(Reading time: 14 - 28 minutes)

வரை பொறுத்தவரை அமுதன் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவன், வெளிநாட்டவர் எல்லாம் பெண்களிடம் ஒரு அளவு வைத்து பழகுபவர் இல்லை. இதில் அருளும் கொஞ்சம் சகஜமாக பழகுவதை உரிமையாக எடுத்துக் கொண்டு அமுதன் அவளை தவறான கண்ணோட்டத்தில் நினைத்து விடக் கூடாதே என்பது அவர் பயம். என்ன பிரச்சனை வந்தாலும் அதில் முதலில் பாதிப்படைவது பெண்ணாக தானே இருக்கிறாள். அதனால் இதில் நாம் கவனமாக இருந்துக் கொண்டால், எதுவும் தவறாக நடக்க வாய்ப்பு இல்லை என்பது கலையின் எண்ணம்.

இது அருள்மொழிக்கும் புரிந்தது தான், இது ஒரு அறிவுரையாக கலை சொல்லியிருந்தால் உடன் இலக்கியாவும் வருவதால் அவளுக்கும் சேர்த்து சொல்லியிருக்கலாம். ஆனால் தனக்கு மட்டும் தன் அன்னை சொல்வதால், அமுதனோடு பேசுவது பழகுவதும் அன்னைக்கு பிடிக்கவில்லையோ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

கலை சொன்ன விஷயம் இலக்கியாவிற்கு பொருந்தும் தான், ஆனாலும் இலக்கியாவிடம் அருள்மொழிக்கு சொல்வது போல் சொல்ல கலையரசிக்கு தயக்கமாக இருந்தது. இதுவே மகியோ, மலரோ என்ரால் உரிமையாக கலையால் சொல்ல முடியும். ஆனால் இலக்கியா பூங்கொடியின் தங்கை மகள், தனக்கு அறிவுரை சொல்ல இவர்கள் யார்? என்று அவள் நினைத்து விடக் கூடாதில்லையா?

இலக்கியா அப்படி நினைப்பவள் இல்லை தான், அது கலையரசிக்கும் தெரியும், ஆனாலும் எல்லா நேரமும் அப்படி அமையாதில்லையா? தான் சொல்ல வரும் விஷயத்தை தன் மகளால் புரிந்துக் கொள்ள முடியும், ஆனால் இலக்கியா அதை சரியாக புரிந்துக் கொள்ளாமல், அவர் அவளை தவறாக நினைத்துவிட்டாரே என்று நினைத்தால் என்னாவது? தவறாக புரிந்துக் கொண்டு அதை அவள் பெற்றோரிடம் சொல்லிவிட்டாள்.

புகழேந்தியோ பூங்கொடியாகவோ இருந்தால், அவரால் தைரியமாக பேச முடியும், ஆனால் இலக்கியாவின் பெற்றோர் ஏதாவது கேட்டால் அவரால் அதுபோல் பேச முடியுமா? என் மகளுக்கு அறிவுரை சொல்ல நீ யார் என்று கேட்டால் என்ன செய்வது?அண்ணன் வீடாக இருந்தாலும் அடைக்கலமாக வந்திருப்பதால் இப்படிப்பட்ட எண்ணங்கள் வரக் கூடாது என்று கலை நினைத்தாலும் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்.

அதற்கு எதுவும் யாரையும் சொல்லாமல் இருப்பது நல்லது என்று அவர் நினைத்துக் கொள்வார். எப்படியும் பூங்கொடி இலக்கியாவிற்கு இதுபோல் அறுவுரைகள் எல்லாம் சொல்ல செய்வார் என்று கலை அமைதியாகிவிட்டார். கலை நினைத்தப்படியே பூங்கொடியும் இலக்கியாவிற்கு மட்டுமல்ல, அருள்மொழி மற்றும் சுடருக்கும் இதுபோல் அறிவுரைகள் சொல்லித்தான் அனுப்பினார்.

ஆனல் அவர் சொல்ல வேண்டிய விதத்தோடு பக்குவமக சொல்வார், ஆனால் கலைக்கு அப்படியெல்லாம் பேச தெரியாது. அருள்மொழிக்கும் அது புரிந்திருந்தாலும் அன்னைக்கு பிடிக்கவில்லையென்பதால் அவர்களுடன் முதலில் வெளியில் செல்ல தயங்கினாள். பிறகு  அனைவரும் வற்புறுத்தவே அவர்களோடு சென்றாலும் அமுதனிடம் கொஞ்சம் விலகியே இருந்தாள்.

இதில் அவன் அனைவருக்கும் போல் அவளுக்கும் பரிசு வாங்கிக் கொடுத்த போது அதை வாங்கிக் கொள்வதில் அவளுக்கு எந்தவித தயக்கமும் இல்லையென்றாலும், எந்த ஒரு பொருளை வாங்கினாலும் முதலில் தன் அன்னையிடம் காட்டுவது அவளது வழக்கம். அப்படி அதை காட்டும்போது அது அமுதன் வாங்கிக் கொடுத்தது என்று  சொல்ல தானே வேண்டும். அதை அவர் தவறாக புரிந்துக் கொள்ள கூடாதே,  உனகு ஏதற்கு அவன் இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி வந்தால் என்ன செய்வது? அதற்காக அன்னையிடம் பொய்யும் சொல்ல அவளால் முடியாது என்பதால் தான் அமுதன் வாங்கிக் கொடுத்த போது அதை வாங்க மறுத்துவிட்டாள்.

“எனக்கு அமுதனை இன்சல்ட் பண்ணனும்னோ இல்ல அவரை அவாய்ட் பண்ணனும்னோ இல்ல மச்சி.. ஆனா அம்மா இப்படி சொல்லும்பது என்ன செய்ய.. நான் வாங்க மறுத்தப் போது அமுதனுக்கு அது கஷ்டமா இருக்கும்னு தெரியும்.. ஆனாலும் என்னால வாங்கிக்க  முடியாது.. அமுதன் நம்ம ஃபேமிலிக்கு பழக்கமாக இருந்தாலும் இப்பவும் ஒரு லிமிட் ஃபாலோ செய்ய வேண்டியிருக்கு அவ்வளவு தான். மத்தப்படி அமுதன் கதிர் சித்தப்பாக்கு தெரிஞ்சவங்கன்னு  தெரிஞ்சதுக்கு பிறகு அமுதன் கூட ஒரு நல்ல ப்ரண்டா  பழக எனக்கும் ஆசை தான். ஆனா ப்ரண்டா பழக மட்டும் தான்.. என்னோட கல்யாணம் அம்மாக்கு பிடிச்ச மாதிரி தான்  அமையும். அம்மாக்கு பிடிச்சவனை தான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன். அப்படியிருக்க என்னோட மனசுல காதல் எப்படி வரும்? அதனால் இதுபோல யோசிக்கிறத விடு..

அம்மா நான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுல இருந்து எங்கிட்ட பேசவேயில்லை. அதனால அவங்கலை சமாதானப்படுத்தப் போறேன்..” என்ரு சொல்லிவிட்டு சென்றாள்.

“சரியான அம்மா கோண்டு.. ஆனாலும் உண்மையிலேயே அவளுக்கு அமுதன் மேல எந்த ஃபீலிங்ஸும் இல்லையா.. நமக்கு தான் இப்படியெல்லாம் தோனுதா..” என்று இலக்கியா தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

கலையை தேடி வந்த அருள் அன்னையை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாள்.

“அம்மா என்மேல கோபமா இருப்பீங்கன்னு எனக்கு புரியுது சாரிம்மா..”

“ம்ம் பெரிய மனுஷி ஆயிட்ட.. எல்லாம் நீயா யோசிச்சு முடிவெடுத்துக்குற.. அதான் எல்லோரும் சேர்ந்து உன்னோட விருப்பம் தான் முக்கியம் சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன விடு.. நீயும் வேண்டாம்னு சொல்லிட்ட.. அம்மா உன்னோட நல்லதுக்கு தான் செய்வேன்னு உன்னால புரிஞ்சிக்க முடியல இல்ல..”

“அப்படி இல்லம்மா.. எனக்கு மேல படிக்க ஆசை அதுக்கு தான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்..”

“உன்னை அவங்க மேல படிக்க வைப்பாங்கடா..”

“படிச்சதும் எனக்கு நல்ல வேலைக்கு போகணும் ம்மா..”

“உன்னை வேலைக்கு போக கூடாதுன்னு சொல்ற அளவுக்கு அந்த குடும்பத்துல யாரும் இல்லடா.. நீ வேலைக்கு போகறதும் போகாததும் உன்னோட இஷ்டம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.