(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 26 - லதா சரவணன்

kadhal ilavarasi

ன்றாக உறங்கி முடித்து சலனமில்லாமலும் அதிக ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பொங்கி வரும் அலைகளை ரசித்தவாறு கண்ணாடித் தடுப்பின் வெளியே பார்வையைப் பதித்திருந்தாள் பத்மினி.

என்னடி இன்னும் கடலையே உற்றுப் பார்த்துகிட்டு இருக்கிறே ஆவி பறக்கும் காப்பி கோப்பையோடு அங்கு வந்திருந்த உத்ராவினைக் கண்டதும் உடல் சோர்வையும் மீறி உற்சாகமாய் சிரிப்பு வந்தது? 

மூணுநாலு நாளா அங்கேயே இருந்திட்டேன் இல்லை அதுதான் விட்டுப்பிரிஞ்சது கஷ்டமாயிருக்கு இன்னொரு டிரிப் போயிட்டு வரலான்னு பாக்குறேன் 

விளையாட்டுக் கூட அப்படி சொல்லாதே பத்மினி அன்னைக்கு நீ என்கிட்டே கோவிச்சிகிட்டு காணாம போனபிறகு, உன்னைக் கண்ணாலே பார்க்கிற வரைக்கும் என் மனசு பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். உனக்கு என்னாச்சோ ஏதாச்சோங்கிற பயம் என்னைப்போட்டு அறுத்து எடுத்துடுச்சி. 

அந்தக் கவலையிலேதான் பரத் கூட அவுட்டிங் போனீங்களாக்கும்....

உத்ராவின் மூக்கைச் செல்லமாய்த் திருகினாள் பத்மினி

உண்மையா எனக்கு உன் மேலயும் பரத் மேலயும் எந்தக் கோபமும் இல்லை, முதல்நாள் விருந்துக்குப் போகும் போதே பரத் உன்னை லவ்வுற விஷயத்தை என்கிட்டே சொல்லிட்டார். எனக்கு பரத் மேல இன்ட்ரஸ்ட் இருந்தது பட் அது காதல் இல்லை, ஒரு குடும்ப வட்டத்திற்குள்ளே சிக்கிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை உத்ரா. நிறைய ரகசியங்களை அடக்கியிருக்கிற இந்த கடல் மேலதான் எனக்கு காதல் நீ எப்படி உன்னோட காதலை தேடிப் போனீயோ அதே போலத்தான் நானும் ஒரு சேன்ஞ்க்கு கடல்ல நீந்தலான்னு போனேன். ஆனா அன்னைக்கு இருந்த நிலைமை கொஞ்சம் தடுமாற வைச்சது உண்மைதான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என் வாழ்க்கையைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் பெற்றோர் இருந்தும் கவனிக்கப்படாத பிள்ளைகள் எல்லாம் அநாதைகள்தான் நானும் அப்படித்தானே, அன்னைக்கு பரத் என்னைத் திட்டியது அடிச்சது எல்லாமே என் மேலுள்ள அக்கறைன்னு அப்பறம் புரிஞ்சது. உன்னையும் கஷ்டப்படுத்திட்டேனேன்னுதான் உங்களைப் பார்க்க நான் வந்தேன் .அப்போ ப்ரியன் மட்டும்தான் அங்கே இருந்தான். நீங்க இரண்டு பேரும் வெளியே போயிருக்கிறதாகவும், அவனுக்கும் ஏதோ வேலையிருக்கு கொஞ்சம் நேரம் கண்ட்ரோல் ரூமில் இருக்கமுடியுமான்னு கேட்டுகிட்டான். ஆனால் அவன் பேசிய போது பரத்மேல அவனுக்கு இருக்கிற பொறாமை உணர்வு எட்டிப்பார்த்தது பரத் நல்லவன் இல்லை அவனால நிறைய பொண்கள் சீரழிஞ்சிப் போயிருக்காங்கன்னு என்னனென்னவோ சொன்னான். உத்ராவின் நிலைமையும் இனிமேல் அவ்வளவுதான்னு நிறைய பேசினான். எனக்கு இருந்த மனநிலையிலே எதையும் யோசிக்கத் தோணுலை அவன்போன பிறகு நான் கண்ட்ரோல் ரூமில் தனியா இருந்தேன் அப்போ எதிர்பாரா விதமா அவனோட கணிப்பொறியை இயக்கும் போது அதிலே சில பெண்கள் படம் போட்ட போல்டர் இருந்தது அதில் நீரஜாங்கிற பெயர் என்னை ஈர்த்தது.

யாரோ எங்கேயோ இந்த பெயரைச் சொல்லிப் பேசியதைப் போல நினைவு நான் அதை உயிர்ப்பித்தேன் அப்போதான் ப்ரியனும் இன்னொருத்தனும் அந்தப்பெண்ணை மயக்கப்படுத்தி நாசமாக்கியது தெரிந்தது. டாக்குமெண்ட் ஹிஸ்டரியில் முதல் நாள் நள்ளிரவு அந்த பைல் ஓப்பன் செய்து பார்த்ததற்கான அடையாளமும் இருந்தது. அப்போ ப்ரியன்தான் மோசமானவன்ங்கிற எண்ணம் எனக்குள்ளே உதித்தது. பரத் மேல அவன் ஏன் அத்தனை மட்டமான பொய்களைப் பரப்பினான்ங்கிறதும் புரிந்தது உடனே உங்க இரண்டுபேர்கிட்டேயும் சொல்லலான்னா உங்க போன் நாட் ரீச்சபிள். நான் என் மொபைலில் அந்த வீடியோ போட்டோஸ் எல்லாம் எடுத்த பிறகு தான் ப்ரியன் அங்கே வந்தான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கடவுளே அதுக்குப்பிறகு

அதெல்லாம் நிறைய படங்களில் காட்டலையா நீயே கெஸ் பண்ணிக்கோ, என்னை அடையவும் அவன் சில திட்டங்கள் போட்டு இருந்திருக்கான். பட் அந்த சூழ்நிலையிலே அவனால என்னை ஏதும் பண்ணமுடியலை ஒரு பாலிதீன் கவர்ல என்னைக் கட்டி கடல்ல போட்டுட்டான். அங்கேயும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்

கடவுளே என்று நெஞ்சின் மேல் கைவைத்துக் கொண்டாள் உத்ரா

ரொம்ப பயப்படாதே உத்ரா...நம்மோட முடிவை நாம தான் எழுதணும் ப்ரியன் என்னைக் கட்டி கடலில் போடணும் நினைச்சது என்னவோ கொலை செய்யத்தான் ஆனா அவன் தேர்ந்தெடுத்த இடம்தான் தப்பு இங்கே இந்த தப்பு மட்டும் இல்லை இவனும் பரத்தோடு இன்னொரு நண்பனும் சேர்ந்து அவனுக்கு துரோகம் செய்யறது தெரியவந்தது. நம் நாட்டோட கனிம வளங்களை கொள்ளையடிக்கிறது வெளியுலகிற்கு தெரியக்கூடாதுன்னு கிளவரா பவளப்பாறை மீட்புன்னு ஒரு ஐடியாவைக் கண்டுபிடிச்சி அதிலே பணக்காரனான பரத்தை கூட்டு சேர்த்துக்கொண்டு கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து அதில் யுரேனியத்தை கைப்பற்றறாங்க

எப்படி ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.