Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

ஹைந்தாவிற்கு உடல்நலமில்லாமல் இருந்தது. இரவு முழுவதும் கடுமையான ஜுரம். எதனால் ஜுரம் வந்த்து என்று தெரியவில்லை. அது வைரஸ் காய்ச்சலாக இல்லாமல் இருந்தால் நல்லது. அப்படி இருந்தால் ஹைந்தாவை தனிமைபடுத்தி வைத்து சிகிச்சை தருவார்கள்.

பொதுவாக மின்வரோவில் வைரஸ் தொடர்பான வியாதிகள் வருவதில்லை. எப்போதாவது கடுமையான தட்பவெப்பநிலை காரணமாக செல் ம்யூட்டேசன் தூண்டப்பட்டு வைரஸ் பாதிப்பு உண்டாகலாம். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு நோயாளியை தனிமைபடுத்தி சிகிச்சை தருவார்கள். குணமானபின் அவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். குணமாகவில்லையெனில்…..? அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

ஹைந்தாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள். அருகிலேயே இருப்பதால் நடந்தே சென்றாள். சாலையில் அரசு வாகனமான வெள்ளை நிற ஷட்டில் மட்டுமே செல்வதால் சந்தடியும் இல்லை. ஹைந்தாவின் ஜுரம் அவளுக்குள் கலக்கத்தை உருவாக்கி இருந்தது. சோர்வாக உணர்ந்தாள்.

வழியில் இருந்த மரத்தின் அடியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். ‘பிரபஞ்சமே என் ஹைந்தாவிற்கு மோசமான வியாதி இருக்கக் கூடாது.’ என்று கண்களை உயர்த்தி ஆகாயத்தை பார்த்து விண்ணப்பித்தாள்.

“ம்… இப்படி வேண்டிக் கொள்ளக் கூடாது ஹனிகா. எதிர்மறை வார்த்தைகள் இல்லாமல்  நேர்மறை வார்த்தைகள் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.” என்ற குரல் கேட்டு திரும்பினாள்.

சிம்ஹன்!

“நீங்கள் எங்கே இப்படி?”

“ஹனிகா உடனடியாக நான் சொல்வதுபோல வேண்டிக் கொள்ளுங்கள். ஹைந்தாவிற்கு உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும். சீக்கிரம் குணமாகிவிட வேண்டும் என்று சொல்லுங்கள். ஏனெனில் இந்த வேண்டுதல் பாஸிடிவாக இருக்கணும்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆங்… இப்படி தாத்தாவும் சொல்லுவார். தோல்வி என்று சொல்லாமல் வெற்றி பெறனும் என்று சொல்லணும்… போராட்டம் என்று சொல்லாமல் பரிட்சை என்று சொல்லணும்… பாஸிட்டிவ் வார்த்தைகளை பயன்படுத்தனும்னு சொல்லுவார்”

“உண்மைதான்… அதுதான் இந்த பிரபஞ்சத்தை சக்தி மிக்கதாக ஆக்குகிறது. நீங்களும் அப்படியே சொல்லுங்கள். ஹைந்தா நலமாக இருப்பாள்” என்று சொன்னான்.

அவனுடன் பேசிக் கொண்டே மருத்துவமனையை  நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஜுரம் என்பது  நோயல்ல… நோயின் அறிகுறி! உதாரணமாக வயிற்றில் கோளாறு இருந்தால் தலைவலி வரும். தலைவலிக்கான சிகிச்சை மட்டும் மூலம் நோயை குணப்படுத்த முடியாது! அதற்கான அடிப்படையை சரி செய்யவே முயற்சிக்க வேண்டும்! என்று பேசிக் கொண்டே வந்தான். ஹனிகாவிற்கு தலைவலி வரும்போல இருந்தது.

“கூடவே ஒரு ஆள் தொணதொணவென்று பேசிக் கொண்டே வந்தால் வரும் தலைவலிக்கு என்ன செய்வது? அந்த ஆளை அடித்து துரத்தி விடலாமா?” ஹனிகாவின் கேள்விக்கு சிரிப்பை பதிலாக தந்தவன்…

“என்னை தலைவலி என்று சொல்கிறீர்களா?”

“தலைவலிக்கு காரணம் என்று சொல்கிறேன்”

அவள் பேசிக் கொண்டு இருக்கும்போதே மருத்துவமனையை நெருங்கி விட்டார்கள். வாசலில் காலெடுத்து வைத்த ஹனிகா, சிம்ஹனிடம் “நான் உள்ளே செல்கிறேன். பிறகு பார்க்கலாம்” என்று சொல்லி விடை பெற்றாள்.

ஹைந்தாவின் பெயரை பதிவு செய்து அவளுடைய டிஎன்ஏ ரிப்போர்ட், கேஸ் ஹிஸ்ட்ரி ஆகியவற்றை தந்தாள். அங்கு ஒரே வியாதிக்கு பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன. எந்த முறை பொருத்தமானது என்பதை  நோயாளியின் டிஎன்ஏ ரிப்போர்ட்டை பார்த்துதான் முடிவு செய்வார்கள்.

மருத்துவரின் பரிந்துரைக்காக காத்திருந்த ஹனிகாவிடம் ஹைந்தா “அத்தை, எனக்கு குணமாகிவிடும் அல்லவா?”

“கண்டிப்பாக… ஹைந்தா.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ரொம்பவும் மோசமான வியாதி இல்லைதானே. என்னை தனிமைபடுத்திவிடுவார்களா?”

“உனக்கு சாதாரண காய்ச்சல்தான். இப்போ குளிர்காலம் மாறி வெயில் ஆர்ம்பிக்கிறது அல்லவா அதற்கு ஏற்றாற்போல உடல் தன்னை தயார்படுத்திக் கொள்கிறது” ஹனிகா விளக்கிக் கொண்டிருந்தாள், இவ்வாறு ஹைந்தாவிடம் பேசுவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எப்படி இவ்வளவு தெளிவாக அவளால் விளக்க முடிகிறது? அதிலும் அவளுக்கே உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கும்பொழுது இதுதான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடிகிறது?

மருத்துவரின் பரிந்துரையும் அவள் சொன்னதைத்தான் கூறியது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஜுரம் என்றுதான் சொன்னது. அதற்குரிய மருந்துகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மாலை தன்னுடைய வேலைக்கு கிளம்பினாள். அலுவலகத்தை அடையும் முன் இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த அரைகுறை இருளில் சில உருவங்களை அவளால் அடையாளம் காண முடிந்தது. யார் இவர்கள் மின்வரோவாசிகள்போல இல்லையே?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்saaru 2019-03-28 09:26
Awesome sagambari jjiiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-03-28 20:04
Dear Saaru
Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்madhumathi9 2019-03-27 14:27
wow arumaiyaana padhivu. :clap: (y) thodarnthu padikka miga aavalaaga jaathu kondu irukkirom :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-03-28 20:04
Dear Madhu mathi
Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Srivi 2019-03-26 23:31
Kalakareenga sis.. yaha nu oru type of aliena introduce pannirukeenga. So simhan kilambum podhu andha reminiscence vachu hanika VA space guard aakiduvangala . Nice. I am waiting for the next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-03-28 20:03
Thank you Srivi
In this story we need some comedians.. that is yagas..
And singam will do something to support hani.. it is not a prediction.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-03-26 21:25
Usage of terminology awesome :clap: . Simhan has any power to bring next Tuesday now. facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-03-28 20:01
Dear sahithyaraj
Thanks for the encouraging words.. :thnkx:
Singam is one like us..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்AdharvJo 2019-03-26 20:05
Ms Sagampari ninga entha gragathil irukinga :D sema imagination. Mesmerizing!! :clap: :clap:
Ok this epi was very clear...padathil avalova sandhegam illai Ms :P So simhan sonna mathiri ani SG avangala :Q: illa just sight adika sonnara :P Ivaru ena space la josiyam parkuraro :Q: waiting to know what is AAra. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-03-28 19:59
Thank you AdharvJo. I'm in earth than... The story will continue.. and the simhan words will work out.. that's in my hand pa... :grin: senjuruvome...
Reply | Reply with quote | Quote
# SuperbSindhumithra 2019-03-26 19:53
Wonderful episode mam..
Reply | Reply with quote | Quote
# RE: SuperbSagampari 2019-03-28 19:53
Thank you sindhumithra
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top