(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

நாட்கள் வருடங்களாய் நகர்ந்தோட மதுமிதா ஸ்ரீகாந்தின் மகள் ஐஷுவிற்கு மூன்று வயதாகியிருந்தது.அதிகாலையிலேயே ஸ்ரீகாந்தை எழுப்புவதற்கு பாடுபட்டுக் கொண்டிருந்தாள் மது.

“ஏண்டி சண்டே கூட மனுஷன தூங்கவிடாம டார்ச்ர் பண்ற..”

“ஸ்ரீகா கொஞ்சமும் பொறுப்பே இல்லையா உனக்கு..அட்மிஷன் ஷார்ப் 6 மணிக்கு ஓபன் பண்ணிடுவாங்க..பத்து நிமிஷம் தானாம் 500 அப்ளிகேஷன்ஸ்..நானே நல்ல படியா சீட் வாங்கனும்னு இருக்குற எல்லா கடவுளையும் வேண்டிட்டு இருக்கேன்.”

“இதுதான் டீ கலிகாலம் எல்கேஜி சீட்க்கு இத்தனை அலப்பறை ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்.என் பொண்ணு இப்போதான் ஒழுங்கா நடக்கவே ஆரம்பிச்சுருக்கா..”

“ம்ம் அப்போ நீ ஃபாரின்ல போய் செட்டில் ஆயிருக்கனும் இங்க இருக்கும்போது ஊரோட தான ஒத்து வாழணும்.காலையிலேயே ஆரம்பிக்காத அப்பாவையும் உன் தங்கச்சியும் எழுப்பி விடணும்.மூணு பேரு ட்ரை பண்ணாதான் ஒருத்தருக்காவது கிடைக்கும்.போ ஸ்ரீகா போய் லேப்டாப் ஆன் பண்ணு..”

“போறேன் போறேன் கத்தாத..”

ஆறு மணி ஆனவுடன் ஸ்ரீகாந்த் பள்ளி வலைத்தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து முடித்து சமர்பிக்கச் சென்ற நேரம் சைட் டவுண் என்று மெசெஜ் வர அவ்வளவு தான் மது அழாத குறையாக பதற ஆரம்பித்துவிட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்ன முயற்சி செய்தும் ஒன்றும் பலனில்லாமல் போக ஸ்ரீகாந்திற்கு அர்ச்சனைகளை வாரி வழங்கிவாறே மொபைலை எடுத்து தன் அப்பாவை அழைத்தாள்.அவர் நல்லபடியாய் முடித்துவிட்டதாய் கூறிய பின்பே மதுவிற்கு போன உயிர் திரும்பி வந்தது.

அதன் பின் இன்டர்வீயூ பீஸ் எல்லாம் முடிக்கும் வரையுமே இருவரும் ஒரு வழியாகி விட்டனர்.அதைவிட மற்ற பள்ளிகளின் பீஸ் அமௌண்டை கேட்டு ஸ்ரீகாந்திற்கு தலையே சுற்றிவிடும் போல் இருந்தது.

“மது என்னடி எல்கேஜி கே லட்சத்தை தொடுது பீஸ்??”

“ம்ம் பின்ன பாதிக்கு மேல படிப்பெல்லாம் வியாபாரமாகி ரொம்ப காலம் ஆச்சு.அட்மிஷன் போடுறதுக்கு அத்தனை சலிச்சுகிட்டியே?நம்ம ஏரியாலேயே கம்மியான பீஸ் அண்ட் நல்ல எஜுகேஷன் இந்த ஸ்கூல்ல தான்..அதுமட்டுமில்லாம வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கு.

இதைவிட்டுட்டு எங்கேயோ ஸ்கூல்ல சேர்த்து பச்சை குழந்தையை வேன் ஆட்டோனு அனுப்ப சொல்றியா..”

“என்ன இருந்தாலும் உன் அளவு எல்லாம் நா யோசிக்க மாட்டேன் மது..நீ எது பண்ணாலும் கரெக்ட்டா தான் இருக்கும்.இருந்தாலும் இந்த பிஞ்சு குழந்தைக்கு புக்ஸ் யூனிபார்ம் ஹோம்வொர்க்னு நினைச்சா தாங்கிக்கவே முடில.”

“ஐயா சாமி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க..போங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க.”

முதல் நாள் பள்ளி, குழந்தையை விடவும் பெற்றவர்கள் தான் பதட்டமாய் பாவமாய் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தனர்.ஆரம்பித்தாயிற்று வாழ்க்கைக்கான ஓட்டம் மூன்று வயதிலேயே!!

நாட்கள் அதன் போக்கில் நகரத் தொடங்கியிருக்க ஒரு நாள் மதுவிற்கு புது நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்து பேசியவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. அழைப்பை பேசி முடித்தவள் ஸ்ரீகாந்தை அழைத்தாள்.

“என்ன மது இந்த நேரத்துல?”

“ஸ்ரீகா உன் பொண்ணு என்னத்த பண்ணி வச்சானு தெரில ஸ்கூல்ல இருந்து கால் பண்ணி ஈவ்னிங் வந்து பார்க்க சொல்றாங்க.என்ன பண்றதுனு ஒண்ணும் புரில..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“டென்ஷன் ஆகாம முதல்ல என்னனு போய் கேளு மது..எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அப்பறம் பேசுறேன்.”,என்றவன் அழைப்பைத் துண்டித்து விட மதுவிற்கு இன்னுமும் எரிச்சலாய் இருந்தது.

அடித்துப் பிடித்து பள்ளிக்குச் சென்றவள் வகுப்பாசிரியரைத் தேடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நின்றாள்.

“ஐஷு வீட்ல எப்படி இருக்கா இங்க ரொம்ப சைலண்டா இருக்கா.யாரோடையும் மிங்கில் ஆறது இல்ல.ரைட்டிங் சுத்தமா வரல.நீங்க கொஞ்சம் கேர் எடுத்து கவனிக்கலாமே..இப்போவே ப்ராக்டிஸ் பண்ணாதான் எழுத வரும்.எல் கேஜி தானேனு ஃப்ரியா வீட்டீங்கனா ரொம்ப கஷ்டம் பாத்துக்கோங்க”

இதுக்காகவா அத்தனை அவசரமாய் வர சொன்னார்கள் என்று தனக்குள்ளேயே நொந்து கொண்டவள் அங்கிருந்த பெஞ்சில் அமர இன்னொரு பெண் அவளருகில் வந்து அமர்ந்தார்.இவளைப் பார்த்ததும் என்னவென கேட்க மதுவும் மேலோட்டமாய் விஷயத்தை கூறினாள்.

“ம்ம் என்ன சொல்றதுனு தெரில எங்க மிஸ் என்ன சொன்னாங்க தெரியுமா என் பையன் எப்போ பாரு பேசிட்டே இருக்கானாம்.மத்த பசங்களையும் சேர்த்து கெடுக்குறானாம்.ஏங்க மூணு வயசு குழந்தைக்கே இத்தனை கம்ப்ளையிண்ட் சொன்னா நாம என்ன பண்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.