Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகா

Kaanum idamellam neeye

வனியின் நாட்டியம் நன்றாக இருந்தது, வீணையின் வாசிப்பும் அருமை என அனைவரும் பாராட்ட அவர்களிடம் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம். கதிரோ மேடையை விட்டு இறங்கிய அவனிசுந்தரியிடம் ஆசையாகச் சென்றான்

”அற்புதமான நடனம்” என்றான் அதைக்கேட்டு அவனை முறைத்தாள் அவனி

”உனக்காக நான் ஆடலை”

“தெரியும் கடவுளுக்காகத்தானே ஆடின”

“இல்லை”

”வேற” என்றான் சந்தேகமாக, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு நேராக நாகேந்திரனிடம் சென்றாள். அவளது செயலைக் கண்டு திக்பிரமையுடன் நின்றான் கதிரோவியன்.

தன்னிடம் வந்துக் கொண்டிருந்த அவனியைக் கண்ட நாகேந்திரனோ சட்டென அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்து மண்டபத்தை விட்டு வெளியேறி நின்றான். அந்நேரம் மழை மேகம் திரண்டு திடீரென இடி இடிக்கும் சத்தம் கேட்டது.

”மழை வரும் போல இருக்கு சீக்கிரமா கிளம்பனும்” என நினைத்தபடியே கோயிலை விட்டு செல்ல முயன்றவனைத் தடுத்தார் சிதம்பரம்

”எங்க போற”

”மழை வரும் போல இருக்கு, நான் கிளம்பறேன்”

“இரு நாங்களும் வர்றோம்” என சொல்லியவர் பக்கத்தில் அவனியிருப்பதைக் கண்டு

”இவளுமா முடியாது நான் என் வண்டியில இவளை ஏத்திக்க மாட்டேன்” என நாகேந்திரன் சொல்ல அவரோ

”அப்படின்னா சரி நாங்க முதல்ல போறோம், நீ இங்கயே இரு வண்டியை திருப்பி அனுப்பி விடறேன்”

“என்ன விளையாடறீங்களா நான் யார்ன்னு தெரியுமா, என்கிட்ட நீங்க அடங்கி இருக்கனும், என்னை நீங்க அடக்க முயற்சி செய்யாதீங்க” என அவன் சொல்லும் போதே மழை வந்துவிட்டது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அப்பா மழையில எப்படி நாம வீட்டுக்கு போறது” என அவனி கவலையாகக் கேட்கவும் அந்நேரம் ஐயர் வந்தார், வந்தவர் சிதம்பரத்திடம்

”எங்க போறேள்” என கேட்க சிதம்பரமோ

“வீட்டுக்குத்தான்”

“உங்க பொண்ணோட நாட்டியம் அபாரமா இருந்தது. உங்க பொண்ணு நாட்டியத்தை பார்த்த மத்த பொண்ணுங்களும் நாட்டியம் ஆட ஆசைப்படறாங்க, அதுக்கு நீங்கதான் வீணை வாசிக்கனும் செத்த வாங்கோ” என அழைக்க அதற்கு சிதம்பரமோ

”ஆனா இவளை எப்படி தனியா அனுப்பறது” என சொல்ல அதற்கு ஐயரோ நாகேந்திரனைக் காட்டி

”நம்ம ஐயா இருக்கறப்ப என்ன கவலை, உங்க பொண்ணை பத்திரமா அவர்கூட அனுப்பி வையுங்கோ” என சொல்ல அவனி மகிழ்ந்தாள். நாகேந்திரனோ நொந்தே போனான்.

”முடியாது” என அவன் கத்த சிதம்பரமோ

”உன்கிட்ட யார் அனுமதி கேட்டா, நீயா அவளை தூக்கி சுமக்கப் போற, உன் வண்டிதானே சுமக்கப் போகுது” என சொல்ல

”என்னை ஜெயில்ல தள்ள ஆசைப்படறீங்க, எந்த நம்பிக்கையில உங்க பொண்ணை என்கூட அனுப்பறீங்க, நான் ஏதாவது அவளை செஞ்சிட்டா என்ன செய்வீங்க” என கேட்க சிதம்பரமோ பலமாகச் சிரித்துவிட்டு

”உனக்கு பொண்ணுங்களையே பிடிக்காது, உன்னால என் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வராது, பொண்ணுங்க விசயத்தில நீ உத்தமன்னு எனக்குத் தெரியும், அந்த நம்பிக்கையிலதான் அவனியை அனுப்பறேன், மத்தபடி நீ செய்ற மத்த விசயங்களுக்கும் உனக்கு துணையா நான் இருப்பேன்னு மட்டும் கனவு கூட காணாத” என சொல்ல அவனோ கோபமாக முறைத்துவிட்டு கதிரைப் பார்த்தான்

”கதிர் வா போலாம், அவளையும் கூட்டிட்டு வா” என கத்த சிதம்பரமோ

”அவனைத்தான் நீ வேலையை விட்டு விரட்டிட்டல்ல, இப்ப எதுக்கு அவனை கூப்பிடற, அவன் எனக்கு உதவியா இருப்பான், நீ அவனியை கூட்டிட்டுப் போ” என சொல்லியவர் கதிரைப் பார்த்து

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”கதிர் வா போலாம்” என அவனை அழைத்துக் கொண்டு மண்டபத்துக்குள் நுழைய கதிரோ திரும்பி திரும்பி அவனியையே பார்த்தபடி செல்வதைக் கண்ட நாகேந்திரனோ பெருமூச்சுவிட்டப்படியே தன் எதிரில் நின்ற அவனியை பார்த்தான்

”பாவம் கதிர் உன் மேல ஆசை வைச்சிருக்கான்” என சொல்ல அவளோ

”ஆனா எனக்கு உங்க மேலதான் காதல் வருது” என சொல்ல அவளை அந்நேரத்தில் திட்டக்கூட மனமின்றி அமைதியாக அவ்விடம் விட்டு நடக்கலானான் நாகேந்திரன்.

அவனுக்கு பக்கத்தில் யாருமே சரிசமமாக நடப்பதில்லை, நடக்கவும் விடமாட்டான் ஆனால் இன்று தனக்கு பக்கத்தில் நடந்து வந்த அவனியை விரட்ட கூட மனமின்றி அலைபாயும் மனதுடன் மழையில் நனைந்தபடியே குதிரை வண்டியிடம் சென்று நின்றான்.

முதலில் அவன் ஏறியதும் பின்னால் அவளைப் பார்த்தான்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Kaanum Idamellam NeeyeArulMathi 2019-03-01 13:48
I think that recording is Meenu's appa story
Reply | Reply with quote | Quote
# RE: Kaanum Idamellam Neeyesasi 2019-03-02 12:48
Quoting ArulMathi:
I think that recording is Meenu's appa story

நன்றி அருள்மதி உங்க யூகம் சரியா தப்பான்னு போக போக தெரிஞ்சிடும் தொடர்ந்து படிச்சிட்டு வாங்க கமெண்ட் தந்தமைக்கு நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாmadhumathi9 2019-03-01 13:47
:clap: eesvaran meenaatchi iruvarum sernthu vittaargal magizhchi. (y) but niranjan manam veru maathiri yosikkuthey.but niranjan avat annan mel vaithirukkum paasam wow awesome solla vaikkuthu. :clap: (y) :thnkx: 4 this epi.waiting to read more. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாsasi 2019-03-02 12:47
Quoting madhumathi9:
:clap: eesvaran meenaatchi iruvarum sernthu vittaargal magizhchi. (y) but niranjan manam veru maathiri yosikkuthey.but niranjan avat annan mel vaithirukkum paasam wow awesome solla vaikkuthu. :clap: (y) :thnkx: 4 this epi.waiting to read more. :thnkx: :GL:

நன்றி மதுமதி நிரஞ்சனை நினைச்சா எனக்கும் பாவமாதான் இருக்கு ஆனா என்ன செய்றது மீனா மனுசுல இப்ப யார் இருக்காங்கன்னு அவளுக்கே தெரியலை பாவம் அடுத்த எபியில உங்களை சந்திக்கிறேன் பை தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாsasi 2019-02-28 20:29
ஆமாம் மகி மேம் எத்தனை நாள்தான் அவங்களோட சண்டையையே எழுதறது அதான் அவங்களை நட்பாக்கிட்டேன். கமெண்ட் தந்தமைக்கு நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாsasi 2019-02-28 20:28
நன்றி விஜி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாsasi 2019-02-28 20:28
மன்னிச்சிடுங்க ஆதர்வ் சேகருக்கு நடந்தது தவறுன்னு நீங்க நினைச்சா அதுக்கு சாரி கேட்டுக்கிறேன் அவனோட கெட்ட எண்ணங்களுக்கு இது நல்ல தண்டனைன்னு நினைச்சி எழுதினேன்பா ஓகேவா அப்புறம் ஆனந்தி விசயத்திலயா நோ ப்ராப்ளம் அதுக்கு நான் தீர்வு யோசிச்சி வைச்சிட்டேன் அதனால ஆனந்தியும் சரி நிரஞ்சனும் சரி தங்கள் ஆசை நிறைவேறலைன்னு கவலைப்படமாட்டாங்க தங்களது கமெண்ட் லவ்லியா இருந்தது நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாViji. P 2019-02-28 15:25
ஆஹா அருமை.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாmahinagaraj 2019-02-28 11:42
அச்சோ சூப்பர் தோழி.... :clap: :clap:
நாகவும்,அவனியும் அழகு.. :lol:
பார்ரா ஈஸ்,மீனுகுட்டியும் சேர்ந்துட்டாங்களா.. செம.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகாAdharvJo 2019-02-27 20:14
:dance: scene sinappa and meen's oru nala terms-k vandhachi :cool: wow sema interesting ma'am :clap: :clap: but indha violence mattum konjam avoid seithu irukalam munji vendhu poche :sad:

Awani and Naga scene-um very lively but ivanga love story ellam appo uthikidacho :Q: :hatsoff: Screen play simply superb (y)
Hope anandhi and baby bro ( ivanga manasula ippadi asai-a valarthu vitutingale :P ) understand the reality :yes: pavam idhai first fix panidunga Ji facepalm Ess audio kettu ena pana poraru?? THank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top