Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

ஒ நான் நேற்று இரவு வீட்டுக்கு வராததுதான் இவ்வளவு கோபமா ?? “  என்று நினைத்தவன் பின் அந்த கஞ்சியை குடித்து விட்டு தன் அறைக்கு சென்றான்..

பின் மீதி இருந்த உடற்பயிற்சிகளையும் முடித்து   வெளியில் செல்ல கிழம்பி கீழ வந்தான்..

மூன்று பெண்களும் டைனிங்க் டேபிலில்  இருந்தனர்...அகிலா எதையோ சொல்ல, மற்றவர்கள் சிரித்து கொண்டிருந்தனர்.. மதுவின் மலர்ந்த சிரிப்பை  கண்டதும் அவன் உள்ளே கோபம் பொங்கியது...வேகமாக அங்கு சென்றவன்

“காலையிலயே என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு??  ஏய் அகிலா..  சீக்கிரம் கொட்டிகிட்டு போய் படிக்கிற வேலையை பார் .. “என்று தங்கையை மிரட்டினான்..

இவன் வருவதை கண்ட உடன் மது தலையை கீழ குனிந்து கொண்டாள்... அகிலாவை திட்டியவன் டைனிங் டேபிலில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான்..

சிவகாமி அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்தார் அவன் முகத்தை கூட பாராமல்..

மற்ற இரண்டு பெண்களும் சத்தம் இல்லாமல்  தங்கள் தட்டை மற்றும் பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

தன் அன்னை இன்னும் தன்னிடம் பாராமுகமாக இருப்பதை கண்டு

“என்ன மா??.. மௌன விரதமா என்னிடம் மட்டும் ?? ” என்றான் அவரை பார்த்து..

சிவகாமியோ இவன் பக்கம் திரும்ப வில்லை...எவ்வளவுதான் சண்டைபோட்டாலும் அடுத்த நிமிடம் அவனிடம் பேசி விடுவார்... இதுதான் முதல் முறை தன்னிடம் முகத்தை திருப்பி வைத்திருப்பது... என்று நினைத்தவன் அப்பொழுதுதான் நேற்று வேறு அத்தனை பேர் முன்னாடியும் அவரிடம் கத்தியதும் நினைவு வந்தது.. அவனுக்கே அது கஷ்டமாக இருக்க,

“சாரி மா.. நேற்று ஏதோ டென்சன்ல அப்படி கத்திட்டேன்... அதோடு நேற்று இரவு வேலை இருந்தது..  அதான் போன் ஆப் பண்ணி வச்சுட்டேன்... “  என்று விளக்கம் கொடுத்தான்....

தன் மகன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதே ஆச்சர்யம் என நினைத்தவர் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியாமல்

“சரிடா.. இன்னைக்காவது நேரத்தோட வீட்டுக்கு வருவியா??  “ என்றார்  அதுவரை அமைதியாக இருந்தவர்...

“ஹ்ம்ம்ம் இன்றும் வேலை இருக்கு மா.. முடிஞ்சா சீக்கிரம் வர்ரேன்.. ”

“டேய் பெரியவா... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. உனக்காக வீட்ல ஒருத்தி காத்துகிட்டிருக்கா.. நீ இன்னும் வேலை வேலை னு சுத்திகிட்டிருந்தா எப்படி?? .. அதுவும் இன்று ஞாயிற்றுகிழமை.. இன்னைக்கு கூடவா உனக்கு லீவ் இல்லை?? ” என்று பொரிந்து தள்ளினார்...

அவரின் புலம்பலை கேட்டு இதுவரை கொஞ்சம் இறங்கி வந்தவன் மீண்டும் கிடுகிடுவென்று மலை ஏற ஆரம்பித்தான் கோபத்தில்

“மா.... இதுக்கு தான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு தலையால அடிச்சுகிட்டேன்.. என்னால நேரத்துக்கு எல்லாம் வீட்டிற்கு வர முடியாது.. மத்தவங்க மாதிரி பொண்டாட்டி பின்னாடி எல்லாம் சுத்த முடியாது.... இந்த மாதிரி கமிட்மென்ட் எதுவும் இருக்க கூடாது னு நான் இதுவரை கல்யாணம் வேண்டாம்னு மறுத்து கிட்டிருந்தேன் ...

எல்லாம் அந்த மகிழன் நாயால வந்தது...  கடைசி நேரத்துல அவன் என்னை இப்படி மாட்டி விட்டுட்டு ஓடிட்டானே... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...??  “ என்று பல்லை கடித்தான்..

பின் தன் அன்னையை பார்த்து

“பாரு மா .. இந்த கல்யாணமே நீ கெஞ்சி கேட்டதற்காக தான்.. அப்போதைக்கு வேற வழி இல்லாமல் இந்த பிசாசு கழுத்துல தாலி கட்டினேன்.. அதுக்காக எல்லாம்  என்னால மாற முடியாது.. நான் எப்பவும் போலதான் இருப்பேன்..

எப்ப வேணும்னாலும் வருவேன்...  எப்ப வேணும்னாலும் போவேன்..  என்னை கட்டுபடுத்த நினைச்சீங்க.. நேற்று சொன்னது தான் இன்றும் அந்த ஓடிப்போனவன் மாதிரி நானும் எங்கயாவது போய்டுவேன்.. நினைவு இருக்கட்டும்... ” என்று கத்தியவன் பாதியில் எழுந்து கை கழுவிவிட்டு வேகமாக வெளியேறி சென்றான்...

அவன் கத்தியதை கேட்டதும் சிவகாமியின் கண்கள் கலங்கியது..

மதுவோ உறைந்து போய் அமர்ந்து இருந்தாள்..

ஒரே பிள்ளையாக பிறந்ததால் அவள் வீட்டில் அவளை எதற்கும் அதிர்ந்து திட்டியதில்லை... அவர்கள் பெற்றோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து அன்போடு இருப்பர்.. அவங்க வீட்டில் இந்த மாதிரி சத்தம் எல்லாம் வந்ததே இல்லை....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதுவும் சண்முகமும் சாரதாவும் யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டார்கள்.. அதுவும் மதுவிடம் எப்பவும் கொஞ்சல் தான்...இந்த மாதிரி யாரும் கத்தி அவள் பார்த்ததில்லை  

முதல் முறையாக தன் அம்மாவிடமே தன் கணவனாகியவன் கத்துவதை கண்டு பயந்து நடுங்கினாள்...

அகிலாவுக்கு இதெல்லாம் பழகியது என்பதால் அவள் பாட்டுக்கு அவள் வேலையான சாப்பிடறதில்  மும்முரமாக இருந்தாள்... .

பத்தாதற்கு

“அம்மா.. இந்த சட்னி சூப்பர்.. இன்னும் கொஞ்சம் வையேன்... ” என்றாள் சிவகாமியை பார்த்து..

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE:KNP?Mary mohana 2019-03-18 01:21
Nice update mam :clap: friendly& modern mameyar, cute Nathanar Sama :-) madhu soo lucky :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிAdharvJo 2019-03-15 23:02
Aunty indha shocku podhuma innum konjam venuma :dance: :D siva aunty is sema modern mom but konjam traditional MIL ;-) Amma-nu kettu kettu pulichi pochama….healthy food-i kurai telling :eek: enada nadakudhu Inga :grin: vels eppadi silent aga irukaru :Q: Padmini ma'am Nikil konjam adaki vasika sollunga ethukku ippadi ellar melyum neruppa visuraru 3:) Aki's presence was :cool: Nice update ma'am :clap: :clap: thank you and look forward to read next epi. Apro adhu ena ninga counter kudukuringa Niki parthu :D Ivarukkum konjam unga style la training kudunga ivarum ellam new mapillai mathiri kalakuvaru 8)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிPadmini 2019-03-16 07:50
:-) Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிsaaru 2019-03-15 13:32
Nice update paddu..
Vels atatha mathitaru pola..
Nikila nee romba pandra po
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிPadmini 2019-03-15 22:45
:thnkx: saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிViji. P 2019-03-13 17:10
Akila madhiri nathanarum sivakamiamma madhiri mamiyarum ellarukkum kidaichita life nallairukkum. :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிPadmini 2019-03-15 10:15
hee hee Nikilan sir eppadi?? :Q: avarai vittuttiingale :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிmadhumathi9 2019-03-13 13:08
:clap: nice epi.maamiyaar,marmagal pola illaamal friends maathiri pazhagurathu good. (y) :thnkx: 4 this epi. :GL: waiting to read more. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிPadmini 2019-03-15 10:14
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிரவை 2019-03-13 11:58
பத்மினியின் எழுத்துவன்மைக்கு கேட்கவா வேண்டும்! பிரபல நாவலாசிரியைகள் தரத்தில், தொடர் சூப்பரா போகுது! பாராட்டும் வாழ்த்தும்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 03 - பத்மினிPadmini 2019-03-15 10:13
Thank you very much sir!! பிரபல நாவலாசிரியைகள் தரத்திற்கு என்னை நிறுத்தி வைத்து பார்க்க முயன்றதுக்கு மிக்க நன்றி!!! :-) அந்த அளவுக்கு நான் இன்னும் முன்னேற வில்லை... எழுதவேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்தது...தங்கள் வாக்கு பலிக்கட்டும்... தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top