Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா

kalaba Kathala

ந்தவன மாளிகை

திங்கள் கிழமை

விடிந்தது.

வழக்கம் போல விடிகாலை ஆனதும் ராதா மெல்ல கண்விழித்தாள்.

”அய்யோ அத்தை எழுந்திருச்சிருப்பாங்களே டீ போடனுமே” என நினைத்தவள் பதறிக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நின்று 4 அடிகள் நடந்தபின் அந்த அறையின் அமைப்பைக் கண்டு சுற்றி முற்றி பார்த்துவிட்டு தனக்குத்தானே சிரித்தாள்.

”சீ இது நம்ம வீடு இல்லை, இது தேவியோட வீடு” என நினைத்தவள் மனது லேசாகி மெல்ல பால்கனி நோக்கி நடந்தாள். சூரிய வெளிச்சம் தன் மேல் பட்டாலும் பனிக்காற்று இன்னும் விலகாமல் அவளை தீண்ட ஆரம்பிக்க உடல் சிலிர்த்தாள்.

”ப்பா என்ன ஒரு குளிரு” என சொல்லிக் கொண்டே தோட்டத்தைப் பார்த்தாள். அங்கு ஒரு பெஞ்சில் முராரி படுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

”ஏன் இவரு அங்க படுத்திருக்காரு” என நினைத்தவள் உடனே அங்கிருந்து நடந்து அறைக் கதவை சத்தமில்லாமல் திறந்து வெளிப்பக்கமாக கிட்ட சாத்திவிட்டு அவசரமாக படியிறங்கி ஹாலுக்கு வந்தாள். சுற்றிலும் யாரும் இல்லை, சீதாவின் குரல் மட்டும் ஏதோ ஒரு மூலையில் கேட்டது. அரக்க பரக்க வாசல்கதவிற்கு ஓடியவள் அது திறந்திருக்கவும் நிம்மதியாகி மெல்ல வெளியே சென்றாள். அதற்குள் வேலையாட்கள் தங்கள் பணிகளுக்கு வந்திருந்தார்கள். வாசலில் இருவர் இருப்பதைக் கண்டு சற்று அதிர்ந்தவள் மெல்ல நடந்து படியிறங்கி தோட்டத்திற்குச் சென்றாள்.

அங்கு தோட்டக்காரனும் மலையப்பனும் முராரி படுத்திருப்பதைக் கண்டு அவரை எப்படி எழுப்புவது என ஆலோசித்துக் கொண்டு தங்கள் வேலைகளை செய்யாமல் ஷெட்டில் இருக்கும் மற்ற வேலையாட்களுடன் ஒரு மூலையில் நின்று பேசிக் கொண்டிருக்க அவர்கள் இருப்பதை கவனியாத ராதையோ ஓடிவந்து முராரியின் முன் நின்றாள்.

”இந்த கொட்டற பனியில எப்படி இவரால இங்க தூங்க முடியுது, குளிரலையா இவருக்கு” என நினைத்தவள் மெல்ல அவன் முன் குனிந்து

”முராரி முராரி எழுந்திருங்க” என சொல்ல அது அவன் காதுகளில் விழவேயில்லை

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ரொம்ப நல்லா தூங்கறார் போல இருக்கே, நேத்து நைட் இங்க பாடிக்கிட்டு இருந்தாரு, அப்படியே தூக்கம் வந்து தூங்கிட்டார் போல இப்ப என்ன செய்யலாம்” என பலமாக நினைத்தவள் மெல்ல தனது கையால் அவனது தோளை தொட்டு மெதுவாக உலுக்கினாள். அவன் மெல்ல ம்ம் என முனகவும் சந்தோஷமடைந்து இன்னும் பலமாக உலுக்கினாள்

”ம்ம்ம் ராதா” என அவன் கண்கள் திறவாமல் தனது பெயரை உச்சரிப்பதைக் கண்டு திகைத்தவள்

”முராரி எழுங்க” என அவள் சொல்லிவிட்டு விலகி நின்றாள். அவளது குரல் கேட்டதும் மெல்ல கண்கள் திறந்தான். எதிரில் கவலையாக நின்றிருந்த ராதாவைக் கண்டு பொக்கிஷத்தை பார்த்தது போல சிரித்து வைத்தான். அந்த சிரிப்பில் கவலை நீங்கி ராதாவும் சிரிக்கவே மெல்ல எழுந்தவன் அவளிடம் அவசரமாக நெருங்க அவள் விலக மீண்டும் அவளிடம் ஆசையாக நெருங்க அவள் பயத்தில் விலகவே அமைதியானான்.

”ஏன் என்கிட்ட வரமாட்டுங்கற ராதா” என அவன் கேட்க

”கொட்டற பனியில இங்க ஏன் படுத்திருக்கீங்க, குளிரலையா உங்களுக்கு” என கேட்க அவனோ

”நேத்து நீ பாட்டுக்கு பாடிட்டு உள்ள போயிட்ட, நீ திரும்பி வந்து பார்ப்பேன்னு நான் இங்க காத்திருந்தேன், எப்படி தூங்கினேன்னு தெரியலை தூங்கிட்டேன்” என சொல்ல அவளோ அதைக் கேட்டு வருந்தினாள்.

”சாரி என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்

”நீ ஏன் முதல்ல உள்ள போன”

“தாரா அக்கா வந்திருந்தாங்க, என்கூட படுத்து தூங்க வந்தாங்க, அவங்க இருந்ததால நான் வரலை தூங்கிட்டேன்” என அவள் மென்மையாகச் சொல்லவும் அவனோ

”உன் தாரா அக்காவுக்குத்தான் வேற ரூம் இருக்கே, அவள் ஏன் உன் ரூமுக்கு வரனும்”

“அக்காவுக்கு கொடுத்த ரூம் வசதியா இல்லையாம், அதான் இனிமேல என் ரூம்ல தங்கிடப்போறாங்கலாம்”

“என்னது” என உச்சபட்சமாக கத்தினான் முராரி

”ஏன் கத்தறீங்க அமைதியாவே பேச மாட்டீங்களா” என ராதா சத்தம் போட அவன் உடனே அமைதியாகி

”உன் அக்கா ஒண்ணும் உன் கூட தங்க வேணாம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”ஏன்”

”அவள் இருந்தா நான் எப்படி உன்னைப் பார்க்க வர்றது”

“அக்கா இருந்தா என்ன, உங்க மனசுல தப்பான எண்ணம் இல்லைன்னா ஏன் பயப்படறீங்க”

“யாரு நானா பயந்தேன், தேவையில்லாம உனக்கு ஒரு கெட்ட பேர் வரக்கூடாதுன்னு நினைச்சேன் அவ்ளோதான்”

“அப்படியா சரி இங்கிருந்தது போதும், வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு அவள் பக்கம் சென்று நின்றான். அவளோ

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாராணி 2019-02-25 18:29
அருமையான கதை முராரியும் ராதாவும் எப்போது நட்பாவார்கள் :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாvijayalakshmi 2019-02-25 18:28
super :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாsasi 2019-02-22 13:41
thanks mahi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாmahinagaraj 2019-02-22 11:12
ரொம்ப அழகு தோழி... :clap: :clap:
பாட்டும் செம.. :GL: :clap:
முராரி சூப்பர்.. :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாsasi 2019-02-22 11:07
Thanks madhu next time endha mistakum varathu thank youpa en kadhaiya padici comment moola ennai motivate senhathuku :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாmadhumathi9 2019-02-22 14:06
(y) :-) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகாmadhumathi9 2019-02-22 08:13
wow nice epi.oru siru thavaru irunthathu. Kattinen endru ezhuthuvathakkku kathinen ena irunthathu. :clap: :clap: 4 big epi.egarly waiting 4 next epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top