(Reading time: 15 - 29 minutes)

“ரகு எங்களுக்கும் தெரியும் நீ லவ் மேரேஜ் செய்யத்தான் அசை படுர, அதுக்கும் நாங்க ஓகே சொல்லி பல நாள் ஆச்சே. ஆனாலும் நீ உன் கல்யாணத்தை தல்லி போடுறத பார்த்துக்கிட்டு நாங்க பொறுமையா இருக்க முடியுமா. அது அது கால காலத்தில் நடக்கனும். உனக்கும் வயசு ஆகிட்டே போகுது. அது மட்டும் இல்லாமல் இப்போ வந்திருக்க பொண்ணு நீ நினைக்கிற மாதிரி தான் இருப்ப நு எனக்கு தோனுது. நல்ல குடும்பம், பொண்ணும் அழக உனக்கு நல்ல ஜோடியா இருக்கும் பா” என்று நாகராஜன் தன் பக்க நியாயங்களை விலக்கினார்.

“எனக்கு ஏற்றப் பெண்ணா இருக்க சான்ஸே இல்ல. அப்படி இருந்திருந்தா இப்படி அரேஞ் மேரேஜ்க்கு போட்டோ கொடுக்கவே சம்மதித்திருக்க மாட்ட. இதிலயே தெரிய வேண்டாமா அந்த பொண்ணு எனக்கு செட் ஆக மாட்டானு” என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான் ரகு.

“அப்பா எனக்கு 27 வயசுதான் பா ஆகுது. 30+ ஆன மாதிரி பேசாதிங்க பா” என்று சலித்துக் கொண்டே கூறினான் ரகு.

“correct தான் ரகு, நாங்களும் அத தான் சொல்றோம், இப்போ உனக்கு 27 தான் ஆகுது. ஆனால் உன் விருப்ப படி விட்டால் 30+ ஐ தாண்டி விடுவியோனு பயமா இருக்கு. அதனால்தான் சொல்றோம்” என்றார் நாகராஜன். அவரும் விடுவதாக இல்லை.

“ரகு நாங்க சொல்றத கேளு டா, நாங்க உனக்கு நல்லதுதான் சொல்லுவோம். புரிஞ்சிக்கோ” என்றார் பானுமதியும்.

“நீங்க ரெண்டு பேரும்தான் புரிஞ்சிக்க மாட்டெங்குரீங்க மா. எனக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை செஞ்சி வைத்த நான் நல்லா இருப்பேன் நு நீங்க எப்படி நினைக்கிறீங்க” என்று எதிர் வாதம் செய்தான் ரகு.

“உனக்கு விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கோ நு நாங்க சொல்லல ரகு. முதல பெண்ணு போட்டோவ பாரு. உனக்கு பிடிச்சிருந்தா ஜதகம் எல்லாம் பார்த்து, அந்த பெண்ணு விட்டிலேயும் பேசிப் பார்ப்போம். வேண்டும் என்றால் நீயும் அந்த பொண்ணும் தனியா சந்தித்து பேசி பாருங்க. அப்போ உனக்கு விருப்பம் இருந்தா மேற் கொண்டு தொடரலாம் இல்லனா வேணாம்” என்று அவன் கேள்விக்கு பதில் அளித்தார் நாகராஜன்.

“அப்பா எனக்குக் கல்யாணம் வேண்டாம் நு நான் சொல்லல. இப்போ நீங்க சொன்னீங்களே ஜாதகம், சம்பர்தாயம் நு, அந்தக் கல்யாணம் தான் வேண்டானு சொல்றேன். உங்களுக்கு என்ன எனக்குக் கல்யாணம் நடக்கனும் அவ்வளவுதானே. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் “ என்று இக்கு வைத்தான் ரகு.

என்ன சொல்ல வருகிறான் என்று அவனைப் பார்த்தார்கள் நாகராஜனும் பானுமதியும்.

“ஆனால் இப்போ இல்ல, கண்டிப்பா இந்த பொண்ணு இல்ல. எனக்கு ஒரு 2 year டைம் வேணும்” என்றான் ரகு.

இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்னபா இப்படி சொல்ற, இப்போ வந்திருக்கிற சம்பந்தம் நல்ல இடம். பொண்ணும் மகாலட்சுமி மாதிரி இருக்க” என்று பானுமதி கூறிக் கொண்டு இருக்கும் போதே, “அம்மா please மறுபடியும் ஆரமிக்காதீங்க” என்றான் ரகு.

நாகராஜனுக்கு புரிந்தது, ரகு ஒரு முடிவு எடுத்து விட்டான் அதில் இருந்து மாறமாட்டான் என்று, இருந்தாலும் அவனை அப்படியே விட்டு விட முடியாது. ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

“சரி ரகு, உன் விருப்பத்துக்கு மாற நாங்க உனக்குக் கல்யாணம் செய்து வைக்க முடியாது. உனக்கு இந்த பொண்ணு வேண்டாம் என்று சொன்னால் நாங்க வற்புறுத்தவில்லை. ஆனால் 2 வருடம் எல்லாம் உனக்கு time கொடுக்க முடியாது. இன்னும் 3 மாசத்துல உனக்குப் பிறந்த நாள். உன்னோட அடுத்த பிறந்த நாள் குல்ல உனக்குக் கல்யாணம் முடிந்திருக்கனும். பொண்ண நீ பார்த்தாலும் சரி, அப்படி உன்னல முடியலனா” என்று இக்கு வைத்து நிறுத்தினார் நாகராஜன்.

என்ன என்பது போல் ரகு அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நாங்க சொல்ற பெண்ணை எந்த மறுப்பும் சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்கனும்” என்றார் நாகராஜன்.

இதை ரகு சற்றும் எதிர் பார்க்க வில்லை. “அப்பா, அது எப்படி யாருநு முன்ன பின்ன தெரியாத ஒரி பொண்ண நீ சொல்றீங்க நு கல்யாணம் பண்ணிக்க முடியும். அது என்னல முடியாது” என்றான்.

“ஏன் ரகு முடியாது. நானும் உங்க அப்பாவும் கல்யாணத்திற்கு முன்னாடி ஒரே ஒரு முறைதான் பார்த்தோம். நாங்க இத்தனை வருசம் சந்தோஷமா இல்லையா” என்றார் பானுமதி.

“ஐயோ அம்மா, நீங்க சந்தோஷமா இல்ல, அரேஞ் மேரேஜ் தப்புனு நான் சொல்ல வரல. எனக்கு அரேஞ் மேரேஜ் செட் ஆகாது நு தான் சொல்றேன்.” என்றான் ரகு.

“ரகு நீ எதனால அரேஞ் மேரேஜ் வேணானு சொல்றனு எனக்கு தெரியல. சரி அத விடு. இவ்வளவு நாள் நீ சொன்னதற்கு நாங்க ஒத்துக்கிட்டோம். இப்போ கூட நீ கல்யாணம் வேண்டானு சொல்றதுக்கு நாங்க சரினு சொன்னோம். அதே போல் எங்களைப் பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார்.” என்றார் நாகராஜன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.