(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 45 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

மாப்பிள்ளை வீட்டார் அபாண்டமாக பேசிவிட்டு சென்றிருந்தாலும், அதற்காக அருள்மொழியைப் பற்றி அப்படியெல்லாம் பேச அவர்களுக்கு அவசியம் இல்லையே, அருளின் அத்தைக்கு  பொறாமை என்றாலும் அவர்கள் இங்கு வரும் வரை காத்திருந்து இப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும் என்பதில்லையே, அருள்மொழி  விஷயத்தில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். அதை தான் அவர்கள் அதிகப்படியாக பேசியிருக்க வேண்டும் என்பது தான் உண்மை. ஆனால் அது என்னவாக இருக்கும் என்று தான் தெரியவில்லை.

ஒருப்பக்கம் அவளை  தொடர்புக் கொள்ளவும் முடியவில்லை. அப்படியென்றால் அவள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளா? என்ற குழப்பமும் இருந்தது. அவளுக்கு என்ன பிரச்சனை என்று எப்படி தெரிந்துக் கொள்வது என்று யோசிக்கும் போது, கண்டிப்பாக இலக்கியாவிடம் உண்மையை சொல்லிவிட்டுச் சென்றிருப்பாள் என்று தோன்றவே,

“இலக்கியா உண்மையிலேயே அருள் எங்கப் போயிருக்கா சொல்லு.. கண்டிப்பா அவ உன்கிட்ட சொல்லிட்டு போயிருப்பா..” என்று மகி அவளிடம் கேட்டான்.

இலக்கியாவிற்குமே அருள் இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை என்பதாலும், மாப்பிள்ளை வீட்டில் யாரோ  ஆணோடு அவள் இருக்கிறாள் என்று சொன்னதாலும் இதற்கு மேலும் உண்மையை மறைத்து விடக் கூடாது என்று தோன்றியதால்,

“அருள் அவளோட ப்ரண்ட் வீட்டுக்கு போல மகி அண்ணா.. அவ சார்லஸோட போயிருக்கா.. ஆனா சும்மா இல்ல, வேலை விஷயத்துல அவங்களுக்கு ஹெல்ப் செய்ய..” என்று உண்மையை கூறிவிட்டாள்.

“என்ன அமுதன் கூட போயிருக்காளா?” என்று மகி அதிர்ச்சியாக கேட்க,

“அமுதனுக்கு இவ உதவ போயிருக்காளா? ஆனா அதுக்கு அவசியம் என்ன? அவனுக்கு தெரியாததா நம்ம அருளுக்கு தெரிஞ்சிட போகுது..” என்று கதிரவன் அமுதனை பற்றி தெரிந்தவராக கேட்டார்.

“அது.. நாங்க ரெண்டுப்பேரும் அவங்கக்கிட்ட தானே இண்டர்ன்ஷிப் செஞ்சோம்.. அப்போ அருள் அவங்க ப்ராஜக்ட்க்கு ரொம்பவே ஹெல்ப்பா இருந்திருக்கா..நிறையவே உதவி செஞ்சுருக்கா.. அதனால தான் சார்லஸ் அருள்க்கிட்ட ஹெல்ப் கேட்டாரு.. அதான் அவளும் போயிருக்கா..” என்று அவள் விளக்கம் கொடுத்ததும்,

“சரி எதுக்கு பொய் சொல்லிட்டு போகணும்.. அமுதன் தம்பிக்கூட போகப் போறேன்னு சொன்னா நாம வேண்டாம்னா சொல்லப் போறோம்..” என்று பூங்கொடி கேட்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது கலை அத்தை அனுப்ப மாட்டாங்கன்னு நினைச்சு தான் அருள் இப்படி செஞ்சிருக்கா..” என்று இலக்கியாவும் கூறினாள்.

இத்தனையும் கேட்டு கலை அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“அருளை அமுதன் கூட தான் அந்த பொம்பளை பார்த்திருக்கணும்.. அதை தான் மாப்பிள்ளை வீட்ல கதைக்கட்டி விட்டிருக்காங்க..” என்று மகி கூறவும்,

“சரி அருள் அமுதன் கூட போயிருக்கா.. அதை அருள் அத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. எல்லாம் சரி தான், ஆனா அவ ஏன் இன்னும் காணோம்.. அவளுக்கு இன்னைக்கு பொண்ணுப் பார்க்க வராங்கன்னு தெரியும் தானே.. அப்படியிருந்தும் அவ இன்னும் காணும்னா அவளுக்கு ஏதோ பிரச்சனை தானே..” என்று புகழேந்தி கேட்டார்.

“இருங்க நான் அமுதனுக்கு போன் செஞ்சு பார்க்கிறேன்..” என்றவன் அமுதனது அலைபேசிக்கு முயற்சிக்க, அவனையும் தொடர்புக் கொள்ள முடியாமல் போனது.

“அவ அப்பவே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா.. ஆனா கலை கேட்கவே இல்லை.. அதான் அவங்க வர நேரம் இங்க இருக்க வேண்டாம்னு இப்படி சொல்லாம கொள்ளாம போயிட்டாளோ என்னவோ..” என்று பாட்டி வேறு சந்தேகத்தை கிளப்பினார்.

“அத்தை நம்ம அருள் அப்படிப்பட்ட பொண்ணுல்லாம் கிடையாது.. உண்மையா அமுதன் தம்பிக்கு உதவ தான் போயிருப்பா.. உங்க பையன் சொல்றது போல போன இடத்துல ஏதாவது பிரச்சனையா கூட இருக்கலாம்..” என்ற பூங்கொடி,

“இலக்கியா.. அருள் எந்த இடத்துக்கு போறேன்னு உன்கிட்டசொன்னாளா?”  என்று அவளிடம் கேட்டார்.

“அது ஈ.சி.ஆர்ல ஒரு ரெசார்ட்னு சொன்னா.. அவ்வளவு தான் எனக்கு தெரியும் பெரியம்மா..” என்று அவள் தயங்கியப்படி கூறினாள்.

“வெறும் மொட்டையா ஈ.சி.ஆர் னா சொல்லிட்டு போனா.. திருவான்மியூர்ல இருந்து பாண்டிச்சேரி வரை ஈ.சி.ஆர் தான், இதுல எங்க போயிருக்கான்னு நாம தெரிஞ்சிக்கிறது..” என்று கேட்ட அறிவு,

“திருவான்மியூர்ல நிறைய ட்ராஃபிக்கா இருக்கும் மகி.. அதனால ஒருவேலை லேட்டாகுதா?” என்றுக் கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்படியும் இருக்கலாம்.. ஆனா அப்படித்தான் இருக்கும்னு நம்பிக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. எந்த ஏரியா, இல்ல எந்த ரெசார்ட்னு தெரிஞ்சா கூட நாம விடாரிக்கலாம்.. ஆனா மொட்டையா எப்படி விசாரிக்கிறது..” என்று மகி யோசிக்கவும்,

“அருள் இப்படி பொறுப்பில்லாம நடந்துப்பான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.. சொல்லாம போனதே தப்பு, இதுல ஏதாச்சும் பிரச்சனைன்னா நமக்கு சொல்லணும்னு கூடவா தெரியாது..” என்று எழில் கூறினாள்.

“ஏதாச்சும் பேச முடியாத சூழ்நிலையா கூட இருக்கலாமில்ல எழில்.. ஆனா அனாவசியமா பயப்பட வேண்டாம்னு தான் சொல்லுவேன்.. அவ அமுதன் கூட இருக்கறது தான் நமக்கு தெரிஞ்சிடுச்சுல்ல.. அமுதன் பொறுப்பான பையன் தான், பத்திரமா அருளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவான்..” என்று கதிர் தான் கொஞ்சம் தைரியமாக பேசினார்.

“மாமா சொல்றதும் சரி தான்.. அமுதன் கூட இருக்கப்போ நாம பயப்பட அவசியமில்லன்னு தான் எனக்கும் தோனுது..” என்று மகியும் அதை ஆமோதித்தான்.

அதில் அனைவரும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்திருக்க, அந்த நேரம் அமுதனிடமிருந்து மகிக்கு அழைப்பு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.