(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 04 - தேவி

Kaanaai kanne

**** Contest Results Alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது. வெற்றிப் பெற்றவர் யார் என்பதை படிக்கத் தவறாதீர்கள் ***

ப்ரித்விக்கு டூர் ப்ரோக்ராம் முடிவான உடன், தன் வீட்டினரிடம் பேசினான். இரவு உணவு வேளையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து கொண்டு இருக்கும்போது ,

“அம்மா, அடுத்த வாரம் டூர் ப்ரோக்ராம் முடிவாயிடுச்சு. இந்த முறை காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் ஸ்டடி டூர் வராங்க.”

தாரிணி அவள் அப்பா இருப்பதை மறந்து

“வாவ்.. அண்ணா, அப்போ செம என்ஜாய் தான் உனக்கு. எத்தனை கேர்ள்ஸ் வராங்க?” என்று கேட்க,

ப்ரித்வியும் வேகமாக “ஆமாடா .. தாரிணி.  இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் வராங்க. “ என்றான்.

“அவங்க காலேஜ்லேர்ந்து ப்ரோபாசர்ஸ் யாரும் வரலையா?

“ரெண்டு பேர் வராங்க”

“அப்போ உன்னை மாதிரி ரவுடி பேபி எல்லாம் அலோவ் பண்ண மாட்டாங்களே. “

“ஹ. ஹ. அது நீதான் ரவுடி பேபி. மீ கிரீன் சேன்டு யூ க்நொவ் ?

“அப்படிதான் சில்சீ போலில் சொல்லிகிட்டாங்க.”

“சில்சீயா அது என்ன?

“அது எல்லாம் எங்களை மாதிரி யூத் அண்ட் யங்கிற்கு மட்டுமே தெரியும்.”

“ஒ.. நீ எல்லாம் இன்னும் கிண்டர் கார்டனே பாஸ் பண்ணலை. அதுக்குள்ளே நானும் யூத்ன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு இருக்க?

“போடாங்க.. “ என்னும்போதே, அவள் அப்பாவின்

“ஏய்.. என்ன அண்ணன வாடா போடான்னு சொல்லிட்டு இருக்க?” என்ற குரல் கேட்கவும், இருவரும் அவசரமாக தட்டை நோக்கிக் குனிந்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு “அது என்ன கேர்ல்ஸ் வந்தா மட்டும் உங்கண்ணன் சைட் அடிக்கப் போறனா? அவன் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டான்மா” என்று கூற,

இதுவரைக்கும் அவர் அப்படிப் பேசி பார்த்திராத இருவருக்கும் மயக்கம் போடாத குறை தான்.

“அப்பா , உங்களுக்கு எப்படி இந்த டயலாக் எல்லாம் தெரியும்?” என்று மகள் கேட்க,

“ஆமாம். இது பெரிய கம்பசூத்திரமா என்ன? டிவிலே பட்டிமன்றம் ஆரம்பிச்சு, காமெடி ப்ரோகிராம் வரைக்கும் இது தான சொல்லிக்கிட்டு இருக்காங்க” என்றார்.

“நீங்க எப்போ டிவி பார்பீங்க?

“காலையில் எழுந்ததும் பேப்பர் பார்த்துட்டு, நியூஸ் பார்ப்பேன். சைட்டுக்கு ஆள் எல்லாம் பத்து மணிக்குத் தானே வருவாங்க. நீங்க எல்லாம் கிளம்பின பிறகு கொஞ்ச நேரம் டிவி பார்பேன். காலையில் கொஞ்சம் சிரிச்சுட்டுப் போலாமேன்னு காமெடி சேனல் தான் போடுவேன். “

“அப்பா. எங்கியோ போயிட்டீங்க” என்று இருவரும் கூறவும், அவரும் வெட்கம் கலந்த சிரிப்பு சிரித்தார்.

பின், “ப்ரித்வி என்னவோ சொல்ல வந்தியே? “ என்று கேட்க,

“ஆமாமா. இந்த வாலு கூட பேச ஆரம்பிச்சா, என்ன சொல்ல வந்தோம்னே மறந்துரும் “ என்று சொல்லிவிட்டு “அப்பா, அடுத்த வாரக் கடைசியில் அந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் கூட டூர் போறேன்பா. வர எப்படியும் ஒரு மாசம் ஆகிடும்” என்று கூறினான்.

“எந்த எந்த ஊர் போறீங்க?

“ஸ்டுடென்ட்ஸ்க்கு இது ஜாலி டூர் என்றாலும், காலேஜ் பொறுத்தவரை இது ஸ்டடி டூர். சோ அவங்க பிளான் என்னனா மொகல்ஸ் , ராஜ்புத்ராஸ் இவங்களோட கட்டிடக் கலை ஸ்டுடென்ட்ஸ்க்கு சுத்திக் காமிக்கணும். சேம்டைம் போரடிக்காம இருக்கணும். சோ எந்தெந்த ஊர் என்பதை நாங்கதான் வொர்க்அவுட் பண்ணி அவங்களுக்குச் சொல்லனும்”

“ஹ்ம்ம். எல்லாம் சரிதான். இந்த வேலைய விட்டுட்டு நம்ம பிசினஸ் பாருன்னு சொல்றேன். கேட்க மாட்டேன்னு சாதிக்கிற”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்பா ஒரே உரையிலே ரெண்டு கத்தி இருந்தா சரியா வராதுபா. நீங்க பாருங்க. உங்களுக்கு எப்போ முடியலைன்னு தோணுதோ அப்போ நான் பார்த்துக்கறேன். அதுவரைக்கும் என்னை விட்டுடுங்களேன்.”

பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்த ராஜேந்திரன், தன் அறைக்குச் சென்று விட, அதுவரை இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவன் அம்மா,

“டேய் .. உங்க ரெண்டு பேரோட மல்லுக் கட்டி எனக்கு போரடிச்சு போச்சு. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோயேன். அட்லீஸ்ட் உங்க மூஞ்சி எல்லாம் மறந்து புது முகம் கூட சண்டை போடறேனே” என்று கூறினார்.

“என்னது புது முகமா?” அண்ணா, தங்கை இருவரும் முழித்தனர்.

“ஆமாம்டா.. சீரியல் எல்லாம் மூணு வருஷத்துக்கு எடுக்கிறாங்க. அதுக்குள்ளே அதிலே நடிச்சுட்டு இருக்கிற பாதி பேர் கல்யாணமாகிப் போயிடறாங்க.. இல்லையா தற்கொலை செய்துக்கறாங்க. ப்ரோட்யுசெர் இவருக்குப் பதில் இவர்ன்னு போட்டுட்டு சீரியல் கண்டின்யு பண்ணிட்டு இருக்காங்க. அது மாதிரி உங்க ரெண்டு பேருக்குப் பதில் வர மருமக கூட சண்டை போடுறேனே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.