(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா

En kathale

னிக்கும் நினைவுகள்.எத்தனை முறை அந்த காட்சியை என் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தேன்.இன்னமும் அவன் உள்ளங்கை வாசம் என்் கையில். அவன் விரல் தான் எத்தனை மென்மை.அவன் தீண்டல்தான் எத்தனை இனிமை.இது என்ன அவன் தீண்டுவது இப்போது தான் முதலா?.இல்லை. எங்கள் சந்திப்புகளில் சில தீண்டல்கள் உண்டு.அவை எதிர்பார் விதமாய் ஒரு விபத்தாய்.ஆனால் இது விபத்தல்ல.எங்கள் உள்ளங்கைகளில் நாங்கள் பறிமாறிக்கொண்டது இதயமா?அங்கு என்ன பேசினோம்.ஒரே வண்டியில் போவது பற்றி.இல்லையே வேறு ஏதோ.அவன் கூடவே வர சம்மதம் கேட்டான்.நான் சம்மதித்தேன்.கூணவே வர என்றால்?என்ன அர்ததம் அவன் கேட்டது.அது நிஜமா இல்லை என் கற்பனையா?இருக்காது .அவன் பார்வை நிஜம் அவன் தீண்டலில் உள்ள உஷ்ணம் நிஜம் அது சொல்லும் காதல் நிஜம்.

என் கற்பனையோ?என் மனத்தின் ப்ரதிபலிப்பை அவன் தீண்டலில் அவன் பார்வையில் ஏற்றி குழம்புகிறேனோ?.அவன் ஏன் சொல்லாமல் கொல்கிறான்.வாய்திறந்து காதல் சொல்லக்கூடாதா!இதிலும் அழுத்தமா?.இந்த குழப்பங்களூடே எங்கள் காற்று காக்கும பணி தொடரந்து கொணடிருந்தது.அதாங்க ஒரே வண்டியில் பயணம்.எங்கள் நெருககம் வளர எங்கள் அலுவலகமும் அருகே மாறியது.எங்கள் இடைவெளி குறைந்தது. எப்போதும் கைக்கோர்த்துக் கொண்டோம். சின்னதாய் சீண்டல்கள்,செல்லமாய் அடிகள்,காதல் பார்வைகள்,நெஞ்சு கடத்தும் அவன் புன்னகைகள். என் அகமும் புறமும் சிவந்த வெட்க நொடிகள்.நாட்கள் ஓடின.இனறு சொல்லி விட வேண்டும் கேட்டு விட வேண்டும் என்ற தவிப்பிலேயே இன்பம் நிறைந்தது.

எங்களுக்குள் சொல்லிக்கொள்ளாத காதல்நதி ஓடிககொண்டுதானிருந்தது.அவனாய் சொல்லும் வரை மௌனம் காக்க வைராக்கியம் கொண்டேன்.இடையே ஒரு நாள் நகைக்கடை கூட்டிச சென்றான்.

"கயல் உனக்கு ஒன்னு வாங்கிதர ஆசை.....இங்கே...உனக்கு எனன வேணடும்."

"என்ன கேட்டாலும் கிடைக்குமா?"

அவன் எதிர்பாரபும் புரிந்தது.என் மனவோட்டமும் அவனுக்கு புர்ந்தது.

"எது வேண்டும் கயல் கேளு..."காதல் பார்வை....எதையோ எதிர்பார்க்கும் நெஞ்சம்.நீ சொல்லாமல் நான் சொல்ல மாட்டேன் என்று எண்ணியவாறு,

"என்ன பட்ஜெட் என்ன மாதிரி"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"உனக்கு தெரிந்திருக்குமே.....எப்படியும் நீ தானே பின்னாடி பட்ஜெட் எல்லாம் பார்த்து மேனேஜ் பண்ணணும்"

"என்ன பட்ஜெட் என்ன மேனேஜ்"புரியாதவள் போல் கேட்டேன்

"அச்ச்சோ உங்களுக்கு ஒன்றும் புரியல.நம்பிட்டேன்.இப்போ வாங்க உங்களுக்கு ஏதாவது வாங்கலாம்"

அவன் பேசும் விதம் சிரிப்பை தர,மனதிலும் இதழிலும் புன்னகையோடு கடையை சுற்றி வந்தேன்.என் அறிவுஎன் அருகில் இருக்க மனம் நிறைந்திருந்தது.அதனால எதை வாங்குவது என்று புரியாமல் நின்றேன.

"அறிவு எனக்கு என்ன வாங்கனும் தெரியல..ஹேல்ப் மீ"

"கண்ணழகிக்கு நான் வாங்கிட்டேன் வா பில் போடலாம்"

உரிமையாய் என் கைப்பற்றி இழுத்துப்போனான்.அவன் வைத்த புதுப்பெயரும் அவன் செய்த செயலும் மயக்கம் தந்தது அவன் மீது.மலர்ந்து போனேன்.

பீச் போலாம் என அழைத்துச்சென்றான்.

காதலன் கையால் பரிசு வாங்க எந்த பெண்ணுக்கு தான் ஆசை இருக்காது.மிகுந்த எதிர்பார்புடன் அவனை கேட்டுக்கொண்டே இருந்தேன்.

"நீ என்ன எதிர்பார்கிற கயல்"சீண்டிப்பார்த்தான்.

"ப்ளீஸ் நீயே சொல்லிடு "வெட்கத்துடன் நான்.

"இரு...முதல்ல கண் மூடு.கால்களை நீட்டு"மணல் பரப்பில் என் கால் நீட்ட

என் பாதத்தில் அவன் ஸ்பரிசம்...சிலிர்ததது கொலுசு.

"ஐ கொலுசு"சிறுபிள்ளையாய் மகிழ்ந்தேன்.

"ம்ம்ம் உனக்கு கால்க்கட்டு போட்டுட்டேன் கயல்"குறும்பாய் சிரித்தான்.

"எப்படி டா(மகிழ்ச்சி உச்சத்தில் டா வந்தது)எனக்கு ரொம்ப புடிககும்"

என் ஒருமை அவன் இரசித்தான்.

"ம்ம்ம்ம தெரியும்.ஏய் கயல் இந்த கொலுசுக்கு ஒரு கவிதை இருககு சொல்லட்டுமா"

"யாரு வைரமுத்து?தாமரை?"

"அவங்க இல்ல இது புது ஆளு...சொல்லட்டுமா?"

"ம்ம்ம"

"கொலுசு...இது அணிகலன் அல்ல...கட்டிலில் உன தீண்டலில் என்னோடு சிணுங்கும் என் இன்னொரு குரல்"

அவன் குரலில் என் கவிதை. சிவந்து போனேன்.அவன் கண் பார்க்க முடியாமல் தலை கவிழ்நதுக்கொண்டேன்.

"கொலுசு வாஙகியாசசு அப்புறம்...."கிசுகிசுத்தான்...வெட்கம் மறைத்தவளாய்

"அப்புறம் என்ன அப்புறம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.