(Reading time: 7 - 13 minutes)

உண்மையில் அந்நொடி கீதாஞ்சிலியின் நிலைக்கண்டு ஏனோ பரிதாபமே எழுந்தது அனைவருக்கும்..!!

திரண்டு வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “த..ரண்.. தாரிகை.. என்ன அழிச்சாட்டியம் இது..?? எல்லாரும் எப்படி பயப்படறாங்க பாரு.. கதவைத்திற முதல்ல..”, குரலடைத்தபோதும் திடமாகவே வந்து விழுந்தன வார்த்தைகள்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவ்வளவுதான்..!! கதவிற்குப் பின்னால் அத்தனை நேரம் கதகளியாடிக்கொண்டிருந்த சத்தங்கள் யாவும் நின்றுதான் போனது..!! பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே.. அதுபோல் அப்படியொரு அமைதி அந்த இடத்தில்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“தாருக்கா..”, மௌனங்கள் பிடிக்காமல் வெளியிலிருந்தபடி நிஷா அழைத்திட.. உட்புறம் இருந்தவளின் முகம் ஆயிரமாயிரம் வர்ணங்களைப் பூசிக்கொண்டிருந்தது..!! தாயின் எதிர்ப்பார்த்திடா குரலில் அவளின் மனதானது என்ன உணர்கிறதென்றே புரிந்திடவில்லை..!! புதிதாய் அன்று மலர்ந்ததுபோல் மனமானது துள்ளி குதித்திட.. பனிமலையில் செதுக்கிய சிற்பமாய் மகிழ்ச்சிக்குவியலில் உறைந்துதான் போனாள் தாரிகை..!!

தடகளத்தில் ஓடும் வீராங்கனையாய் முகம் முழுவதிலும் பூரிப்பை நிறைத்தப்படி கதவைத் திறந்திட.. அவளது முகத்தில் தோன்றிய அந்த ஜாலங்களில் நெகிழ்ந்துபோக.. அவளது கேசத்தைக் கலைத்துவிட்ட கீதாஞ்சலி தனது குழந்தைக்கு ஒன்றும் நேரவில்லை என்று அறிந்தவராக சட்டென இடத்தைவிட்டு நீங்கியிருந்தார்..!! உடனே பெண்ணின் வதனம் சுருங்கிப்போனாலும் அன்னையின் செயலில் அவளுக்கு மகிழ்ச்சியே..!! என்னவோ அதுநாள் வரையில் மனதில் போட்டு அழுத்தியபடியிருந்த பாரங்கள் எல்லாம் கலந்து புதியதொரு தெளிவு வந்ததுபோல்..!!

தாரிகை அறையில் தன்னை புதைத்துக்கொண்ட அந்த நாளிற்குப் பிறகு அனைவரின் கவனமும் அவள் மீதே.. அதில் அக்கறை.. பாசம்.. பயம்.. கவலை.. என அனைத்தும் கலந்த கலவையே..!!

குட்டையில் தேங்கிக்கிடக்கும் நீராய் தாரிகையின் வாழ்கை எங்கும் நகர்ந்திடாமல் அப்படியே தேங்கிக்கிடந்தது..!! அவளைக் கடந்து செல்லும் நொடிகளும் நிமிடங்களும் அவளது மனதை  எழுந்துசெல் என்பதாய் உந்தித்தள்ளியபொழுதும் அவள் தனது சிந்தையிலிருந்து மீளாது அலைந்துகொண்டிருந்தாள்..!!

கீதாஞ்சலி முதற்கொண்டு வீட்டினர் அனைவரும் அவளையேத்தான் கடந்த ஒரு மாதமாக கவனித்தபடியிருந்தனர்..!! அவளது மௌனங்களும்.. குருவிக்கூட்டிற்குள் ஒளிந்து மறைந்து வாழ்வதுபோல் அவள் செய்யும் செயல்களும் கவலையையே உருவாக்குவதாய்..!! அதிலும் கடந்த வாரத்தில் ஒருநாள் அவள் செய்துவைத்த வேலை..!! நினைத்தாலே அத்தனை பயம்கொள்ள வைப்பதாய்..!!

வணக்கம் தோழமைகளே..

சிஸ்டம் கொஞ்சம் ப்ராப்ளெம்.. சோ மொபைல் டைப்பிங்.. இதுக்கு மேல டைப் செய்ய முடியவில்லை.. மன்னிச்சு..

நன்றி..!!   

உருவெடுப்பாள்..

Episode # 26

Episode # 28

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.