(Reading time: 11 - 21 minutes)

“உன் பெயர்.. என்ன அது.. சிவ..ஆஆ ஏதோ ஒன்று.. உன் உயிரை மாய்க்கப் போவதாய் யார் கூறியது? தென் பகுதியை  எங்கள் வசமாக்க கிடைக்கப் பெற்ற அரிய பொக்கிஷம் நீ. ஒரு வேளை உன் தந்தை அடிபணிய மறுத்தால் உனை நாங்கள் நாடு கடத்திச் செல்வோம்.பொன் பொருளை இழப்பதை விட மிகுந்த அவமானம் தன் குலப் பெண்ணை இழப்பது இல்லையா?”, என்றவனின் குரலில் அப்படியாய் ஒரு குரோதம் எட்டிப் பார்த்தது.

சிவகங்காவதியே ஒரு நொடி ஆடித்தான் போனாள்.சற்று நேரம் வரை தன் எதிர் பேச்சையெல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் இப்போது கோபத்தால் சிவந்து ஜொலித்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நஸீம் என் மகளை விட்டுவிடு…நான்..”

“தந்தையே!!!”

“மகளே உனை இந்த கயவர்களிடம் இழந்துதான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில் அப்படி ஒரு ராஜ்ஜியமே தேவையில்லை.”

“தந்தையே இது மிகப் பெரும் தவறு ராஜ்ஜியத்தை இழப்பது என்பது உங்களுக்கு சிறு  விடயமாய் இருக்கலாம்.ஆனால் சுய தேவைக்காக நாட்டை இவர்களிடம் அடகு வைப்பது என்பது எத்துனை கீழ்த் தரமான செயல் என்பதை உணரவில்லையா?”

“மகளே!!”

“தந்தையே உங்களுக்கு இப்போது வாக்களிக்கிறேன். இங்கிருந்து இவர்கள் எனை இழுத்துச் சென்றாலும் எனக்கு இவர்களால் எப்படிபட்ட இன்னல்கள் நேர்ந்தாலும் எத்துனை துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் உயிரினும் மேலான என் பெண்மைக்கு ஒருவராலும் சிறு கலங்கமும் வர விட மாட்டேன்.

அப்படி ஒரு சூழலில் சிக்க வேண்டிய நிலை வந்தால் சிறு தயக்கமும் இன்றி எனை நானே மாய்த்துக் கொள்வேன்.ஆகவே உங்களின் மகவு உயிர் நீத்துவிட்டதாய் நினைத்து எனக்கு செய்ய வேண்டிய ஈமக் காரியங்களை செய்துவிட்டு ஆக வேண்டியதை சென்று பாருங்கள்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஐயோ இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இன்னுமும் என் உயிர் எஞ்சியிருக்கிறதே!!!மகளே இந்த தண்டனையை எங்களுக்குத் தராதே!”

“தாயே உயிர் ஒன்றும் நமக்கு சொந்தமானது அல்ல.அது அந்த ஈசனுடைய சொத்து.நமக்காக பரிசாய் இந்த பிறவியை அளித்த அவனுக்கே தெரியும் அதை எப்படி எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமென.

.தயை கூர்ந்து நான் கூறுவதை கவனியுங்கள்,மணிமேகலை இருக்கிறாள் தங்களையும் நாட்டையும் பாதுகாக்க. எனக்கு விடை கொடுங்கள் மீண்டும் இப்பிறவியில் தங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே என் ஒவ்வொரு நிமிடத்திற்கான பிரார்த்தனையாய் இருக்கும்.”

“சிறு பிள்ளைப் போல் பேசிக் கொண்டிருக்கிறாய்.பிணைக் கைதி என்றால் உனை நாடுகடத்தி மூன்று வேளை உணவு வழங்கி சிறையில் வைத்து உனை பாதுகாத்துக் கொண்டிருப்போம் என்று நினைத்தாயா!!

ஆண்களின் நிலையே பரிதாபமாய் இருக்கும் அதிலும் நீ ஒரு பெண் அந்நிய நாட்டில் உன் நிலைமை.. அந்தோ பரிதாபம்.. ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்பதை உன்னைக் கண்டு புரிந்து கொண்டேன்.ஹா ஹா ஹா”,என்று கிட்டதட்ட கர்ஜித்தான் இஷான் நஸீம். 

தொடரும்...

Episode 03

Episode 05

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.