(Reading time: 6 - 12 minutes)

அவள் கையில் பிரசாதத்தைக் கொடுத்த படி, “பல்லாவது தேய்ச்சியா?” என்று கேட்டார்.

வேகமாக மண்டைய ஆட்டவும், ஹ்ம்ம்.. என்று முறைத்தபடி வெளியே சென்று விட்டார்.

துர்கா வேகமாக மகளின் அருகில் வந்து

“எருமை மாடு” என்று மெதுவாகக் கண்டிக்க, மகளோ

“பெரியப்பா, பாருங்க அம்மா என்னை எருமை மாடுன்னு சொல்றாங்க” என்று அவரை மாட்டி விட்டாள்.

பிரதாப் “துர்கா” என்ற படி கோபமாகப் பார்க்க,

“இல்லை. சீக்கிரம் எழுந்துக்க வேண்டியது தானேன்னு சத்தம் போட்டேன்” என்று அவர் பயத்தோடு கூறினார்.

“அதுக்காக எந்த வார்த்தையும் சொல்றதா. வீட்டுப் பொண்ணுங்க மகா லக்ஷமி. அதுங்க கண் கலங்கினா, நம்ம வீட்டில் நிம்மதி இருக்காது. புரிஞ்சுகோ”

“சரிங்க மாமா. “ என்றார் துர்கா.

“உங்கம்மா சொல்றதைக் கொஞ்சம் கேளு. காலையில் சீக்கிரம் எழுந்துக்கறது நம்ம உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி தரும். சோம்பல் அதிகமானா நம்ம புத்தியும் மழுங்கிப் போகும். புரியுதா?

“புரியுது பெரியப்பா” என்று சொல்ல,

“போய்க் குளிச்சு கிளம்பற வழியப் பாரு” என்றார்.

நல்ல பிள்ளையாக மாடி ஏறியவள், தன் அறைக்குள் சென்றதும், சப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே என்றபடி பெட்டில் விழுந்தாள்.

தன் அறைக் கதவு தட்டப்பட, ஐயோ என்று வேகமாக எழுந்து கதவைத் திறக்க, அங்கே அவள் அம்மா கையில் காபி கப்புடன் நின்றார்.

“உஸ்.. நீங்க தானா. பெரியப்பா தான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் “ என்றபடி அவர் கையில் இருந்த காபியைப் பிடுங்கி குடித்தாள்.

உள்ளே வந்தவர், அவள் போர்வையை மடித்தவாறே,

“ஏண்டி, தினம் எனக்கு பிரஷர் ஏத்துறதே வேலையா வச்சு இருக்க? நீ வந்து உட்காருர வரைக்கும், எனக்கு டென்ஷன் ஏறிப் போகுது”

“டோன்ட் வொர்ரி மம்மி. வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வந்துருவா இந்த கிருத்திகா”

“ஹ. பெரிய சூப்பர் ஸ்டார்ன்னு நினைப்பு.” என்று அவர் கிண்டல் அடிக்கவும், தன் அன்னைக்கு பழிப்புக் காட்டினாள்.

அதற்குப் பின் காலை வேலைகளை முடித்துவிட்டு  தன் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

கிருத்திகா. துர்கா, சக்தி தம்பதியரின் ஒரே மகள். அளவான உயரம். அதற்கேற்ற உடல். வழக்கமான தமிழ் பெண்களின் தோற்றம். ஆனால் அவள் நிறம் மட்டுமே அவளை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தியது. பளீரென்ற வெள்ளை நிறம். 

காலையில் இன்கேம் இன்கேம் காவலாவில் ஆரம்பித்து பேட்டோ ராப்பில் முடிய அதன் தொடர்ச்சியாக அவள் இசைப் புயலின் பாடல்களே கேட்டுக் கொண்டு இருந்தாள் ஹெட் செட்டில் .

தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே

பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே

கண்ணே கண்ணே காணாய் கண்ணே 

என்ற வரிகளில் அவள் உள்ளே ஏதோ பிசைந்தது.

அதே நேரம் டவுன் பஸ்சில் அவளின் பின்புறம் நின்று இருந்தவன், அவளைத் தகாத இடத்தில் தொட முயற்சி செய்ய, அதை உணர்ந்தவள் சட்டென்று, அவன் கையைப் பிடித்து முறுக்கி,

“பொறுக்கி ராஸ்கல் “ என்றபடி இரண்டு வெட்டுக்களில் அவனைக் கீழே தள்ளினாள்.

அந்த நேரம் அவளின் முகம் சிவந்து பார்ப்பதற்கு நெருப்பென நின்று இருந்தாள்.

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

தொடரும்!

Episode # 02

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.