Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 25 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ஐ லவ் யூ - 25 - Chillzee Story

I love you

வளுடைய கல்யாணம் நடந்த விதத்தை பற்றி பேச யசோதாவிற்கு ரொம்பவும் பிடிக்கும்.

சாயை தவிர வீட்டிலிருக்கும் சின்னவர்கள் பெரியவர்கள் ஒருத்தரிடமும் அதை பற்றி பேச முடியாது என்பதால் அதை பற்றி நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளுள்ளே நினைத்துப் பார்ப்பாள்.

யாரிடமாவது சொல்ல மாட்டோமா என மனதில் பூட்டி வைதிருந்த கதையை தமிழ்ச்செல்வி கேட்கவும், ஆர்வத்துடனே சொல்ல ஆரம்பித்தாள்.

“ஹப்பா, இவ்வளோ பெரிய வாயா தமிழ் உனக்கு!! ஹா ஹா ஹா! போதும், போதும் வாயை மூடு!”

தமிழ்ச்செல்வி வெட்கத்துடன் வாயை மூட, யசோதா கதையை தொடர்ந்து சொன்னாள்.

“வெற்றிக்கும் எனக்கும் பத்து நாள் வித்தியாசம். அவன் மார்ச் கடைசில பிறந்தான் நான் ஏப்ரல் முதல் வாரம்”

“அதெல்லாம் சரி, எப்படி மாப்பிளை மாறிப் போனாரு?”

“எனக்கு சின்ன அத்தையை தெரிஞ்ச அளவுக்கு வெற்றியை தெரியாது. அவன் ஊருக்கு அதிகம் வந்ததில்லை. அத்தை, சாய், சிட், சித்தாரா எல்லோரையும் நல்லா தெரியும்”

“அப்போக் கூட எப்படி மாப்பிளை மாறினாரு?”

“இந்த கல்யாண பேச்சு ஆரம்பிக்குறதுக்கு முன்னாலேயே வேற கதை இருக்கு தமிழ். எனக்கு எப்போவுமே சாயை ரொம்ப பிடிக்கும். லவ்ன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை, அவரை பிடிக்கும். நல்லா பேசுவார். பந்தா இல்லாம பழகுவாரு.

நான் காலேஜ் முடிச்ச டைம்ல சாய் என் கிட்ட மனசு விட்டு பேசினாரு. அவருக்கு என்னை பிடிக்கும். கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்னு சொன்னார்”

“இது முன்னாடியே நடந்ததுன்னா அப்புறம் ஏன் இந்த வெற்றி ட்ராக்?”

“சாய் என் கிட்ட பேசினது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். அவர் அப்போ தான் எம்.பி.ஏ முடிச்சு புதுசா பிஸ்னஸ் ஆராம்பிக்குறது பத்தி யோசிச்சிட்டு இருந்தார். எல்லாம் செட் ஆகி ஒன்னு இரண்டு வருஷத்தில கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னாரு”

“அப்போ இந்த கல்யாண பேச்சை எப்படி சமாளிச்சீங்க?”

“நான் எங்கே இருந்து சமாளிக்க? சின்ன அத்தையை பத்தி உனக்கு முழுசா தெரியாது. அத்தை பெரியவங்களா இருந்தாலும் சின்ன அத்தையை கேட்டு தான் எதையுமே செய்வாங்க! சின்ன அத்தை எப்போவும், எல்லாத்திலேயும் மஹாராணி மாதிரி.”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதான் எனக்கு தெரியுமே என நினைத்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி!

“மாமா இறந்த ஒரு மாசத்திலேயே அவங்க ஊருக்கு வந்துட்டாங்க. வீட்டை விட்டு வெளியே எல்லாம் அவ்வளவா வர மாட்டாங்க ஆனா ஊரில இருக்கவங்களுக்காக ரொம்ப நல்லது செய்திருக்காங்க. ஸ்கூல், காலேஜ் திறந்தது, ஏன் அந்த ஊருல ரோடு எல்லாம் வரைக்கும் சொந்த செலவிலேயே போட்டுக் கொடுத்திருக்காங்க. அங்கே நல்லது, கெட்டது என்ன நடந்தாலும் அவங்கக் கிட்ட சொல்லாம யாருமே இருக்க மாட்டாங்க. எல்லோருக்கும் கணக்கு பார்க்காம நிறைய உதவி செஞ்சிருக்காங்க.”

“அப்படியா?”

“ஆமா! ஊருல இருக்கவங்களுக்கு மட்டுமில்ல, எங்க வீட்டுக்கே உதவி இருக்காங்க. ஒரு தடவை எங்கப்பா எங்க நிலத்தில வாழை மரம் வச்சிருந்தார். எதிர்பாராம அடிச்ச புயல்ல மொத்தமும் நாசமாயிடுச்சு. பல லட்ச ரூபா நஷ்டம். அப்பா ரொம்ப கௌரவம் பார்க்குறவர், யார் கிட்டேயும் போய் உதவின்னு எல்லாம் கேட்க மாட்டார். ஆனால் சின்ன அத்தை எங்க உறவாச்சே, விஷயம் தெரிஞ்சு தானா வந்து உதவினாங்க. வலதுக் கை கொடுக்குறதை இடதுக் கைக்கு தெரியாம செய்றவங்க, அதை பத்தி ஒருத்தர் கிட்டேயும் மூச்சு கூட விடலை. அவங்க உதவியால அப்பா அந்த நஷ்டத்தில இருந்து மீண்டு வந்தாரு!

அப்படிப் படடவங்க தானா வந்து பொண்ணுக் கேட்டா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிற?”

“உங்கப்பா சம்மதம் சொல்லிட்டாரா? உங்க கிட்ட எதுவும் கேட்கலையா?”

“வேற யாரா இருந்திருந்தாலும் கேட்டிருப்பார், கேட்டது சந்திரிகா அத்தைன்னும் போது அவர் ஒரு செகன்ட் கூட யோசிக்கலை! சரின்னு தலை ஆட்டிட்டார்!”

“அப்புறம்?”

“என்னால ஒன்னும் செய்ய முடியலை. சாய் அப்போ இங்கே இல்லை. வெளிநாடு போயிருந்தார். அவரோட போன், அட்ரஸ் எதுவும் என் கையில இல்ல.

அதுக்குள்ளே அப்பாவும், சந்திரிகா அத்தையும் பேசி அடுத்த லெவலுக்கு போயிட்டாங்க. பொண்ணு பார்க்குறதுன்னு தனியா இல்லாம, ஒரு குடும்ப பங்க்ஷன்ல என்னையும் வெற்றியையும் அறிமுகம் செய்து வைச்சாங்க. சீக்கிரம் கல்யாணம் அது இதுன்னு சொல்லி கலவரப் படுத்திட்டு எங்களை தனியா பேச சொன்னாங்க”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஓ, அப்போ வெற்றி இந்த் கல்யாணம் வேண்டாம்னு உங்க கிட்ட சொன்னாரா?”

“ஹ்க்கும்! அவனாவது அப்படி சொல்றதாவது!”

“அப்போ அவருக்கு அந்த கல்யாணத்துல சம்மதமா?”

“ம்ம்ம்!!! முழு சம்மதம்!”

“நீங்க காலேஜ் முடிச்ச ஒரு வருஷம்னா உங்களுக்கே 22, 23 வயசு தான் ஆகி இருக்கும். அதே வயசு தானே வெற்றிக்கும்? ஏன் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம்?”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 25 - Chillzee StoryAdharvJo 2019-03-26 18:22
Ouch vettri scene la illamal poitare facepalm next time avaru background la irukuramathiri Tamilselvi goal.podunga 😍😍😍 interesting update ma'am 👏 👏👌 puyal range-k silent aga irukangale Ena agumn therindhu kola waiting. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 25 - Chillzee Storysaaru 2019-03-26 14:17
Ha ha avasarapatutaye tamiluiii
Ellam nalathukutan
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 25 - Chillzee Storymadhumathi9 2019-03-26 13:00
wow tamilkku thairiyam thaan. :clap: (y) nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top