(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவி

Kaanaai kanne

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

தாரிணியின் குறும்பில் ப்ரித்விராஜ் மற்றும் அவன் தாயார் இருவரும் சிரித்தனர்,

“சரி சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.” என்றார்.

சாப்பிடும் போது “அண்ணா, இந்த தடவை எந்த ஊருக்குப் போறீங்க?”

“டீடைல்ஸ் இன்னும் வரலைடா. “

“அப்போ அதுக்குள்ளே சொல்லிடீங்க. “

“ஹ்ம்ம். எப்போ வேணாலும் கிளம்பற மாதிரி இருக்கும். கிளம்பற முன்னாடி சொன்னால் நீ உன் மூஞ்ச அங்க்ரி பர்ட் மாதிரி தூக்கி வச்சுப்பியே. அதான் முன்னாடியே சொல்லிட்டேன்.”

“இல்லாட்டா மட்டும் அவ மூஞ்சி ஐஸ்வர்யா ராய்க்கு தங்கச்சி மூஞ்சி மாதிரி இருக்குமா என்ன?” அவர்கள் அம்மா கவுன்ட்டர் கொடுக்க,

“ஹ.. அம்மா நீ ஐஸ்வர்யா ராய் அம்மா மாதிரி இருந்தா எனக்கும் அந்த மூஞ்சி வர வாய்ப்பு இருக்கும். நான் அங்க்ரி பர்ட்னா , நீங்க அதுக்கு அம்மா தானே” தாரிணியும் பதில் கொடுத்தாள்.

“ஆக மொத்தம் நம்ம குடும்பம் ஆண்ட்ரைடு குடும்பம்னு சொல்றீங்க.. ரொம்ப பெருமையா இருக்கு” ப்ரிதிவியும் அவர்கள் ஜோதியின் ஐக்கியமானான்.

“சரி சரி .. நம்ம குடும்ப ரகசியம் எல்லாம் வெளிலே லீக் அவுட் ஆகப் போகுது. “ என்று தாரிணி கூற மீண்டும் ஒரு சிரிப்பலை.

அப்போது “என்ன அங்கே சத்தம்?” என்ற குரல் கேட்க, டைனிங் டேபிள் அமைதி ஆகியது.

அங்கே அந்தக் குடும்பத்தின் தலைவர் ராஜேந்திரன் வருகை நடந்தேற, மற்றவர்கள் சாப்பிடும் வேலை மட்டுமே நடந்தது.

“என்ன சத்தம்ன்னு கேட்டேனே?” என்று மீண்டும் அவர் தன் மனைவி லக்ஷ்மியிடம் வினவ,

“நம்ம ப்ரித்விக்கு வெளியூர் போற வேலை ஒன்னு இருக்காம். கொஞ்ச நாள் தங்கணும் போல் இருக்கும்ன்னு சொல்லிட்டு இருந்தான்.”

“ஆமா. சொந்தத் தொழிலப் பார்க்க வர முடியாது. ஊர் வேலை எல்லாம் பார்க்கப் போறாராமா துரை. என்னிக்குத் தான் சொல் பேச்சு கேக்கப் போறானோ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பா, நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு நான் செய்யற வேலை தான் பிடிச்சு இருக்கு. இது எப்போ என்னாலே முடியாதுன்னு தோணுதோ, அப்போ வந்து உங்க தொழிலப் பார்த்துக்கறேன்.”

“அது வரைக்கும் உலகம் அப்படியே நின்னுக்குமாக்கும். நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டி அதிகமாகிட்டுப் போகுது. நீ வந்து சேரும் அன்னைக்கு தொழில் எங்க நிக்கும்னு யாருக்கும் தெரியாது?

“நான் வரும்போது எங்க நிக்குதோ அங்கிருந்து அதை முன்னுக்குக் கொண்டு வர முடியும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்”

“எல்லாத்துக்கும் பதில் ஒன்னு வச்சுக்கோ” என்றவர் “என்னிக்குத் துரை கிளம்பறீங்க?

“எப்போ வேணாலும் இருக்கும். இந்த முறை போய்ட்டு வரக் கொஞ்ச நாளாகும் அதான் முன்னாடியே சொல்லி வைக்கிறேன்” என்று ப்ரிதிவிராஜ் கூறவும்,

“ஹ்ம்ம். சரி. சரி” என்றவர், மிச்சத்தையும் சாப்பிட்டு எழுந்திருக்க, தாரிணி

“அண்ணா, நம்ம குடும்பம் மட்டும் எப்படி இந்த ஆண்ட்ராயிட் குடும்பமா இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன்?” என்றாள்

“என்ன கண்டுபிடிச்ச?

“ரோபோக்குப் பொறந்த நாம மினியான் மாதிரி தானே இருப்போம்? “ என, அவள் தலையில் தட்டினார் அவள் அம்மா.

“அம்மா, தலையில் கொட்டாத. அப்புறம் என்னோட மதர் போர்டு கரப்ட் ஆகிடும்”

“மதர் போர்டா?

“அதாம்மா. மூளை”

“ஹ. நீ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறன்னு எங்களுக்கு இப்படி எல்லாம் நிரூபிக்க வேண்டாம் தாயே. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று அவள் அண்ணன் அவளைக் கிளப்பினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(ஆதி) பிந்து வினோத்தின் "வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மீண்டும் அவள் “என்ன அங்கே சத்தம் ?” என, இப்போது தாரிணி

“பேசிட்டு இருக்கோம்பா” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினாள்.

ப்ரித்விராஜ் அப்பா ராஜேந்திரன் நல்ல பேரெடுத்த சிவில் காண்ட்ராக்டர். சொன்ன நேரத்திற்கு, தேவைக்கு ஏற்றவாறு பில்டிங் கட்டிக் கொடுப்பதால் அவருக்கு எப்போதும் பிசினஸ் இருந்தது. சிறு வயதில் இருந்தே கண்டிப்பிற்குப் பேர் போனவர். தொழிலில் கண்டிப்போடு , நாணயமாகவும் இருப்பவர். அதற்காக கஞ்சமோ, கருணை இல்லாதவரோ கிடையாது. உண்மை பேசுமிடத்தில், தாராளமாகவே நடந்து கொள்பவர்.

ஆனால் வீட்டில் கண்டிப்பு மட்டுமே. பிள்ளைகளிடம் நட்பாக பழகுவதை விட,  கண்டிப்புடன் இருப்பதே நல்லது என்ற மனநிலை கொண்டவர்.

அவருக்கு மகன் அவரோடு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் ப்ரித்விக்கோ அதிகமாக ஊர் சுற்றிப் பார்க்க ஆசை. அதை வெறுமனே செய்யாமல் ஒரு தொழிலாக செய்தால் பணமும் கிடைக்கும். அவனின் ஆசையும் நிறைவேறும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.