(Reading time: 10 - 20 minutes)

எதிர்பார்ப்பில்லா அந்த அன்பும் பாசத்திற்கும் தனக்கு தகுதியில்லை என்ற நினைப்பு.. கூடவே கண்ணீரை மட்டுமே அந்நபருக்கு பரிசளித்தோம் என்ற குற்றவுணர்வு..!!

நீர்த்துளிகள் வடிவடியாக இலைகளில் படிந்திருக்க வெற்றி தன்னை முதன்முதலில் இங்கு அழைத்து வந்த நியாபகம்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சின்னச் சின்ன சந்துகளில் பொந்துகளாய் அமைந்திருந்த வீடுகள் முதலில் அத்தனை ஈர்ப்பைக் கொடுத்திடவில்லை தாரிகைக்கு..!!

“இங்க யாரு மாமா இருக்கா..??”, வெற்றியின் கைகளைப் பிடித்தபடி இவன் கேட்டிட..!!

“எல்லாம் தெரிஞ்சவங்கதான் தாரு.. உனக்கு அவங்களைப் பிடிக்கும்..”, என்பதைத் தவிர எதுவும் சொல்லவில்லை வெற்றி..!! அவளே கண்கொண்டு கண்டு தெரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணம் வெற்றிக்கு..!!

அந்த இடத்திற்குள் உள்ளே செல்ல செல்ல எட்டிப்பார்த்தன சில தலைகள்..!!

விரிந்துபோனது தாரிகையின் கண்கள்..!! அனைவரும் அவளைப் போலவே இருந்தனர்..!! கொஞ்சம் வித்யாசமாக..!! கொஞ்சம் ஓவர் மேக் அப் அனைவரிடத்திலும்..!! அது என்னவோ முகம் சுளிக்கவே வைத்தது..!! வெற்றியிடம் அதை வெளிப்படுத்தியேவிட்டாள் அவள் அஷ்டகோனலான முகத்துடன்..!!

“ஷ்.. தாரு.. இப்படி எல்லாம் பேசக்கூடாது..”, அவளை அதட்டியவன், “அவங்க மனசு கஷ்ட்டப்படும்டா..”, மெதுவான குரலில் சொல்ல.. சந்தேகம் தீர்ந்தபாடில்லை தாரிகைக்கு..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவள் எதையோ கேட்க முற்பட, “எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.. தோ.. தெரியுது பாரு அந்த எல்லோ கலர் வீடு.. அங்கதான் போகனும் நாம..”, என்ற வெற்றி தாரிகையுடன் அந்த வீட்டை நெருங்க பெல்லை அடித்திருந்தான்..!!

அருகிலிருந்த வீடுகளிலிருந்து சில திருநங்கைகள் புதிதாக வந்த வெற்றியையும் தாரிகையையும் கண்டு தங்களுக்குள் ஏதோ கிசுகிசுப்பதும் சிரிப்பதுமாக இருக்க..

“மாமா.. எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க.. எனக்கு சங்கட்டமா இருக்கு..”, வெற்றியின் கைகளைப் பிடித்திருந்தாள் தாரிகை..!!

“ஒண்ணுமில்லை.. நம்ம இந்த இடத்துக்கு புதுசுல.. அதான் அப்படி பார்க்கறாங்க..”, என்று வெற்றி சொல்லி முடிக்கவும் முன்வாசல் திறக்கப்படவும் சரியாக இருந்தது..!!

“வாங்க வெற்றி.. வா தாரிகை..”, எதிர்பார்த்தது போல் தங்களை வரவேற்ற சமுத்திராவைக் கண்டு வெற்றி புன்னகைக்க.. சமைந்து நின்றாள் தாரிகை..!! 

உருவெடுப்பாள்..

Episode # 27

Episode # 29

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.