Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

னோஜ் அவளை உரசியபடி அமரவும், மஞ்சுவின் மனதில் அலையோடிய உணர்வுகளை விவரிப்பதுக் கடினம்!

சிலிர்த்தது...!

பிடித்திருந்தது...! இன்னும் நெருங்கி அமர மனம் விரும்பியது...

கூடவே சில்லென்ற உணர்வொன்றும் பரவியது...!

இத்தனை நாள் எந்த அந்நிய ஆடவனும் நுழைய அனுமதி கொடுத்திராத அவளின் virtual மன எல்லையை மீறும் உரிமையை ஒரே நாளில் மனோஜ் பெற்றிருப்பதை அவளும் உணரவே செய்தாள்...

தடைகளை உடைத்து நுழைபவன் மனோஜ் என்பதால் அவளுக்கு சந்தோஷமாகவும் இருந்தது...

ஆனால் பொதுவாக தன் மெல்லிய மன உணர்வுகளை வெளிக் காட்டாமல் இருந்தே பழகி இருந்ததால், இப்போதும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்...

அந்த முயற்சியில் தோற்றும் போனாள்!

அவனின் அருகாமை அவளினுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றங்கள்... வெட்கம் எனும் வடிவில்... அவளின் அழகிய வட்ட வடிவ முகத்தை சிவக்க வைத்தது...

அவளின் அருகே அமர்ந்த உடனேயே பேச்சை தொடங்காமல் அமைதியாக இருந்த மனோஜ்... ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து குனிந்து அவளின் முகத்தை பார்த்தான்...

எத்தனையோ நாட்கள் அவனின் தூக்கத்தை கெடுத்த அழகிய முகம், இப்போது அவனின் அருகே... வெகு அருகே... அவனுக்கு மட்டுமே உரிய உரிமையான நெருக்கத்தில்...

மனதினுள் இருந்த எத்தனையோ சலனங்கள், குழப்பங்கள் பின்னே செல்ல இமைக்காமல் அவளையே பார்த்து ரசித்தான்...

ஏற்கனவே அவனின் அருகாமையினால் அவளினுள் ஏற்பட்ட மாறுதல்களில் ஆழ்ந்திருந்த மஞ்சு, மனோஜின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் தவித்தாள்... தானாக அவளின் விழிகள் தழைந்தது...

“மஞ்சு...”

மனோஜின் குரல் வித்தியாசமாக ஒலித்தது...! இந்த அழைப்பில் தான் எத்தனை உரிமை.. எத்தனை நெருக்கம்...!

விழிகளை விரித்து அவனை பார்த்தாள்!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்படி ஒரு நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கவே இல்லை...”

“...”

“எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா...?”

“...”

“ஏன் அமைதியா இருக்க மஞ்சு? நான் பக்கத்தில இருக்கிறது அன்-கன்ஃபார்டபிலா இருக்கா?” கேட்டபடி விலகி அமர அவன் முயற்சிக்க,

“இல்ல... அதெல்லாம் இல்லை...” என்று அவசரமாக அவனை தடுத்தாள் மஞ்சு.

“தேங்க்ஸ்” சொன்னபடி அவளின் கையை பற்றிக் கொண்டான்...

அவனின் செய்கையை தடுக்காமல் அனுமதித்து, புன்னகையை பதிலாக கொடுத்தாள் மஞ்சு!

அவளின் உதடுகள் வளைந்த அழகில் மயங்கி போனவனின் கண்கள், மனதில் இருந்த காதலினால், ஆசையினால்... பளிச் பளிச் என்று மின்னியது...

அந்த விழிகளை எதிர் கொள்ள முடியாமல், மீண்டும் இமைகளை தழைத்துக் கொண்டாள் மஞ்சு...

“உன்னை பத்தி நினைக்கும் போதெல்லாம் நிலா தான் ஞாபகம் வரும்...”

“ஹுஹும்...”

“பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா...”

“ரொம்ப நல்லா பாடுறீங்களே...!!!???” ஆச்சர்யத்துடன் ஒலித்தது அவளின் குரல்...

“எல்லாம் உன்னால தான்... நீ என் மனசில வந்தப்புறம் தான் ப்ளாக் & வைட்டா இருந்த என் உலகம் கலர்ஃபுல்லா மாறிச்சு..."

"இந்த அரிய பெரிய டையலாக்கை சொல்ல தான் அவ்வளவு கஷ்டப் பட்டு என்னை இந்த காஸ்ட்லி கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களா?"

"நோ, நோ... என்னோட ஹாங்-ஓவரை சரி செய்ய தான் இந்த கல்யாணம்..."

எஸ்.எம்.எஸ்ல் சொன்னதை இப்போது நேராகவே அவன் சொல்ல... அவள் கன்னம் இன்னும் சிவந்தது... பதில் சொல்லாமல் சேலை நுனியை திருகினாள்...

அவளின் வெட்கம், முக சிவப்பு, நளினமான மாற்றங்கள் என அனைத்தும் அவனின் ஆசைக்கு தூபம் போட்டாலும், அவள் சொன்ன ‘காஸ்ட்லி’ பகுதி அவனை பாதித்தது!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எனவே மனதை கட்டுப்படுத்தி,

“அந்த பணம், நகை விஷயம் எனக்கே என்னவோ மாதிரி தான் இருக்கு மஞ்சு... சாதாரணமா நம்ம கல்யாணம் நடந்திருந்தா கட்டாயம் தடுத்திருப்பேன்... நான் அன்னைக்கு சொன்னது போல குழப்பங்களுக்கு நடுவே நடந்த கல்யாண பேச்சு... அதான்...”

‘ப்ச்... எனக்கு அப்போவும் பிடிக்கலை... இப்போவும் பிடிக்கலை... அதை பத்தி பேசாமல் விட்றுவோமே...”

“சரி... ஆனால் ஒன்னு... அந்த பணம் நகை இரண்டுமே உன் கிட்ட தான் இருக்கும்... அது உனக்கு தான்... சீக்கிரமே உன் பேருல ஒரு பாங்க் லாக்கர் அக்கவுன்ட் ஓபன் பண்ணி அதுல நகையை வச்சுட்டு, பணத்தை டெபாசிட் செய்யலாம்...”

மஞ்சு மீண்டும் நிமிர்ந்து மனோஜை பார்த்தாள்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]julie29 2019-01-29 23:10
sweet as a candy.

romantic and funny 😍😍

Loved it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Thanks Julie :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Anams 2019-01-29 16:33
Naanum sandaiyai expect seithen.
Then, what next?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Ethavathu yosippom Anams ;-) ;-) :P

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Shanthi S 2019-01-29 09:25
smooth ud babes.

@Thens not 2011ish more of 2013ish :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Haiyo ivangaluku romba theriyum :o :o :D

Inum unga mela urrrrrrrrrrr thaan

Thank you Shans.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Thenmozhi 2019-01-29 02:09
So sweet Binds :-)

Manoj - Manju super sweet :-)
Manoj Manjuku puriya vaika try seirathu, Manju vittu kodukurathu (y) (y)
Unga couples ellorume haa-nu namalai parka vaikuravanga ache.

Glimpses of Bindu of 2011-2015ish ;-) ;-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:41
re-kindling romance ;-)

Thank you Thens :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Valli 2019-01-28 21:04
very cute :lol:
MnM coversation, reactions cute.

I was expecting a fight :-) Money, sisternu ovvoru idathileyum itho start aaga poguthunu parthal, you trumped me :D

Very lighthearted, romantic epi (y) :clap: keep it going (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:40
:-)

Thank you Vals :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Apurva 2019-01-28 19:59
Cute ud dear.

Aniyayathuku heroine template break seithiruka :-)

I have one question.
Vaalila kurangu definition enna? Why thats special ? :roll:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:39
Special yennu kannadiyai parthu therinjukko :P :P :P

Thank you Apurva :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Vanaja 2019-01-28 15:38
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:39
Thank you Vanaja :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]AdharvJo 2019-01-28 14:59
:D lovely update ma'am :clap: :clap: wow sema Easy yaga patch-up aitangale :cool: Look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Aadharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-01-28 14:51
:clap: nice epi.interesting ah piguthu.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Sahithyaraj 2019-01-28 11:58
Super ud ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Sahithya :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

LD

PMM

IOK

NSS

IOKK2

NSS

NSS

EU

KAM

KET

TTM

PMME

NSS

NSS

THAA

KDR

NY

VIVA

IROL

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top