Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாரிகை - 28 - மதி நிலா - 5.0 out of 5 based on 2 votes

தடகள பாதையைப்போல் காலங்கள் விரைந்துபோக இதோ இதோ என்பதற்குள் தனது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தாள் தாரிகை.. நல்ல மதிப்பெண்கள்..!! பயாலாஜி..!! நினைத்திருந்தால் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..!! ஆனால் அவளது விருப்பம் வேறாக இருந்தது..!!

“ப்பா.. நான் கலெக்டருக்குப் படிக்கப்போறேன்..”, பதினோரு மாதங்களுக்குப் பின் தனக்கு வேண்டியதை தந்தையிடம் அவளே கேட்டிருந்தாள் தாரிகை..

“படிடா.. என்ன வேணும்னாலும் படி..”, பரத்வாஜ் அவளை லேசாக தட்டிக்கொடுக்க.. அடுத்து என்ன கல்லூரியை நோக்கிய அவள் பயணங்கள்..!!

மதுரையிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் படையெடுப்பு..!! எல்லாம் தோல்வியை மட்டுமே தழுவுவதாய்..!!

திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து இடங்களிலும் நிராகரிப்பே..!!

“ஏங்க.. நம்ம புள்ளைய மதுரையிலேயே படிக்கவைக்கனும்னு அவசியமில்லை.. வேற ஊருலயும் படிக்க வைக்கலாம்..”, கீதாஞ்சலி சொல்லிட..

“யோசிப்போம் கீதா.. வெளியூர்லதான் அவளுக்குப் படிப்பு அமையும்னா மாத்தவா முடியும்..??”, பரத்வாஜிற்குள் யோசனைகள்..!!

“அக்கா சொல்றது சரிதான் மாமா..நான் எனக்குத் தெரிஞ்ச பிரெண்ட்ஸ்ட்ட எல்லாம் சொல்லி விசாரிக்கறேன்.. நம்ம சீக்கிரம் சேர்த்துடலாம் பிள்ளையை..”, இது வெற்றி..

“சரி வெற்றி.. அப்படியே நம்ம நிஷாவுக்கும் ஒரு ஸ்கூலைப் பாரு.. நம்ம எல்லாரும் அங்கயே போயிடலாம்..”, என்னவோ தாரிகையுடன் இருக்க மனம் ஏங்கியது பரத்வாஜுக்கு..

“அவசியமில்லை மாமா.. அவளுக்கு துணைக்கு இனி நாம அவசியமில்லை.. அவ தனியா இருக்கணும்.. இருக்கட்டும்.. அப்பத்தான் அவ எல்லாத்தையும் பழகமுடியும்.. நம்ம என்னவோ அவளைப் பொத்திப் பொத்தி வைக்கறோம்.. இந்த பத்து பதினோரு மாசமா அவ வீட்டைவிட்டு எங்கயும் போகல.. என்னவோ வீடு ஜெயிலுங்கர மாதிரி அடைஞ்சே கிடக்கறா.. அவ படிக்க நினைக்கற படிப்புக்கு அவ தனியா நின்னு பழகணும்.. அப்பத்தான் இந்த சமுதாயத்தைப் பத்தி புரியும் அவளுக்கு..”

“நீ சொல்றதெல்லாம் சரிதான் வெற்றி.. ஆனா இவளை எப்படிடா தனியா விடறது.. கண்டிப்பா இவளுக்கு ஹாஸ்டல் எல்லாம் கொடுக்கமாட்டாங்க.. வீடும் கிடக்கறது கஷ்டம்.. பின்ன எப்படி..?? எனக்கு இதுல உடன்பாடு இல்லைடா..”, தனது மறுப்பை பதித்தே இருந்தார் கீதாஞ்சலி..

“ஹாஸ்டல் வீடெல்லாம் வேண்டாம்க்கா.. இவளை மாதிரி திருநங்கைகள் தங்கியிருக்கற இடம் தெரியும் எனக்கு.. அங்க இருக்கட்டும் இவ.. கத்துவா இவ சீக்கிரம்.. நம்மக்கூட இவ இருக்கறதைவிட அவங்ககூட இருக்கறதுதான் அவளுக்கு ஒரு கம்பர்ட் தரும்.. நம்மளைவிட இவளை அவங்க நல்லாப் புரிஞ்சுப்பாங்க..”

“அப்ப நீ ஏற்கனவே இடத்தைப் பார்த்துவெச்சுட்டியா வெற்றி..??”, இது பரத்வாஜ்..

“இல்லை மாமா.. இப்பதான் சட்டுன்னு யோசனை வந்துச்சு.. இவளுக்கு அது ஒரு படிப்பினையா இருக்கும்.. அங்க இருக்கட்டும் அவ.. அங்கிருக்க சிலர் காலேஜ் போறாங்க.. நம்ம கொஞ்சம் முயற்சி செஞ்சா அவங்க படிக்கற காலேஜுல நம்ம தாருவையும் சேர்த்துடலாம்..”

“சரிடா.. எனக்கு சம்மதம்தான்.. தாருக்கிட்ட எதுக்கும் கேட்டுக்கலாம்.. அவளுக்கு விருப்பம் இருக்கணும் இதுல.. அதுதான் முக்கியம்..”, அம்மாவும் அப்பாவும் சொல்ல சரியென்றே பட்டது வெற்றிக்கு.. எல்லாம் நல்லதில் முடியுமென்ற நம்பிக்கையும்..!!

சிறுவாணியின் சுவை மிகுந்த நீரும் வெயில் காலத்திலும் சில்லென்று வீசிக்கொண்டிருக்கும் காற்றும் கோவையின் மீது ஒரு பிடித்தத்தைக் கொடுத்திருந்தது தாரிகைக்கு..!!

தங்கிருப்பது ஒரு நடுத்தர குடியிருப்பு என்றாலும் என்னாவோ தாயின் மடியைச் சேர்ந்த உணர்வு..!!

அவளைச் சுற்றியும் அவளைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள்..!! எப்பொழுதும் கேலியும் சிரிப்புமாய்..!! அத்தனை நாட்கள் புன்னகையை மறந்துவிட்டதுபோல் தோன்றிய இதழ்களில் இப்பொழுது அடிக்கடி மென்னகையின் சாரல்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அலங்காரத்திற்காக நட்டுவைக்கப்பட்டிருந்த பூச்செடிகளுக்கு நீர்விட்டுக் கொண்டிருந்தாள் அவள்..!!

எத்தனை எத்தனை மாற்றங்கள் அவள் வாழ்வில்..??

திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவிக்கும் மனநிலையில் இருந்தவளுக்கு இப்பொழுது சொந்தங்கள் ஆயிரம்..!! பத்து வயது முதல் எழுபது வயது வரை அவ்வளவு சொந்தங்கள்..!! அதுவும் எதிர்பாராத ஒருவர் வாரி வாரி வழங்கியிருந்தார்..!!

சில வருடங்களுக்கு முன் யாரை அவள் தூற்றி அழவைத்தாளோ அவள் அள்ளியள்ளிக் கொடுத்திருந்தாள் அனைத்தையும்..!!

முதலில் தயக்கம்தான் பெண்ணுக்கு..!! எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாது தனக்கு வாரிவழங்கிக் கொண்டிருந்தவளிடம் அத்தனை தயக்கம் தாரிகைக்கு..!!

About the Author

Madhi Nila

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
  • NA
Add comment

Comments  
# RE: தொடர்கதை - தாரிகை - 28 - மதி நிலாmadhumathi9 2019-02-10 12:38
:clap: nice epi.waiting to read more. (y) :thnkx: :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 28 - மதி நிலாAdharvJo 2019-02-09 21:04
(y) nice update sis :clap: :clap: Finally Thaarigai won her mom's support :dance: We got to know how She joined hands with Samu and Mozhi :cool: vettri sounds fair but avanga inathodu thaan thaarigai will find her comfort zone is not really satisfying ippadi panuradhala thaan they are left behind or kept away from us.avangalum humans like any of us!!

Why are parents so worried :Q: Avanga pasangalum transgenders aga mariduvangandra muttal thanathinala :Q: will they ever understand its natures desire and nothing is in once hand steam Avanga appadi ena discipline illama irukuranga....its is the society which is depriving them their rights facepalm Disgusting!!

Look forward to read next update. thank you and keep rocking miss :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாரிகை - 28 - மதி நிலாmahinagaraj 2019-02-09 17:33
அற்புதம் மேம்.... :clap: :clap:
ரொம்ப அழகான பதிரவு.... :-)
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top