Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

“சரி.. உன் திசையிலிருந்தே யோசித்தாலும் கூட எத்தனை கல்லூரிக்காதல்கள் கல்யாணத்தில் முடிகிறது..?”

“முக்கால்வாசி காதல்கள் கல்யாணத்தில் முடியத்தான் சமுதாயம் ஒத்துழைப்பதில்லையே..”

“முக்கால்வாசி இருக்கட்டும்… மீதி கால்வாசி..?”

“மீதி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கொல்லப்படுகிறது”

“சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பெரும்பாலும் மனிதர்களால் உருவாகுபவை தானே..? பின் ஏன் அவற்றிற்காக காதல் கொலைப்பட வேண்டும்..?”

“ஏன்..? பெற்றோர்களால் செய்து வைக்கப்படும் சில திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லையா..?”

“அதற்கு முக்கியமாக மன நோய்கள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன.. அடுத்தவர் மன நிலை அறியும் திறமையின்மை, சந்தேகம்… இப்படிப்பல”

“அதற்குத்தான் சொல்கிறேன்.. தன் பெரும்பகுதி வாழ்நாளை பெற்றோரால் நிச்சயிக்கப்படும் முன்பின் அறிந்திராத ஒருவரிடம் ஒப்படைப்பதைக் காட்டிலும் காதலின் வலிமையால் தேர்ந்தெடுக்கப்படும் நன்கு அறிந்த ஒருவனிடம் அர்ப்பணிப்பது சிறப்பல்லவா..!”

“நான் ஒன்றும் காதலுக்கு எதிரியல்ல.. ஆனால் காதலிக்க இது ஏற்ற காலமல்ல என்றுதான் சொல்கிறேன்.. காதல் கல்யாணம் செய்தாலும் பெற்றோரின் ஆசியுடன் நடந்தால் கோடி புண்ணியம்.. காதலில் காட்டும் தீவிரத்தை கல்யாணத்தில் காட்ட நிறைய காதலர்கள் தயங்குகிறார்கள் என்றுதான் சொல்கிறேன்..”

“எல்லா காதலர்களும் அப்படி இல்லை.. ஒரு சிலரின் பிழையால் அனைவரின் மீதும் குற்றம் சுமத்தாதே,,!”

“சரி.. சரி.. ஒத்துக்கொள்கிறேன்.. இரு தரப்பிலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் என்னைப் பொறுத்தவரை பெற்றோர், உற்றோர் கூடி அவர்களின் ஆசியுடன் மண வாழ்க்கையில் இணையும் பொழுது இருக்கும் நேர்மறை அதிர்வுகள் (Positive Vibration) இல்வாழ்வில் பல ஆனந்தத்திற்கு விதை விதைக்கும். அது மட்டுமின்றி அவர்களின் ஆசி பக்கபலமாக இருந்து துன்பங்களைக் களைந்து இன்பத்தைக் கண்டெடுக்க உதவும்”

“எது எப்படியோ... உள்ளத்தில் உண்மையான அன்பு இருந்தால் உலகமே எதிர்த்தாலும் கூட மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நடத்த முடியும்”

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு எங்கெங்கோ செல்வதைக் கண்ட சிகா தோழியின் மன நிறைவுக்காக “தங்கள் சித்தம் தாயே..!.. இப்படியே வாக்குவாதம் நிகழ்த்திக்கொண்டிருந்தால் இன்று கொலைப்பட்டினி தான் இருவருக்கும்.. வா.. வேகமாக போகலாம்” என, இருவரும் விடுதி உணவகத்துக்கு விரைந்தனர்.

மதியம் பனிரெண்டு மணியளவில் சிகாவை அழைத்தவன், எதிர்த்திசையில் கைபேசி அணைக்கப்பட்ட செய்தி வர அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டான். பதிலாக, சிகா விடுப்பு அனுமதி கேட்டதாக தகவல் வந்தது. மனம் நிலை கொள்ளாமல் குழம்பினான்.

இரவு எட்டு மணியளவில் மீண்டும் சிகாவின் கைபேசியைத் தொடர்பு கொண்டான் கவிவர்ணா. அப்போதும் கைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

துடித்துப்போனான் அவன். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நூற்றாண்டாக கடந்து சென்றது. இரவு முழுவதும் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்தும், கால் வழிக்க நடந்து கொண்டும் விடியலுக்காக தவமிருந்தான்.

சரியாக காலை ஆறு மணிக்கு சிகாவை அழைத்தபோது மீண்டும் அதே பதில். முற்றிலும் சக்தி இழந்தான். நேற்றுவரை அவனுக்கு ஆறுதல் சொன்ன அவன் மனம் இன்று தாறுமாறாக சிந்தித்து அவனை வேதனைச்சுழலில் சிக்க வைத்தது. என்னவாயினும் இனி அவளைத் தவிக்க விடுவதில்லை என்று முடிவெடுத்தவன், உடனடியாக அவள் விடுதிக்குப் புறப்பட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வயதான அந்த விடுதிக்காவலர் அவனைக்கண்டதும், அவனருகில் நெருங்கி வந்து, “ஸார், சிகா பொண்ணு உங்களிடம் சொல்லவில்லையா..? நேற்று உடம்பு சரியில்லை என்று வெளியே கிளம்பி சென்றது.. அனேகமாக வீட்டுக்குச் சென்றிருக்கும்.. பாவம்.. களைத்துப்போய் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.. ஏதாவது அவசரமென்றால் நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்யுங்களேன்”

“அப்படியா தாத்தா.. அவளின் தொலைபேசி உபயோகத்திலில்லை போல.. அவசரமெதுவுமில்லை.. அவள் வந்தால் மட்டும் எனக்குத் தகவல் சொல்லுங்கள்.. அப்புறம் என்னை ஸார், நீங்கள் என்றெல்லாம் கூப்பிட்டுத் தள்ளி நிறுத்தாதீர்கள்” என்று கைபேசி எண்ணைக் குறித்துக்கொடுத்தான்.

“நல்ல பிள்ளைகள் இருவரும். இந்த விடுதியிலேயே அந்தப்பொண்ணு மட்டும் தான் என்னை அன்பாக ‘தாத்தா’ என கூப்பிடும்.. அப்படியே நீயும்” என்று மனம் நெகிழ்ந்தார் முதியவர்.

உயிரைத் தேடி வந்தவன் முதியவரிடம் விடை பெற்றுக்கொண்டு உயிரற்ற நடைபிணமாக கிளம்பினான். தொடர்ந்த  வந்த மூன்று நாட்களும் உண்ண, உறங்க மறந்து, பணிகளை மறந்து அறைக்குள்ளேயே முடங்கிப்போனான்..! 

உயிரே..!

வதைக்கிறாய் எனை

அணுவணுவாய்..

பாலைவனமொன்றில்

பசுஞ்சோலை உனை

பார்வையால் தேடுகிறேன்..!

கடும் வெயில் அதில்

கால்பதித்தோட

கானல் நீராய் மறைகிறாய்..!

மழைச்சாரலாய்

எனைத் தழுவிச்செல்

மண்வாசம் வீச..!

ஒளிக்கதிராய்

எனை உரசிச்செல்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

காரிருள் கரைய..!

கானகம் அதில்

கற்சிற்பமாய் நிற்கிறேன்..

காதலால் உயிர்

கொடுக்க வா..!! 

 

**** Contest alert **** Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 07

Episode # 09

Go to Varnam theettiya kathal sirpame story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sanyogita

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாmahinagaraj 2019-02-11 12:59
வாவ் எவ்வளவு அருமையா காதல் காவியம்... :clap: :clap:
சூப்பர் மேம்..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-11 13:58
நன்றி மகிநாகராஜ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாabimahesh 2019-02-10 19:42
Hi Mam.. Read all the epis today.. Nice flow :-)
Keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 21:41
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாsaaru 2019-02-10 17:33
Super update pa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 17:58
நன்றி சாரு ஜி :-)
Reply | Reply with quote | Quote
# வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே 08-சந்யோகிதாரேணுகா சிவா 2019-02-10 16:52
Super mam.siga pavam mam.kaviya sigaram love propose panna solunga. :-)
Waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
# RE: வர்ணம் தீட்டீய காதல் சிற்பமே 08-சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 17:57
நன்றி ரேணுகா சிவா ஜி :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாmadhumathi9 2019-02-10 13:02
wow nice epi. :clap: egarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:46
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாAdharvJo 2019-02-10 13:00
wow divine love theory prove panaringalo 😍😍 👌 sibikku partial amnesia vaga irukkumo 😝 Or siga Oda indha valuable ethics kaga Hitler thali pogurara (hopeless logic ma 😂) anyway ivanga rendu peroda unarchigalai arumaiyaga depict nah carve panuringa 👏👏👏 look forward to read next update. Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:47
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாRanju 2019-02-10 12:48
Superrr mam... But only 3 pages thana
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 08 - சந்யோகிதாசந்யோகிதா 2019-02-10 16:50
நன்றி ரஞ்சு ஜி :-) :thnkx: குறைந்த பக்கங்கள் கொடுத்ததற்காக மன்னிக்கவும். வரும் வாரத்தில் ஈடு செய்ய முயற்சிக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 21 Apr 2019 19:15
தோழிகளிருவரும் பேச ஏராளமான கதைகள் நீண்ட வரிசையில் நீ நான் என போட்டியிட்டுக்கொண்டு காத்திருந்தன. ஆனால் காலம் வேறுவிதமான சூழ்நிலையுடன் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தது.

தனது ஒரே பெண்ணின் திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் அபியின் தந்தை.

முகூர்த்தத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்த நிலையில் உற்றார் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு நெருங்கிய சொந்தங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பந்தல் போடும் ஆட்கள் ஒருபுறம் அவர்கள் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க,

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 07 Apr 2019 23:44
கொடிய வெயிலின் தாக்கம் முகிலின் சிறுமழைத்தூரலில் காணாமல் போவதுபோல சில ஆண்டுகளாக சிபியின் மனதை உறுத்திக்கொண்டிருந்த நினைவுகள் கர்ணாவின் உயிர்க்காதலால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

பொதுவாக இயற்கையாக கனியும் கனிகள் இயல்பிலேயே சுவை மிகுந்தவையாக இருக்கும். அதுபோலவே மனித வாழ்வில் சுவை கூட்டும் நிகழ்வாக திகழும் காதல் மலரும் தருணமும் எவ்வித வினையூக்கியும் இன்றி வினைப்பயன் எதையும் எதிர்பாராமல் இருளைக் கிழித்து ஒளிரும் விடியலாக அமைந்தால் பாவவினை தீர்க்கும் இப்பிறப்பும் புண்ணிய தீர்த்தமாகும். அப்படிப்பட்ட காதல் எத்தகைய தருணத்தில் தன் வாழ்வில் மலர்ந்ததென ஆராய்ந்து கொண்டிருந்தாள் சிபி.

********************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 31 Mar 2019 20:20
உணர்வுப்பூர்வமான அவர்களின் உரையாடலைக் கலைத்தது அவனுடைய கைபேசி. சற்று எரிச்சலடைந்தவனின் முகம் அழைப்பது தாயார் என்றறிந்தவுடன் கனிந்து, “அம்மா…. இப்போதுதான் உங்கள் மருமகளுடன் மனம் விட்டு பேச ஆரம்பித்திருக்கிறேன்.. நான் திரும்ப அழைக்கும்வரை எனைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான் உரிமையுடன்.

எதிர்த்திசையில் என்ன சொன்னாரோ அவன் தாய், இலேசான வெட்கத்துடன் புன்னகையை உதிர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

இதையனைத்தும் இமைக்காமல் விழியகல பார்த்துக்கொண்டிருந்த சிபியின் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்பு.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-15
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Mar 2019 18:53
சிகாவின் விழிகள் சாலையை வெறித்துக்கொண்டிருக்க அதற்கு மேலும் அவளைத் துன்புறுத்த மனமின்றி அவள் போக்கில் விட்டுவிட்டான் கவிவர்ணா. சிறிது தூரம் இருவரிடத்திலும் மெளனம் ஆட்சி கொண்டது.

தன் நிலையைச் சொல்லவும் முடியாமல் மனதிற்குள்ளே புதைக்கவும் முடியாமல் வேதனைப்பட்டாள் சிகா. நடக்கும் எல்லா நிகழ்வும் இவளின் அனுமதியைக் கேட்டுக்கொண்டா நடக்கிறது..? இவளே அதிலொரு பார்வையாளராக இருக்கும்போது இவளெப்படி நடந்த நிகழ்வுகளுக்கும் நடக்க இருப்பவைகளுக்கும் பொறுப்பேற்க முடியும்..?

**********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-14
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 17 Mar 2019 19:43
ஆதவன் உறக்கம் கலைந்து பணிக்குத் திரும்பிட அதிகாலைப்பொழுது அழகாக மலர்ந்தது. நிம்மதியான உறக்கத்திற்குப்பின் கண்விழித்து தனதறையிலிருந்து கீழ்தளத்திற்கு வந்த கவிவர்ணா, சமையலறையில் தாய் சாந்தியுடன் புன்னகை பூக்க பேசிக்கொண்டே அவருக்கு சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்த சிகாவை புகைப்படமாக மனதினுள் நிரப்பிக்கொண்டான்.

புத்தம் புதிதாக பூத்த ரோஜா மலராக அத்தனை மென்மையுடன் கூடிய பெண்மையை இப்படி தன் வீட்டில் காண எத்தணை காலம் எத்தணை கனாக்கள் கண்டிருப்பான்..? இன்று அதில் முழுமையும் நிறைவேறாவிட்டாலும், நிறைவேறும் காலம் வெகு தூரமல்ல என்பதைக் கடவுள் உணர்த்தும் தருணமாக எண்ணினான் அவன்..!

*************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...irpame-sanyogitha-13

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top