(Reading time: 17 - 33 minutes)

"அறிவு நீங்க பிரியனும்னு நினைப்பது உங்கள் முடிவு.எனக்கு சம்மதம் இல்லை. என் வரையில் அது தேவையற்றது.நான் உங்களுக்காககாத்திருப்பேன்.இது என் முடிவு.இதில உங்களுக்கு அதிகாரம் இல்லை."பேசி ஓய்ந்தேன்.

மனதிற்கு உயிர் வலி எடுத்தது.உள்ளேயும் வெளியேயும் கண்ணீர் மட்டுமே இருந்தது.இன்றே வெறுமை சூழ்ந்து கொண்டது.உயிர் மட்டுமே எஞ்சிய உடலாய் வீடு திரும்பினேன்.தனிமை தேவைப்பட்டது.அது என் வீட்டில் நிறைய கிடைத்தது.இதெல்லாம் கனவா நினைவா?என் காதலே கனவா?அவனை சந்திததது காதல் கொஅடது எல்லாம் கனவா?இப்படி என்னை தூக்கி எறிந்து பிரிந்து செல்கிறானே அது கனவா?அழ வேண்டும்போல் இருந்தது.ஏனோ அதுவும் தனிமை தந்தது.வெறுமை மட்டுமே எஞ்சிய மனதில ஈரம மட்டும் எப்படி கசியும்.வாழ்க்கை நினறு போனது .எது பகல் எது இரவு ஒன்றும் விளங்கவில்லை. அலுவலகம் நிரந்தர விடுப்பு கொடுத்தேன்.நினைத்த போது எழுந்தேன்.நினைத்த நேரம் உறங்கினேன்.கடற்கரை சென்றேன் கடல் அலை வெறித்தேன்.பூங்கா சென்றேன் அங்கு சிலையோடு சிலையானேன்.கோயில் சென்றேன் எதையோ தேடினேன்.இஙகெல்லாம் அவனுடன் சென்ற நினைவுகள்.அங்கெல்லாம் தொலைத்த என் காதலனை தேடினேன்.எங்காவது அவன் என்னுடன் சேர மாட்டானா?கண்மணி நீ தானடி என்று என்னை அள்ளி செல்ல மாட்டானா என்று ஏங்கினேன் எங்கு சென்றாலும் வெறும் தனிமையும் வெறுமையுமே என்னை தொடர்ந்தது.பல சமயங்களில் ஏன் சென்னை வநதேன் என்று நொஅது கொண்டேன்.என் அறிவழகனை அறிமுகப்படுத்தியதும் சென்னை தான் அவன் என்னைவிட்டு பிரிந்ததும் இங்கு தான்.

அவனை சந்திக்காமலேயே இருந்திருந்தால் வாழக்கை வேறு விதமாய் போயிருக்கும்.உலகின் அற்புத உணர்வு காத்ல்.அதை தந்து அதன் வலியையும் தந்தான்.ஆனால் வலி பொறுக்கும் வழி மட்டும் கற்றுத்தரவில்லை.வெறும் கல்லாய் நின்ற என்னை அவன் தொடுதலால் அவன் காதலால் சிற்பம் செய்தான்.ஆனால் இதயம் மட்டும் உளி கொண்டு சுக்குநூறாய் உடைத்தெறிந்தான்.சிறிது காலம் தான் பழகினான்.ஆனால் உயிரில் கலந்தான்.அவன் பிரிவு அதனால் தான் ஏதுமற்ற பாலை ஆக்கியது என் நெஞ்சை.

அன்றெல்லாம் என் வலியை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார என் அப்பா.அவருக்கு நிகராக நின்றிருந்த என் அறிவழகன் இன்று எங்கோ நிழலாய் போனான். அப்பாவிற்காக சிர்க்க முடியுமா முடியவில்லை.அவன் என் மனம் பார்க்கும் கண்ணாடி ஒளிக்கவும் முடியாது ஒளியவும் முடியாது.எத்தனை இடைவெளி கொடுத்தார்.ஏன் என்று கேட்காமல் என் இரணம் நோண்டாமல் தன் சின்ன சின்ன செய்கையால் எனக்கு தோள் கொட்த்த தூயவர். பச்சை குழந்தையாய் என்னை பார்த்து பார்த்து கவனித்தார்.நான் திரிந்த இடமெல்லாம் அவரும் உடன்வந்தார்.வாழ்க்கை எனக்கு கற்று கொடுக்கும் பாடங்களை எதிர்கொள்ளும் விதம் மட்டும் பார்த்துக்கொண்டு நான் உடையாமல் இருக்க மட்டும் கை கொடுத்தார்.இது பெற்றோர்க்கு எததனை வலி வேதனை.அறிவழகன் என் மூலமாக அவரையும் அல்லவாகாயப்படுத்துகிறான்.

புலம்பல்கள் ஓய மறுத்தன. அலைபேசி அழைத்தது.மறுமுனையில் அவன் தான்.

"கயல் அறிவு பேசறேன்.எப்படி இருக்க?"

குரல் கேட்ட ஒரு நொடி என் வயிற்றிலிருந்து தொண்டைக்கு பல பட்டாம்பூச்சிகள் சிறகடிதத்தது.அவற் வாயால என் பெயர் எத்தனை இனிமை.எப்படி இருக்க இதென்ன கேள்வி.. தண்ணீர் பிரிந்த மீன் எப்படி இருக்கும். எண்ணவோட்டம் குறைவதாய் இல்லை.கண்ணீரும் அடங்கவில்லை."கயல் கயல்"

"ஆங் சொல்லுங்க.."

"என்ன சிந்தனை...."

"இப்போதைக்கு எண்ணங்கள் மட்டும் தான இருக்கு"

"கயல் உன்னை சந்திக்கனும்...நாளைக்கு ...முடியுமா?"

"என்ன அனுமதி கேட்கறீங்க..என்றைக்கு முடிவுகள் உங்களுடையது தானே"

"கயல் ப்ளீஸ்.. காயப்படுததாதே...நாளை மறுநாள் நான் கிளம்பறேன்.அதுக்கு முன் உன்னை பார்க்கனும் பேசனும்"

என்ன பேசப்போகிறாய் இன்னம் எவ்வளவு தூரம் காயம் உள்ளது என்று ஆராயப்போகிறாயா...மனதில் எண்ணிய நேரம் அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

"கயல் உன்னை பார்ககனும் உன் அறிவழகனுக்காக...வரமுடியுமா"அவன் குரலில் ஒரு விம்மல்.

"ம்ம்ம்ம எங்கே?"

"கதிர் வீடு?"

"ம்ம்ம்ம்"

நீண்ட மௌனம்.

"வேற எதும் பேசமாட்டியா?"

"என்ன பேச அதான அன்னைக்கே எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களே"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"கயல் கோபம் வேண்டாம்"

"அந்த உரிமை கூட எனக்கு இருக்கா?"

"என்னிடம் உனக்கு எல்லா உரிமையும் எப்போதும் இருக்கு கயல்"

"உங்களுக்காக நான் காத்திருப்பது தவிர அப்படி தானே"

"......கயல்விழி"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.