(Reading time: 15 - 29 minutes)

“ரகு நாங்க உன்னை பெத்தவங்கடா. உனக்கு கெடுதலான ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டோம். உனக்கு ஏத மாதிரி ஒரு பெண்ணதான் பார்த்து உனக்குக் கட்டி வைப்போம்” என்றார் பானுமதி.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சற்று நேரம் யோசித்தான் ரகு. எப்படியும் ஒரு வருடம் டைம் கெடச்சிருக்கு. அதுகுல்ல நமக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண கண்டிப்பா பார்த்துவிடுவோம். அப்படியே முடியவில்லை என்றாலும், இவங்க அதுக்கபறம் ஒரு பொண்ண பார்த்து அப்படி இப்படி னு நாம கேட்ட timeஆ வாங்கிடலாம். இப்போதைக்கு ஓகேனு சொல்லி வைப்போம் என்று முடிவு செய்தான்.

“சரிங்க பா, நீங்க சொல்றதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்றான் ரகு.

பானுமதிக்கு இந்தச் சம்பந்தம் miss ஆனதில் சிறு வருத்தம் இருந்தாலும் தன் மகன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

“Good ரகு. நீ கேட்ட மாதிரி டைம் கொடுத்துட்டோம். தாராலம உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பெண்ணை தேடு. அதே சமயத்தில் நாங்களும் உனக்குப் பெண் தேடுறோம், உன் விருப்பத்திற்கு ஏற்றவாறே. இரண்டில் எது நடந்தாலும் எங்களுக்குச் சம்மதம் தான். ஆனால் அடுத்த வருடம் உனக்குத் திருமணம் முடிந்திருக்க வேண்டும்” என்றார் நாகராஜன் அழுத்தம் திருத்தமாக.

“சரி பா. உங்க விருப்ப படியே” என்று தன் தந்தையை பார்த்துக் கூறிவிட்டு, தன் தாயிடம் திரும்பி “அம்மா எனக்கு dinner வேண்டாம், பசிக்கல. நான் போய் தூங்கப் போகிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்றான். ஆதற்கு மேல் அங்கே உட்கார்ந்து இருக்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

அவன் எழுந்து சொல்லும் போது அவனைச் சாப்பிட வற்புறுத்த பானுமதி முற்பட்டார். ஆனால் நாகராஜன் அவர் கையை பற்றி, வேண்டாம் என்பது போல் செய்கை செய்தார். பானுமதி அவன் தலை மறையும் வரை அமைதியாய் இருந்து விட்டு “பசியில் படுத்திடுவான், ஒரு வாய் சாப்பிட சொல்லிருக்கலாம்” என்றார்.

“இல்ல மா, அவனைக் கொஞ்சம் தனியா விடு” என்று மட்டும் கூறினார் நாகராஜன்.

“ஏங்க, அவனும் இப்போ கல்யாணம் வேண்டாம் நு சொல்றான் நீங்களும் ஒரு வருசம் நு டைம் சொல்றீங்க” என்று தன் மனதில் அடக்கி வைத்திருந்த கவலையை கொட்டினார் பானுமதி.

“இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொல்றவனிடம் வேற என்ன பண்ண சொல்ற. சிறு குழந்தையா அவன். அடித்து மிரட்டி கல்யாணம் செய்து வைக்க. அது மட்டும் இல்லாமல், இது அவன் வாழ்க்கை விஷயம் அவன் விருப்பம் இல்லாமல் நாம் எந்த முடிவையும் எடுக்க முடியாது. கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கனும். நீ ஒண்ணும் கவலைப் படாதே அடுத்த வருடத்திற்குள் அவனுக்கு எப்படியும் கால் கட்டு போட்டிடலாம்” என்றார் நாகராஜன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்னமோங்க, இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்குரதுக்குல்ல ஒரு வழி ஆயிடுவோம் போல” என்று சலித்துக் கொண்டார் பானுமதி.

ஒரு சிறு சிரிப்போடு “அதெல்லாம் நல்ல படியா நடக்கும். நீ கவலைப் படாதே. போய் சாப்பாடு எடுத்து வை மா” என்றார் நாகராஜன்.

ரகு, வெண்ணிலா இருவரும் அவரவர் படுக்கையில் சாய்ந்தனர். அன்று அவர்களுடைய பெற்றோருடன் நடந்த அந்த விவாதம் அவர்கள் மனம் முழுக்க நிறைந்திருந்தது.

இருவர் மனதிற்க்குல்லும் “நம்ம அப்பா அம்மா சொல்றதும் correct தான். அவங்க கவலைக்குக் காரணம் நம்ம மேல இருக்கிற அக்கறைதான். ஆனாலும் நம்ம வாழ்க்கை விஷயம். அதில் நாம் compromise பண்ணிக்க முடியாது. இந்த ஒரு வருடத்தில் எப்படியாவது என் மனசுக்கு பிடிச்ச துணையா சந்திச்சிடனும்”.

அப்படி சந்திக்கலனா?    

தொடரும்

Episode # 02

Episode # 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.