(Reading time: 15 - 29 minutes)

நிலாவிற்கு இன்னமும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் இப்போது இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இது ஒரு வழிதான் இருக்கிறது. எவ்வளவு டைம் கேட்கலாம் 2, 3 வருடம் கேட்டால் totalஆ நோ சொல்லி இப்போவே மாப்பிளை பார்க்கனு நு சொன்னாலும் சொல்லிடுவாங்க. 1 year கேக்கலாம். அதுதான் சரி. எப்படியாவது ஒரு வருடம் time வாங்கிவிட்டால் அதற்குள் தன் மனதுக்குப் பிடித்தவனை பார்த்து விடலாம். இல்லை என்றாலும் வேறு ஏதாவது யோசித்து அப்போது மீண்டும் escape ஆகி விடலாம்.

நிலா பலமான யோசனையில் இருக்கும் போது, சிவகாமியும் சங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதுவும் பேசவில்லை.

நன்றாக யோசித்த பிறகு நிலா பேச ஆரம்பித்தாள். “சரிங்கபா. நீங்க சொல்றத நான் ஒத்துக்கிறேன். ஆனால் எனக்கு 1 year time வேணும் பா.” என்று கூறி தன் தந்தையின் பதிலுக்காக நிறுத்தினாள்.

சற்று யோசித்த அவர், “சரி மா. நீ கேட்டது போலவே 1 year time தறோம். அதுவரையிலும் உன்னிடம் நாங்க கல்யாண பேச்சை எடுக்க மாட்டோம். இன்னும் மூன்று மாதத்தில் உனக்குப் பிறந்த நாள். உன்னுடைய அடுத்த பிறந்த நாளில் நீ உன் கணவரோடு சேர்ந்து தான் எங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும். 1 யியர் கழிச்சி கல்யாணம் வேண்டாம் அது இது நு நீ சொல்லக் கூடாது. ஓகேவா” என்றார் சங்கர்.

இவ்வளவு சுலபமாக முடியும் என்று நிலா நினைக்கவில்லை. இப்போதைக்குத் தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டு “சரிப் பா. நான் ஒத்துக்கிறேன். Thanks for understanding me” என்று கூறி அவரைக் கட்டி அனைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் நிலா உள்ளே தன் அறைக்குச் சென்றாள்.

“என்னங்க இது, அவளும் சின்ன குழந்தை மாதிரி பேசுறா நீங்களும் அவ பேச்சை கேட்டுட்டு சரி நு சொல்றீங்க.” என்றார் சிவகாமி கவலையுடன்.

“இப்போ கல்யாணம் வேண்டாம் நு சொல்ற பொண்ணுக்கிட்ட வேற என்ன சொல்றது. அவ கல்யாண விஷயம். அவளுக்கே அதில் விருப்பம் இல்லனா நாம எப்படி கட்டாய படுத்த முடியும். அப்படிக் கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்து வைத்தாலும் அவ சந்தோஷமா இருப்பா சொல்லு” என்றார் சங்கர்.

“நல்ல சம்பந்தம்ங்க இது. நல்ல குடும்பம், நல்ல பையன், ஜதகம் கூடப் பார்த்து பத்து பொருத்தம் நல்ல பொருந்திருக்கு நு சொன்னாங்க. அமைஞ்சா நல்லா இருக்கும் நு தோனுச்சி” என்று தன் மனக் கவலையை வெளிப்படுத்தினார் சிவகாமி.

“நீ சொல்றது எல்லாம் சரிதான் சிவகாமி. 10 பொருத்தம் அமஞ்சாலும், கட்டிக்க போறவங்க சம்மதம் தானே முக்கியம் அது இல்லாமல் என்ன பண்ண்றது. எது நடக்கனு நு இருக்கோ அது நடக்கும். நீ மனசைப் போட்டு கூழப்பிக்காத. நான் அவங்க கிட்ட இப்போதைக்கு வேண்டா நு நாளைக்கு சொல்லிடுறேன்” என்று சிவகாமியை சமாதானம் செய்தார்.

(ரகுவின் இல்லத்தில்)

அப்போது தான் ரகு வீட்டினுள் நுழைந்தான்.

“அம்மா, சாப்பிட எதாவது குடுங்க மா” என்று கூறிக் கொண்டே sofaவில்அமர்ந்தான் ரகு.

ரகுவின் தந்தை பார்த்துக் கொண்டிருந்த டீவியை நிறுத்திவிட்டு “என்ன பா இவ்வளவு நேரம்” என்று அக்கரையோடு கேட்டார். அதற்குள் ஒரு தட்டில் சில தின்பண்டங்களோடு சேர்த்து காபி டம்லரையும் ரகுவிடம் கொடுத்தார் பானுமதி.

“வேளை முடியக் கொஞ்சம் time ஆயிடுச்சிப்பா. அதற்குள் சாம் கீர்த்தி எல்லாம் வந்தாங்க அதான் பேசிக்கிட்டு இருந்ததுல time ஆயிடுச்சி பா” என்று காபி குடித்துக் கொண்டே விளக்கம் கூறினான் ரகு.

“சரி பா சாப்பிடு” என்று கூறிவிட்டு அமைதி ஆனார் நாகராஜன்.

காபி குடித்து சிறிது தின்பண்டங்களையும் சாப்பிட்டு விட்டு நன்றாக சோப்பாவில் சாய்ந்து அமர்ந்தான் ரகு. சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தார் அவன் தந்தை ஆனாலும் எதுவும் பேசவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சற்று நேரம் அப்படி இருந்து விட்டு, தன் தாயை அழைத்தான் ரகு. “அம்மா வாங்க இங்க ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”.

பானுமதியும் வந்து நாகராஜன் பக்கத்தில் அமர “எனக்கு இப்போ இந்தக் கல்யாணம் எல்லாம் வேண்டாம் பா” என்றான் ரகு.

அந்த வார்த்தை ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல. ஆனாலும் அவர்கள் கடமை “ஏன்” என்று கேட்காமல் இருக்க முடியாது.

“ஏன் பா வேண்டானு சொல்ற, நீ இன்னும் அந்த பொண்ணு போட்டோவ கூட பார்க்களையே. ஒரே ஒரு முறை போட்டோவ பாரு கண்டிப்பா உனக்கு அந்த பொண்ண பிடிக்கும்” என்று கூறிக் கொண்டே போட்டோவை எடுக்க எழுந்தார் பானுமதி.

“அம்மா பிளிஸ் உக்காருங்க. நான் இந்த பொண்ணு பிடிக்கலனு சொல்லல. எனக்கு அரேஞ் மேரேஜ் செட் ஆகாது நு தான் சொல்றேன். எனக்கு அரேஞ் மேரேஜ் எல்லாம் வேண்டாம் பா. Please try to understand me.” என்று தன் விருப்பத்தைப் புரிய வைக்க முயற்சிதான் ரகு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.