(Reading time: 10 - 20 minutes)

இதனால் இந்திய சுற்றுலாத் துறை அலுவலகத்தில் டீம் மேனேஜராக பணியாற்றுகிறான். குழுவாக பயணிப்பவர்களுக்கு டிக்கெட், தங்கும் வசதி, சுற்றிப் பார்க்கும் இடங்கள், அதற்குக் கைடு என்று எல்லா வசதியும் செய்து தரவேண்டிய வேலை. இவனுக்கு கீழ் ஒரு குழுவாக செயல்படுவார்கள். அதிலும் கல்விச் சுற்றுலா இவர்களின் முக்கியப் பொறுப்பு.

தன் வீட்டில் சொன்னது போல், அவனுக்கு இப்போது அகில இந்திய அளவில் ஒரு சுற்றுலாவிற்கு பொறுப்பேற்கும் வேலை வந்து இருக்கிறது. அதைப் பற்றிய முழு விவரம் பிரான்ச் மேனேஜர் இன்னும் முடிவாகவில்லை என்று கூறி இருக்கிறார்.

கிருத்திகா வீட்டில் அவள் பெரியப்பா, அப்பா இருவரும் அந்த அரசியல்வாதி மகனை ஜெயிலில் தள்ளியதைப் பற்றிக் கவலைப் படவில்லை என்றாலும், அவள் அம்மாவிற்கு உள்ளூர பயமாக இருந்தது.

அதற்காக அவர் தன் மகளை கண்டிக்கா விட்டாலும், அவளிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு வாய்ப்புக் கிடைக்கும் போது எல்லாம் எச்சார்த்திக் கொண்டு இருந்தார்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த கிருத்திகா,

“என்னம்மா, வீடு ஒரே சைலென்ட்டா இருக்கு. எங்கே மாற்றான் பிரதர்ஸ்? “ என்று கேட்டாள்.

“அடிங்க. உனக்கு வர வர வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. “

“உனக்குத் தெரியாதா ? இப்போ என் வாய்க்கு எக்ஸ்ட்ரா ஆபர் போட்ருக்கேன். ஜியோலே கூட டெய்லி 2 GB டேட்டா தான். நான் அன்லிமிடெட் டேட்டா ஆபர் போட்ருக்கேன்”

இவள் வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கும் போதே அவள் அப்பாவும், பெரியப்பாவும் வந்து விட, சற்று அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

எல்லோரும் சிற்றுண்டி முடித்ததும், கிருத்திகாவின் படிப்பைப் பற்றிக் கேட்க, அவள் திரு திருவென்று முழித்தாள்.

அவள் பெரிய பிளான் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆரம்பிச்ச இன்ஜினியரிங் ஒழுங்கா முடிப்போம் என்பதே அவள் எண்ணம்.

மேற்படிப்பு இங்கேயா, வெளிநாட்டிலா என்று அண்ணனும் தம்பியும் விவாதிக்க,

“ஹலோ.. அப்பரசண்டீகளா.. படிக்கப் போறது நானு. எங்கிட்ட கேளுங்க. இருக்கிற படிப்ப முடிக்கவே உம்பாடு, எம்பாடு ஆகிட்டு இருக்க, இவங்க வெளிநாடுன்னு பேசறாங்களே. கொஞ்சமாவது நியாயம் தர்மம் வேண்டாமாயா? என்று அவளின் மைன்ட் வாய்ஸ் பேசியது.

“என்னம்மா சொல்ற?” என்று அவள் பெரியப்பா கேட்க, கிருத்திகா திரு திரு என்று முழித்தாள்.

சற்று அதிருப்தியுடன் “ முக்கியமா பேசிட்டு இருக்கும் போது உன் கவனம் எங்கே போச்சு?

“அது வந்து.. “ என்று தடுமாறியவள், “எங்க காலேஜ்லே எஜுகேஷன் டூர் கூட்டிட்டுப் போறதா சொல்லிருக்காங்க. நான் உங்கள கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டேன் பெரியப்பா”

“ஹ்ம்ம். குட்” என்றவர் “உனக்கு அவ்ளோ ஆசையா அந்தச் சுற்றுலா போக?

“ஆமாமா பெரியப்பா.

“எந்த ஊர்? எப்படிப் போகப் போறீங்க? தங்கற இடம் பற்றிய விவரம் எல்லாம் சொல்லு.

“இது மொகலாய கட்டிடக் கலைன்னு ப்ராஜெக்ட் மாதிரி எடுத்து அதை எல்லாம் சுற்றிப் பார்க்கப் போறோம். எங்கே என்னனு முழு விவரம் தெரியலை. எங்க பேட்ச் எல்லாம் கண்டிப்பா போகணும்.”

“சரி சரி. இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோ. நான் பதில் சொல்றேன்” என்று விட்டுச் சென்று விட்டார்.

“உனக்கு எப்படி கல்விச் சுற்றுலா எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சது?

“யார் சொன்னா பிடிக்கும்னு? எனக்கு அது ஒரு ப்ராஜெக்ட். அதோட உன்னோட சாப்பாடு தொல்லையில் இருந்து கொஞ்ச நாளைக்கு எனக்கு லீவ் வேணும் அதான்.

“அது சரி. நீ போறே இடத்தில் எல்லாம் உனக்கு யாரு பொங்கிப் போடுவான்னு நானும் பார்க்கத் தானே போறேன்.

“ஹ. அதுக்கு எல்லாம் எங்க காலேஜ் தனி ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க. அவங்க எதுலேடா மிச்சம் பிடிக்கலாம்னு பார்த்துக் கிட்டு இருக்காங்க. பத்து இடத்துலே கொடேஷன் வாங்கி, அதில் ஐஞ்ச வடிக்கட்டி, மிச்ச ஐஞ்சு கம்பெனி கிட்டே பேரம் பேசிட்டு இருக்காங்க

“அதானே, இவங்க கைகாசப் போடணும்னா, லட்சம் யோசனை வரும். அதே நம்மகிட்டேர்ந்து வரணும்னா மட்டும் கண்டிஷன் போடுவாங்க” என்றவர், “யாரு ரேஸ்லே முன்னாடி இருக்கா?” என்று கேட்டார்.

“நான் கேள்விப்பட்ட வரையில், இந்திய சுற்றுலா துறையின் தமிழ் நாடு சுற்றுலா அலுவலகமதான் இருக்கும்.

“ஹ்ம்ம். அங்கே எல்லாம் நல்ல சாப்பாடு கிடைகுமாடி”

“மம்மி, உன் சாப்பாடே நாங்க சாப்பிடும் போது, அதை விடவா மோசமாகவா இருக்கப் போகுது?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உன்னை.. நைட் சாப்பிட இங்கே தான் வரணும்”

“நோமா.”

“ஏன், சாப்பிடப் போறதில்லையா? ஹப்பா. எனக்கு ஒரு படிச் சோறு மிச்சம்”

“அச்சோ.. ராங் கால்குலேஷன் மம்மி. நான் அந்த ஒரு படிச் சோறும் உங்கள மேலே எடுத்துட்டு வரச் சொன்னேன்.

அவர் அடிக்க வரும்முன் தன் அறைக்கு ஓட்டம் எடுத்தாள் கிருத்திகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.