவிட இன்னோருவன் முக்கியமாக போய்விட்டான் என்ற பொறாமை உணர்வு அவனுள் இருக்கும் கோபத்தை இன்னும் அத்கமாக்கியது.இதில் அவனுடன் இவள் கொஞ்சி பேசி கொண்டு இருப்பதை கேட்டவன்.போனை வைத்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

லாரா ஆபிஸ் பைல்களை பார்த்து கொண்டு இருபதால்தான் கீதாவுடன் விளையாடலாம் என்று இங்கு வந்தான்.இங்கு போன் வரவும் கோபமான மித்ரன்.

நோநோ..என்று சிணுங்க.கீதாவோ என்பட்டுல,சமத்துல நாளைக்கு நீ சொன்ன மாதிரி ஐஸ் கிரீம் சாப்பிட போகலாம் என்று சமாளித்து அனுப்பிவிட்டு வந்தவள்

நகுலனுடன் பேச ஆரம்பித்தாள்.

எப்புடி இருக்கீங்க?டெல்லில இருந்து எப்ப வந்தீங்க? சாப்டீங்களா?என்று அவள் பேசி கொண்டே இருந்தாள்.அவளின் எந்த கேள்விக்கும் பதில் வராமல் இருக்கவும்,ஹாலோ நகுலன் இருக்கீங்களா?என்று எங்கு கட் ஆகிவிட்டதோ என்று கவலையுடன் கேட்க.

அவனோ அமைதியாக இருக்கேன்.அங்க போன உடனே புது பிரண்டு புடிச்சுட்டீங்க போல இருக்கு மேடம்.புது பிரண்டு கிடைச்சதும் பழைய பிரண்ட மறந்துட்டீங்க இவ்ளோ நேரமாகி நான் போன் பண்றேன் என்கிட்டகூட பேசாம வெயிட் பண்ண சொல்லிட்டு அங்க பேசுறீங்க என்று காக்க வைத்ததை குத்தலாக சொன்னான்.

நான் ஒண்ணும் மறக்கவில்லை.நீங்கள்தான் மறந்துவிட்டீர்கள்.என்னை உண்மையாகவே பிரண்டாக நினைத்திருந்தாள் நான் அமெரிக்கா கிளம்பும் போது வழி அனுப்ப வந்திருப்பீர்கள்.நான் உங்களுக்கு முக்கியமாக தோன்றவில்லை.

மித்ரன் வந்த இரண்டு நாளில் என்னையே சுற்றி சுற்றி வருகிறான்.நான் எங்கு போனாலும் கூடவே வருகிறான் தெரியுமா.இப்போது கூட போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை உங்களுடன் பேச வேண்டும் என்றுதான் அனுப்பினேன்.இல்லையென்றால் இன்று என்னுடன் தங்குவதாக சொன்னான் என்று சொல்லி அவள் வாய் மூடும் முன்பு அந்த பக்கம் போன் வைக்கப்பட்டது.

நான் என்ன சொல்லிவிட்டேன் என்று இப்போது இவ்வளவு கோபமாக போனை வைத்தார்.போன் பண்ணியவர் பேசவே இல்லை.நான் கேட்டதுக்கும் பதில் சொல்லவில்லை.ச்ச.... எவ்வளவு ஆசையாக போனிலாவது அவன் குரல் கேட்கலாம் என்று நினைத்தேன் என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

சென்னையில் நகுலனோ அடியேய்.புருஷன்னு ஒருத்தன விட்டுட்டு போனமே எப்புடி இருக்கான் என்னனு என்கிட்ட பேசாம அங்க அவன்கிட்ட கொஞ்சுகிட்டு இருக்கியா.உன்ன பிரியா விட்டாதானே அவன் கூட நாளைக்கு ஐஸ் கிரீம் சாப்பிட போவாய்?நீ எப்படி போகிறாய் என்று நான் பார்க்கறேன் என்று எண்ணியவன் நாளை வீடியோ கால் எப்போது வேண்டுமானாலும் பண்ணுவேன் தயாராக இரு என்று ஒரு மெயிலை அனுப்பிவிட்டு படுத்தான்.

இவன் செய்வதை பார்த்து கொண்டு இருந்த இருவரில் சுதிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.