(Reading time: 22 - 43 minutes)

என்னது டா வா??”

ஆமா பின்ன நீ டீ சொல்லலாம் நா டா சொல்ல கூடாதா..”

ம்ம் சரிதான் இதே மாதிரி மத்த விஷயத்துலயும் ஏட்டிக்கு போட்டி பண்ணா நல்லாயிருக்கும்..”

ஐயே ஸ்ரீகா எப்போ பாத்தாலும் இப்படியே பேசிகிட்டு அப்பறம் நா போனை வச்சுருவேன்..”

அம்மா தாயே நா ஒண்ணும் சொல்லல மறுபடியும் மலையேறிடாத..”,என்றவனின் பதட்டத்தில் சிரித்திருந்தவள் இயல்பிற்கு திரும்பிருந்தாள்.

அடுத்ததாய் முகூர்த்த புடவை எடுக்கும் படலம்.காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பியிருந்தனர் டீநகருக்கு.

முகூர்த்த புடவை செக்ஷனில் மது தனக்கு பிடித்த புடவையை எடுக்க ஸ்ரீகாந்தின் தாயோ முகூர்த்த புடவை சிகப்பு நிறத்தில் இருப்பதுதான் நல்லது எனக் கூறி ஒரு புடவையை காட்டி எடுக்கச் சொன்னார்.அடுத்ததாய் ரிசெப்ஷனுக்கு ஸ்ரீகாந்திற்கு ஷெர்வானி எடுக்கலாம் என மது கூற அவரோ கோட் சூட் தான் பிரமாதமாய் இருக்குமென்று அதையே வாங்கிக் கொள்ள வைத்தார்.

அடுத்ததாய் நகை கடைக்குச் செல்ல வாயே திறக்க கூடாது என முடிவெடுத்தவளாய் மது அமைதி காக்க அவள் அமைதியின் அர்த்தம் உணார்ந்தவனாய் ஸ்ரீகாந்த் செய்வதறியாது நின்றான்.அவன் அம்மாவே இருவருக்குமான மோதிரத்தையும் மாங்கல்யத்தையும் தேர்ந்தெடுக்க மொத்தமாய் கடுப்பின் உச்சத்தில் இருந்தாள் மது.

இது பத்தாதென கடைசி நேரத்தில் வெள்ளி பாத்திரம் அது வேண்டும் இது வேண்டுமென வாங்கச் சொல்லி வைரவனிடம் கூற அவரும் வாங்கிக் கொடுத்தார்.

வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி அவள் கைப்பை சோபாவிற்கு பறந்தது.மரகதமே எதுவும் கூறாமல் கொஞ்சம் அடங்கித் தான் போனார்.

இதுக்குத்தான் இந்த கல்யாணமெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..அவங்க இஷ்டத்துக்கு எல்லாத்துக்கும் தலையாட்ட முடியாது..வாங்கினதுல பாதிக்கு மேல லிஸ்ட்லயே இல்ல சும்மா அதை வாங்கு இதை வாங்குனு..

நீங்களாவது வாயை துறந்து பேச மாட்டீங்களா இதென்ன கடைசி நிமிஷம் கார்னர் பண்றது கடையில வச்சு கேட்டா மாட்டோம்னு சொல்ல மாட்டோம்னு தான இப்படி பண்றாங்க..இன்னைக்கு ஸ்ரீகா வுக்கு இருக்கு..”

மது இதெல்லாம் பெரியவங்க விஷயம் நீ உன் தலையில போட்டுக்காத..கல்யாணம்னா அப்படிதான் முன்ன பின்ன இருக்கும்.அவங்க வேணும்னு பண்ற மாதிரியெல்லாம் தெரில டா..ஊர்காரங்க இல்ல ஏதோ இன்னொசண்டா பண்றாங்க..”

ம்மா வேணாம் எதாவது சொல்லிருவேன்..கொஞ்ச நேரம் எதுவும் பேசாம போய்ருங்க..நீங்களும் உங்க கல்யாணமும்..”,என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டு கதவை அறைந்து சாத்தினாள்.

சற்று நேரத்தில் ஸ்ரீகாந்த் அவளை அழைக்க அதை அட்டெண்ட் செய்தவள் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்,

ஸ்ரீகா நீ இப்படி இருப்பனு நா கொஞ்சமும் எதிர்பார்க்கல..கொஞ்சம் கூட வாயை திறந்து பேச மாட்டியா..அவங்க இஷ்டத்துக்கு தான் எல்லாமே பண்ணுவாங்கனா அவங்க இஷ்டத்துக்கு வேற பொண்ணை பாத்துக்க சொல்லு..நா கட்டிக்க போற புடவை கூட நா செலக்ட் பண்ணிக்க கூடாதுனா என்ன நியாயம்??”

மது உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுது பட் அப்பா உங்க அப்பா அம்மா எல்லார் முன்னாடியும் என்ன பண்ண சொல்ற..கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ டா..”

ம்ம் நல்லா வாய் கிழிய என்கிட்ட பேசு..எனக்கு சுத்தமா பிடிக்கல..நினைச்சு நினைச்சு அதை குடு இதை குடுனு..வரதட்சனை வாங்குறதே தப்பு இதுல டிமண்ட் பண்ணி வாங்குறதெல்லாம் ரொம்ப கேவலம்..”

மது கோவத்துல வார்த்தையை விடாத..இங்க எதுவும் இல்லாம உங்ககிட்ட இருந்து வாங்கல ஏதோ சம்பிரதாயம் சாங்கியம்னு சொல்லி தான் வாங்க வேண்டியதா போச்சு..”

அதான என்ன இருந்தாலும் உங்கம்மாவ விட்டு கொடுப்பீங்களா..சம்பிரதாயமெல்லாம் சும்மா கண் துடைப்பு நல்லா ப்ளான் பண்ணி தான் எல்லாம் பண்றாங்க உங்கம்மா..எதுக்கு இப்படி சில்லியா பிகேவ் பண்றாங்களோ..”

ஸ்டாப் இட் மது போதும்..யாரும் என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க..இத்தனை நேரம் உனக்காக தான் அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன்.இதெல்லாம் சாஸ்திரம் டா அதான் வாங்க சொன்னேன் மத்தபடி நம்மகிட்ட இல்லாததானு பாவமா கேட்டு அழறாங்க..

இங்க வந்தா நா எது சொன்னாலும் குதர்க்கமா பேசி சண்டை போட்டுட்டு இருக்க நீ..என்னவோ பண்ணிக்கோங்க..கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ச்ச..”

போனை வைத்தவளுக்கே அவன் பேச்சை கேட்டு மனம் சற்று இளகித்தான் போனது.தானாவது கொஞ்சம் பொறுத்திருக்கலாமோ என்றே யோசித்தாள்.இருந்தும் தனக்கான பிடிவதம் அவளை இறங்கி வர வைக்க மறுத்தது.

இரண்டு நாட்கள் இப்படியே கழிய இருவரும் சரியாய் பேசிக் கொள்ளவேயில்லை.குட் மார்னிங் குட் நைட் சாப்டாச்சா இப்படியே பொழுது கழிந்தது.

ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தே இறங்கி வந்து அவளுக்கு போனில் அழைக்க அடுத்த நொடி இருந்த கோபமெல்லாம் இடம் தெரியாமல் போயிருந்தது மதுவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.