(Reading time: 10 - 20 minutes)

கிருத்திகா கடைசி வருடம் ஆர்கிடெக்ட் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

அவளுடைய கல்லூரியில் வருடம் ஒரு முறை கடைசி வருட மாணவர்களை இதே போல் கல்விச் சுற்றுலா அழைத்துப் போவது வழக்கம்.

அன்று இரவு தூங்கும் போது அவளுக்குச் சில தினங்களாகத் தோன்றும் அதே கனவு இன்றும் வந்தது. அவள் அன்றைக்கு அந்த அரசியல்வாதி மகனைக் கீழே தள்ளியது போல் , யாரோ ஒருவரைக் கீழே தள்ளுகிறாள். இன்றைக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவளின் உடை ஒரு ராஜகுமாரி உடையை ஒத்து இருந்தது. அந்த உடையின் மேற்புறம், அவள் முகத்தை மறைக்கும் சல்லாத் துணியால் இருந்தது.

அந்தக் கண்கள் தீபிழம்பாக சிவந்து இருக்க, அவளின் கைகளிலோ நீளமான வாள் இருந்தது. அது கீழே தள்ளியவளின் கழுத்தில் குறை வைக்கப் பட்டு இருந்தது.

கீழே விழுந்தவனின் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாத கல் போன்று இருக்க, அவனும் பார்க்க ஒரு அரசர் போல் தான் இருந்தான். அவனின் முகத்தைப் உற்றுப் பார்க்க கனவிலேயே முயல, அந்தோ பரிதாபம் .. கனவு கலைந்து விட்டது.

“ச்சே..” என்று எழுந்து சுற்றுமுற்றும் பார்க்க, அவள் அறையில் இருப்பது தெரிந்தது.

ப்ரிதிவிராஜை அவன் உயரதிகாரி அழைப்பதைக் கூற, அவன் அவர் அறைக்குச் சென்றான்.

“மிஸ்டர் ப்ரித்வி. அந்த இன்ஜினியரிங் கல்லூரி சுற்றுலா காண்ட்ராக்ட் நமக்குக் கிடைத்து விட்டது. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“குட் டு நோ சார். “

“நீங்க தான் இந்த ப்ராஜெக்ட் எடுத்துகறீங்க. அவங்களோட பட்ஜெட் கொடுத்துட்டாங்க. நீங்க அதுக்குள்ளே எவ்ளோ பெஸ்ட்டா பண்ண முயற்சி பண்ணுங்க மிஸ்டர் ப்ரித்வி.”

“ஷ்யூர் சார். என்னால் முடிந்த பெஸ்ட் கொடுக்கறேன்” என்று கூறிவிட்டு அவரிடத்தில் இருந்த டிடைல்ஸ் வாங்கிச் சென்றான்.

தன் அறைக்கு வந்த பின் அவனுக்கு ஒரு போன்கால் வர , அதை எடுத்துப் பேசியவனின் முகம் யோசனைக்குத் தாவியது.

சற்று நேரத்திகுப் பின் தெளிந்தவனாக, மீண்டும் அந்த டெலிபோன் நபரிடம் பேசி உறுதி செய்து விட்டுத் தன் வேலையைச் செய்தான்.

ஹாய் பிரெண்ட்ஸ். இந்தப் புதியத் தொடருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. போட்டிக்கான க்ளு போன வாரத்தில் கமெண்ட் செக்ஷனிலும், இந்த வார அப்டேடிலும் இருக்கிறது பிரெண்ட்ஸ். இன்னும் எட்டு நாட்களே இருக்கிறது. கலந்து கொண்டு பரிசு பெற வாழ்த்துக்கள்

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

தொடரும்!

Episode # 02

Episode # 04

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.