(Reading time: 9 - 17 minutes)

"டேய் அவ கைய விடு டா. அவள கல்யாணம் பண்ணிக்க போறவன் நான். சீதா வா நாம இப்போவே ஊருக்கு கிளம்பலாம் உங்க அம்மா உன்ன உடனே கூட்டிட்டு வர சொன்னாங்க" என்று அவளின் கையை பிடிக்க போனவனை தடுத்த ராம்.

"இவ்ளோ நேரம் நா பேசுற எதும் உன் காதுலே விழலையா. சீதாவும் நானும் விரும்புறோம். அவள அவ வீட்டுக்கு நா கூட்டிட்டு போறேன் நீ கெளம்பு என்று ரகுவிடம் க்ரிஷ்-ஐ அழைத்து செல்ல சைகை காட்டிவிட்டு தான் அன்னையை நோக்கி நடந்தான்."

"அம்மா... சீதா...." என்று அவன் சொல்ல வரும் முன்னரே,

"உன் சந்தோசம் தான் பா என் சந்தோசம். நல்ல இருங்க என்று இருவரையும் ஆசிர்வதித்தார்."

சீதாவை அழைத்து கொண்டு அவளது வீட்டிற்கு சென்றான் ராம். அதற்குள் இங்கு நடந்த அனைத்தையும் சீதாவின் பெற்றோருக்கு ஒப்பித்திருந்தான் க்ரிஷ். அவளின் வீட்டிற்குள் சென்ற இருவரையும் எரிக்கும் பார்வை வீசினார் சீதாவின் அம்மா. அவளின் தந்தையோ அமைதியாய் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

"நடந்ததுலாம் உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். சீதா மேல எந்த தப்பும் இல்ல. என் மாமா அப்டி பேசுனத்துக்கு நா மன்னிப்பு கேட்டுக்குறேன். சீதா எனக்கு கிடைச்ச பொக்கிஷம் அவள நா நல்ல பத்துக்கணும்னு நினைக்கறேன்..."

"அது உன்னால எப்பவும் முடியாது. அவ எவ்ளோ செல்வாக்கா வளந்தவனு உனக்கு தெரியுமா?. உன்னால அவள சந்தோஷமா வாசிக்கவே முடியாது. க்ரிஷ் எத்தன கோடிக்கு சொந்தக்காரன் தெரியுமா?. உன்ன மாதிரி ஒரு ஆள் கூடலாம் பேசுனா எனக்கு தான் அசிங்கம்", சீதாவின் அம்மா வானதி.

"எனக்கு வேணா இப்போ பெரிய வசதி இல்லாம இருக்கலாம். ஆனால் கண்டிப்பா என் சீதாவுக்காக நா கடுமையா  முயற்சி செய்வேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவள சந்தோஷமா வச்சிக்குற அளவுக்கு நா வளர்ற வரைக்கும் அவ இங்கயே இருக்கட்டும். எனக்கு உங்க மேல நம்மிக்க இருக்கு" என்றவன் திரும்பி சீதாவை பார்த்து,

"தைரியமா இரு. நா சீக்ரம் வந்து உன்ன கூட்டிட்டு போறேன்"

"டேய்... நா என்ன சொல்றேன் நீ என்ன பேசுற?", வானதி.

"வானதி வேண்டாம் விடு போகட்டும்", சீதாவின் தந்தை.

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது

உன் துயரம் சாய

என் தோல் உள்ளது

முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை

யார் என்ன சொன்னால் அன்பே

உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்

நான் வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை நீ சிரித்தால்

என் ஜென்மத்தின் சாபம் தீரும் .

அழகிய காலை பொழுதில் பனிமூட்டங்களின் இடையே தேவதையாய் நடந்து வந்துகொண்டிருந்தாள் அவள். அவளின் அழகில் மயங்கியவனாய் இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் செழியன். அவனின் கண் பார்வையில் இருந்து அவள் மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக தனது அருகில் இருக்கும் சிவப்பு ரோஜாவை எடுத்து கொண்டு அவளை நோக்கி ஓடினான். அதற்குள் இடையில் வந்த வண்டி அவனை மோத அவனை நோக்கி வந்தது. அலறி அடித்து எழுந்தவனை பார்த்த முத்து,

"என்ன டா... இன்னைக்கி எவன் உன் காதலுக்கு நடுவுல வண்டிய விட்டான்?", என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தூக்க கலக்கத்தில் பேந்த பேந்த முழித்தவன் அவன் கிண்டல் செய்வதை பார்த்து தனது அருகில் இருந்த தலையணையை எடுத்து தனது நண்பன் மேலே எறிந்தான். அதை எதிர்பாத்தவன் போல் தலையணையை கேட்ச் பிடித்தவன்,

"பின்ன என்ன டா... நீயும் டெய்லி இந்த கதைய தான் சொல்ற. நீ எல்லாம் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர். கனவுலயாவது நல்ல சீன் உருவாக்குறியா?. டெய்லி ஒரே சீன் தான். கனவுல லவ் ஆஹ் சொல்றதுக்கே வழிய காணும். நீ லாம் எப்போ நேர லவ் ஆஹ் சொல்லி ஒத்துக்கவச்சி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறது?... ம்ஹும்... ரொம்ப கஷ்டம் மச்சான். "

"டேய்... நானே கடுப்புல இருக்கேன் நீ வேற ஏன் டா?"

"சரி சரி டைம் ஆச்சு வாடா ஸ்டோரி டிஸ்கஷன்க்கு போகணும் லேட் ஆச்சுன்னா டைரக்டர் சார் திட்டுவாரு", முத்து.

"15 மினிட்ஸ் டா. தோ வந்துடறேன்", என்று குளியல் அறைக்குள் புகுந்துகொண்டான் செழியன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.