(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 08 - மஹா

enathuyire

ன்பு வேலையில் சேர்ந்து நான்கு மாதம் முடிந்திருந்தது. அவன் வேலையில் காட்டும் ஆர்வம், அவனின் திறமை அவனுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நன்மதிப்பை ஏற்படுத்தி தந்தது. ஒரு ஒரு மாத சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்து கட்டில், கிரைண்டர், மிக்ஸி என வீட்டிற்கு தேவையானவற்றையும் தமிழின் வேலையை சுலபம் ஆக்கும் இயந்திரங்களும் வாங்கினான். நான்காம் மாதம் சம்பளம் வாங்கியவன் தமிழுக்கென்று ஒரு கைபேசி வாங்கினான். 

"தமிழ்... நீ வீட்ல தனியா இருக்க. எதாவது என் கிட்ட அவசரமா பேசணும்னா இது கண்டிப்பா தேவைப்படும் அதான் இத வாங்கினேன். இதோ இங்க பாரு இதுக்குள்ள போயிட்டு ஆன் பண்ணா ரேடியோ கூட கேக்கலாம். நீ வேலையெல்லாம் முடிச்சுட்டு போர் அடிக்கும் போது இதுல எப்.எம் ல கேக்கலாம்"

என்று அவளுக்கு அனைத்தையும் கற்று கொடுத்தான்.

எப்.எம் கேட்டு கொண்டே இரவு உணவை சமைத்து கொண்டிருந்தாள் தமிழ். அந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் பற்றியும் அவர்களோடு இருந்த மகிழ்ச்சியான தருணம் பற்றியும் தொடர்பில் வரும் நேயர்களிடம் கேட்டு கொண்டிருந்தார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

அதை கேட்ட தமிழ் பழைய நினைவுகளை புரட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அன்பு மோட்டார் கொட்டாய்க்கு அருகில் இருக்கும் வீட்டில் தான் வசித்து கொண்டு இருந்தான். அவனுக்கு தேவையான உணவை தமிழே எடுத்து சென்று பரிமாறிவிட்டு வருவாள். அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனது துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என அணைத்து வேலைகளையும் இழுத்து போடு செய்வாள். அப்படி ஒரு நாள் அவனுக்கு உணவு கொண்டுசென்றவள் அவன் குளித்து கொண்டிருப்பதை அறிந்து அவனுக்கான உணவை வீட்டில் வைத்து விட்டு வெளியே வந்தாள். அப்போது வயக்காட்டிற்கு வேளைக்கு சென்றுகொண்டிருந்த சில பெண்கள் அந்த பக்கம் சென்றனர். அதில் ஒரு பெண்மணி (அம்பிகா),

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"என்ன தமிழு உன் மாமனுக்கு சாப்பாடு குடுக்க வந்தியா?"

"ஆமா கா"

"சரி சரி"

அதில் இன்னொரு பெண்மணி,

"தமிழு என்ன இவ இப்டி சொல்றான்னு நினைக்காத உன் மாமன் காலேசு போய் லா படிக்கிறான். அவன் மனசுல என்ன இருக்குனு தெரியாம நீயா ஏதும் கற்பனை பண்ணிக்காத..." என்று மனதில் தோன்றியதை பட்டென்று கூறி விட்டார்.

"சுமதி... என்ன பேச்சி பேசுற நீ?. அன்பு ஒன்னும் அப்டி நெனைக்கற பையன் இல்ல. தேவையில்லாம பேசி அவளை ஏன் கஷ்டப்படுத்துற?", அம்பிகா.

"இல்ல அம்பிகா... மனசுல பட்டது சொன்னான்", சுமதி.

"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் வேலைக்கு நேரம் ஆகுது வா போலாம்", என்று சுமதியை அழைத்து சென்றார் அம்பிகா.

இதை கேட்டு கொண்டிருந்த தமிழால் தான் அழுகையை கட்டு படுத்த முடியவில்லை. இங்கு நடந்த அனைத்தையும் அன்புவும் கேட்டான். ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல்,

"தமிழ்... எப்போ வந்த?. ஏன் வெளியவே நிக்குற உள்ள வா எனக்கு பசிக்குது சப்புடலாம்" என்று கூறி விட்டு உள்ளே சென்றுவிட்டான்.

சட்டென்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு உள்ளே சென்று அவனுக்கு கொண்டு வந்த உணவை பரிமாறினாள். உணவு பரிமாறினாலே தவிர முகம் கலை இழந்து இருந்தது. இவை அனைத்தையும் கவனித்து கொண்டே உணவை உண்ண தொடங்கியவன்,

"நீ சாப்டியா தமிழ்?" என்றான்.

"ம்ம்ம்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"என்ன ம்ம்ம்...???. இந்தா..." என்று அவளுக்கு உணவை ஊட்டினான். என்றும் அவன் அவளுக்கு இப்படி உணவு ஊட்டியதில்லை, ஏன் தேவை இல்லாமல் அவளை நெருங்கியது கூட இல்லை. இதெல்லாம் தான் அன்புக்கு தன் மேல் காதல் இல்லையோ என்று தமிழுக்கு அச்சத்தை குடுத்தது. ஆனால் இன்று அவனே ஊட்டிவிடுகிறான். தமிழால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

"என்ன என்னையே பாக்குற அப்டி?. இன்னைக்கு நீயும் என் கூட சாப்புடு." என்று அவளிடம் ஒரு தட்டை நீட்டினான்.

"இல்ல மாமா நா அப்புறம் சாப்டுக்குறன் நீ சாப்புடு"

"தினம் இதான் சொல்ற இன்னைக்கு என் கூட சாப்புடு" என்று அவளுக்கான உணவை தட்டில் வைத்து அவள் கையில் திணித்தான்.

 இருவரும் உணவு உண்ட பின்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.