(Reading time: 11 - 21 minutes)

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தாதி அவர்களே,எல்லாம் நம் நாட்டிற்கு வந்திருக்கும் புது அடிமையைப் பற்றிய சிந்தனையில் இருந்தேன் வேறொன்றுமில்லை.”

“யார் அந்த தென்பகுதியில் இருந்து வந்திருக்கும் பெண்ணைப் பற்றியா கூறுகிறாய்?”

“ஆம் அவள் என்ன மாதிரியான பெண் என்றே புரியவில்லை.எத்தனை திடம் எத்தனை நிமிர்வு.இவள் போன்ற பெண்களைப் பார்ப்பது வெகு அரிது என்றே தோன்றுகிறது.”

“உண்மை தான் நஸீம்.நானும் அவளைக் கண்ட முதல் சந்திப்பிலேயே இதை உணர்ந்தேன்.தென்னகத்தின் தமிழக மக்களின் வீரத்தைப் பற்றி செவி வழிச் செய்தியாய் நானும் நிறையவே கேட்டிருக்கிறேன் தான் ஆனால் முதல் முறையாய் நேரில் காண்கிறேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவளின் வீரத்தை விட நான் கண்டு வியந்தது அவள் பேசும் நம் மொழி.எத்துனை தெளிவாய் பிறமொழி பேசும் அவள் நிச்சயம் ஆய கலைகளில் அநேகத்தைக் கற்றுத் தேர்ந்திருப்பாள்”

“ம்ம் அதற்காகவே அவளிடம் அதிக கவனத்தோடு இருக்கிறேன்.ஏனெனில் இத்துனை திறமை உள்ளவள் நிச்சயம் இங்கிருந்து தப்பிக்கும் யுக்தியை தேடாமல் இருக்க மாட்டாள்.அந்த ஒரு நாளுக்காகவே காத்திருக்கிறேன்.அப்படி அவள் இந்தக் கோட்டையை கடந்து வெளி செல்லும் நேரம் அவள் உயிர் அவளுக்கு சொந்தமாய் இருக்காது.

அதற்காகத் தான் அவளைப் பொதுவான சிறையில் அடைக்காமல் நம் கவனத்தில் இருக்கும் அரண்மனையின் பாதாளச் சிறைக்குள் அடைத்திருக்கிறேன்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நஸீம் கூறுகிறேன் என்று தவறாக எண்ணாதே பெண் பாவம் எப்போதுமே பொல்லாதது.அவளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் நமக்கான அழிவிற்குக் கூட வழிவகுக்கும்.எனவே அவளை இப்படி சித்திரவதை செய்வதற்குப் பதில் ஒரேடியாக கொன்று விடுவது நல்லது.”

“அனைத்திற்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு தாதி அவர்களே,ஆட்டத்தை ஆரம்பித்த நானே அதை முடித்தும் வைக்கிறேன் கூடிய விரைவில்.தாங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

நஸீம் இந்தப் பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்று புரிந்தவறாய் மௌனத் தலையசைப்போடு அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றார்.

அதே நேரம் அங்கு சிறையிலோ சிவகங்காவதி கண்கள் மூடித் தியானத்தில் அமர்ந்திருந்தாள்.வழக்கம் போல் தன் ஈசனின் மீதான நம்பிக்கை நூறு மடங்காய் அதிகரித்திருக்க தன்னையே அர்பணித்திருந்தாள்.

வெகு நேரத்திற்குப் பிறகு கண்விழித்த போது ஒருவித புது திடம் கிடைத்து விட்டதாய் உணர்ந்தாள்.நாளை முதல் சற்றும் மனம் தளராது தனக்காக கொடுக்கப்படும் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும் அத்தோடு எத்துனை விரைவில் முடியுமோ அத்துனை விரைவில் இங்கிருந்து தப்பிப்பதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும் என்று மனதினுள் ஆயிரம் முறைக் கூறிக் கொண்டு ஆழ் மூச்செடுத்தவள் மறுநாளின் சவால்களுக்குத் தயாரானாள். 

தொடரும்...

Episode 04

Episode 06

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.