(Reading time: 8 - 16 minutes)

"அவளுக்கு உடம்பு சரி இல்லையாம் ராம். நா தான் அவள நாளைக்கு காலேஜ் போய்க்கலாம் ரெஸ்ட் எடுனு சொல்லிட்டேன்", என்று அவனது தங்கைக்கு அவள் சிபாரிசு செய்வது அவனுக்கு சிரிப்பயே கொண்டு வந்தாலும் எதையும் வெளிகாட்டிக்காது,

"அவளுக்கு அடிக்கடி இதே வேலைய போச்சு. உன்ன பேச வச்சி என்ன சமாளிக்க பாக்கறாளா?. இது தான் லாஸ்ட் டைம். இனிமே அவளுக்கு நிஜமா உடம்பு சரி இல்லனா கூட லீவு போட கூடாது" என்று தன் மனைவியிடம் கூறி விட்டு சென்றுவிட்டான்.

சீதாவிற்கு தான் அவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

"நீ பொய்யா கோவப்பட்டா கூட அழகு தான் டா." என்று மனதிற்குள்ளே கூறிக்கொண்டாள்.

ராமும் சீதாவும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக இன்ஜினியரிங் படித்தவர்கள்.

ராம் மெக்கானிக்கல் சீதா பி-டெக் ஐடி யும் தேர்ந்தெடுத்து இருந்தனர். இருவரும் ஒரே பகுதியில் வசிப்பதால் ஒரே கல்லூரி பேருந்திலே தினமும் பயணம் செய்வர். ராமின் சொந்த ஊர் திருச்சி. சென்னையில் அவனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்தான். சீதா சென்னையே என்பதால் அவளுடைய வீட்டில் இருந்தே கல்லூரிக்கு வருவாள். நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவள். அவள் நினைத்தால் தினமும் தங்களுடைய காரிலேயே கல்லூரிக்கு வந்து போகலாம் ஆனால் சீதாவுக்கோ அனைவரோடும் கல்லூரி பேருந்துலேயே பயணம் செய்ய பிடித்திருந்தது. சீதாவின் தாயாருக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் மகளின் ஆசைக்காக விட்டுவிட்டார்.

முதல் நாள் கல்லூரி,

கல்லூரி பேருந்தில் ஏறிய சீதா சுற்றும் முற்றும் பார்த்தாள். ராம் அருகில் மட்டும் ஒரே ஒரு இடம் காலியாக இருக்க அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"ஹாய், ஐ அம் சீதா" , என்று புன்னைகைத்தவாறு கை நீட்டினாள் ராமை பார்த்து.

"ஹாய்... ராம்", என்று கை குலுக்கினான்.

"நா பி-டெக் ஐடி. நீங்க?"

"மெக்கானிக்கல்"

"ஓஹ் ஓகே..."

ஏதேதோ அவனிடம் பேசிக்கொண்டு வந்தாள். ராம் அதிகம் பேசும் சுபாவம் இல்லை என்றாலும் சென்னையில் கல்லூரியில் தனக்கு கிடைத்த முதல் தோழி சீதா. அவனும் இயல்பாகவே அவளுடன் உரையாடி கொண்டு வந்தான்.

கல்லூரியில் இறங்கியதும்,

"ஓகே ராம் ஈவினிங் மீட் பண்ணலாம். பை" என்று விடை பெற்றாள்.

"பை", ராம்.

அவரவர் வகுப்பை கண்டு பிடித்து அமர்ந்து விட்டனர் ஒரு வழியாக. முதலில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் வந்து உரையாடினார். பிறகு அனைவரையும் ஆடிட்டோரியம்யில் வரவழைத்து அக்கல்லூரியின் பிரின்சிபால் புதிதாய் சேர்ந்திருக்கும் மாணவர்களுடன் உரையாற்றினார். சீதா வழக்கமாகவே அதிகம் பேசுபவள். கவிதா, அஞ்சலி என்று இருவரிடமும் நட்பாகிவிட்டாள். அங்கு ராமிற்கோ ரகுவின் நட்பு கிடைத்தது. இப்படியாய் நாட்கள் நகர, ஒரு நாள் கால்லூரி பேருந்தில் இருந்து இறங்கிய சீதாவும் ராமும் ஒன்றாக நடந்து சென்றனர்.

"சீதா... சீதா...", என்ற அழைப்பில் இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கே அவர்களின் சீனியர் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

வந்தவன் ராமை எரிக்கும் பார்வை பார்த்து விட்டு,

"டேய்... இங்க என்ன வேடிக்க பாத்துட்டு இருக்க உன் கிளாஸ்க்கு போ", என்றான்.

வந்தவனின் வார்த்தைகளோ கடுமையாக இருக்க எதோ பிரச்சனையோ என்று ராம் சீதாவின் முகத்தை பார்த்தான்.

"போனு சொன்னா இவ மூஞ்ச பாத்துட்டு இருக்க?. ராம்னு பேரு வச்சி இருந்தா சீதா பின்னாடியே தான் சுத்துவியோ?. ஒழுங்கா திரும்பி பாக்காம கிளாஸ்க்கு ஓடு", என்றான்.

"அவர் ஏன் போகணும். ராம் என்னோட பிரெண்டு என் கூட தான் இருப்பார்.", சீதா.

"சீதா... நா உன்கூட தனியா பேசணும்", சீனியர்.

"தனியா பேசுற அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்ல. நீ வா ராம் நாம போலாம்" என்று ராமுடன் கிளம்பிவிட்டாள்.

" யாரு சீதா அவன் லூசு மாதிரி பேசறான்?.உனக்கு முன்னாடியே தெரியுமா?", ராம்.

"அவன் பேரு கிருஷ்ணா. என் அப்பாவும் அவங்க அப்பாவும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஏன்னு தெரில அவன பாத்தாலே எனக்கு பிடிக்கல. அவன் பேச்சும் பார்வையும் அப்டியே அவன் கண்ணுலே குத்தலாம் போல இருக்கும். அவன பத்தி பேசி எதுக்கு நம்ம டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு. கிளாஸ்க்கு போலாம் ராம்."

அவர்கள் ஒன்றாக போவதையே பார்த்து கொண்டிருந்தவன் கோவத்தில் தரையை வேகமாக உதைத்தான். பக்கத்தில் இருந்து ஓடிவந்த மூன்று பேர் அவனை சுற்றி கொண்டனர், "டேய் க்ரிஷ் என்ன டா ஆச்சு?", என்றான் ஒருவன்.

"பரவால்ல விடு மச்சி இப்போ தான காலேஜ் ஸ்டார்ட் ஆகி இருக்கு பாத்துக்கலாம்", என்றான் இன்னொருவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.