Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (8 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 8 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகா

Unnaiye thodarven naane

இந்த புதுக்கதையின் முதல் பாகத்தை படித்து கமெண்ட் செய்த அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள். ஒரு சிறு விண்ணப்பம் கதைக்கு சின்ன வித்தியாசம் காட்ட நினைத்து இந்த கதையில் வரும் கதாநாயகியின் சொந்தங்களை காஞ்சிபுரத்தில் அதிலும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாக காட்டியுள்ளேன். அதனால் அவர்கள் பேசும் தெலுங்கு மொழி வசனத்தை அப்படியே தெலுங்கில் தராமல் தமிழில் தந்துள்ளேன். படிப்பதற்கு எளிதாக இருக்கும் கதையை தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்  தோழிகளே

நன்றி.

மெரிக்கா

அஸ்வின் தீவிரமாக ஆஸ்பிட்டலின் 3-வது மாடியில் உலாத்திக் கொண்டிருந்தான். ஒரு அறையில் இருந்து டாக்டர்களும் நர்சுகளும் பரபரப்பாக சென்றுக் கொண்டும் வந்துக் கொண்டும் இருக்கவே பயம் வந்தது அஸ்வினுக்கு. எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் யாரும் எந்த பதிலையும் கூறாமல் இருக்கவே அந்த வராண்டாவிலேயே கால் கடுக்க நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கால் வலிக்கவே அங்கிருந்த ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்துக் கொண்டான்.  அங்கு காத்திருக்கும் நேரத்தில் அவனது நினைவுகள் சற்று பின்னோக்கிச் சென்றது.

காஞ்சிபுரம்

””அம்மா நான் இங்க இருக்கனும்னா என்னுடைய எல்லா வேலைகளையுமே மாதவிதான் செய்யனும், இல்லைன்னா நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி போயிடுவேன்.”

என 18 வயது அஸ்வின் அதிகாரமாக கூறவும் அவனது தாய் கமலா அதற்கு மேல் எதையும் பேச விரும்பாமல் மாதவியை அழைத்தாள்.

”மாதவி எங்கிருக்க உடனே இங்க வா”

மாதவிக்கு அப்போது 15 வயதுதான் ஆகிறது, 10வது படிக்கும் அவள் பட்டுப்பாவடை சட்டையில் இருந்தாள். அஸ்வினின் அறைக்குள் வந்தவள் அங்கிருந்த தனது அத்தை கமலாவைக் கண்டு அமைதியாக சென்று

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அத்தை எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என அமைதியாக அவள் கேட்கவும் கமலா அவளிடம்

”இதப்பாரு மாதவி அஸ்வின் நேத்துதான் அமெரிக்கால இருந்து வந்தான், உனக்கு தெரியும்ல அவன் இங்க இருக்க போறதே கொஞ்ச நாட்கள்தான் அது வரைக்கும் அவனோட எல்லா வேலைகளையும் நீதான் செய்யனும் புரியுதா”

என கமலா அதிகாரமாக உத்தரவிடவும் மாதவியும் மெல்ல சரி என தலையசைத்தாள். அதோடு கமலாவும் அந்த அறையை விட்டு சென்றுவிட மாதவி அஸ்வினை பார்த்தாள்.

கமலா மாதவியின் தாத்தா ஜனார்த்தனின் மகள். ஜனார்த்தனத்திற்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் ராஜேந்திரனின் காதல் திருமணத்தால் வெறுப்புற்ற அவர் அவர்களை வீட்டில் சேர்க்காமல் விரட்டியடித்தார். ராஜேந்திரன் இல்லாத குறையை தீர்க்க எண்ணி கமலா புகுந்த வீட்டிலிருந்து தன் கணவன் பிரகாசம் மற்றும் தன் 4 வயது மகன் அஸ்வினுடன் பல வருடங்களுக்கு முன்பு ஜனார்த்தனம் வீட்டுக்கு குடி வந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஜனார்த்தனம் காஞ்சிப்புரத்திலேயே பெரிய பணக்காரர். பெரிய பட்டு துணிக்கடையும், 5 பட்டுதறி கொட்டகையும், 7 வீடுகளும், பூர்வீகமான பரம்பரையாக வரும் பெரிய மாளிகையும் அவருக்குச் சொந்தம், அவரது மனைவி இறக்கும் தருவாயில் அவசரமாக தன் மகள் கமலாவிற்கு திருமணம் செய்துவைத்தார். திருமணத்தை கண்ட சந்தோஷத்துடன் அவர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து அந்த பங்களாவில் ஜனார்த்தனம் மற்றும் அவரது மகன் ராஜேந்திரன் மட்டுமே இருந்தார்கள். கமலாவிற்கு சீராக ஏகப்பட்ட பட்டுப்புடவைகள், நகைகள் என அதிகமாக அளித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். கமலாவின் கணவர் பிரகாசமும் பணக்காரன்தான் இருந்தாலும் ஜனார்த்தனம் அளவுக்கு இல்லை. பேராசை பிடித்தவன் என தெரியாமல் தன் மகளை திருமணம் செய்து வைத்தார். அவரின் முன்பு நல்லவனாகவே பிரகாசம் காட்டிக் கொண்டு தன் மனைவியை தனக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார். கணவரின் உண்மை முகம் அறியாத கமலாவும் அவரின் பேச்சுக்கு செவி சாய்த்து அவர் சொன்னதை செய்து வரும் கைபொம்மையாகி போனார்.

கமலாவின் பெயரிலேயே 4 வீடுகள் எழுதியிருந்தார் அவரின் தந்தை. அதை அனைத்தையும் வாடகைக்கு விட்டு விட்டு சுகமாக வாழ்ந்தாள் கமலா.

ஜனார்த்தனத்தின் வியாபாரத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராஜேந்திரனை சேர்ந்தது. அவரும் எம்.காம் படித்த காரணத்தால்  பொறுப்பாக அனைத்து வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டு நேர்மையாக உழைத்துக் கொண்டிருந்தார். துணிகடையிலும் சரி, தறிகொட்டைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலும் சரி, தன் கடமையை மீறாமல் இருந்தார். அவரது மேற்பார்வையிலும் நெசவாளர்களின் நுண்ணிய வேலைத்திறமையாலும் பட்டு புடவை வியாபாரமும் நன்கு வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் தறிகொட்டைகையில் வேலை செய்ய வந்த பெண் மீது காதல் கொண்டு திருமணம் செய்துக் கொண்டு வீட்டிற்கு வந்தது ஜனார்த்தனத்திற்கு பிடிக்கவில்லை. மகனை திட்டி வீட்டைவிட்டு விரட்டினார்.

ராஜேந்திரன் தன் மனைவியுடன் தான் படித்த படிப்புக்கு ஏற்ப கிடைத்த வேலையில் சேர்ந்து குடும்பத்தை பார்த்துக் கொண்டார்

மகன் சென்றதும் அந்த இடத்திற்கு மகளும், மருமகனும் வந்து சேர்ந்தார்கள். வீட்டையும் தந்தையையும் கவனித்து கொள்ள என கூறி முதலில் வீட்டுக்குள் நுழைந்த கமலா, நாளாக ஆக தன் கணவர் மற்றும் தன் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஒரேடியாக ஜனார்தனம் வீட்டில் செட்டில் ஆனார். கமலாவின் கணவர் பிரகாசமோ ஜனார்த்தனத்திற்கு இனி வாரிசு இல்லை, மொத்த சொத்தையும் தான் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன் மனைவியின் மூளையை நன்றாகவே சலவை செய்து தன் விருப்பப்படி மாற்றினார். அதன் காரணமாக நன்மை தீமை பற்றி யோசிக்காமல் கமலாவும் தன் கணவரின் பேச்சைக் கேட்டு வரவு செலவு கணக்குகளை தவறாக எழுதி வைத்தார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாsasi 2019-04-02 14:37
கதையை படித்து கமெண்ட் தந்த அனைவருக்கும் என் நன்றிகள் :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-02 12:24
வித்தியாசமான கதை அம்சம் தங்களது மற்ற கதைகளை விட இந்த கதை வேறு விதம் மாதவியை பற்றி தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என ஆவலாக உள்ளது அடுத்த எபிக்காக வெயிட்டிங் சரவண பெருமாளுக்கு அவரது மனைவி அடுத்த எபியிலாவது கிடைக்க வேண்டும் என வாழ்த்துக்கிறேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாViji. P 2019-04-01 23:10
Sasi vungalaiye nan thodarven intha kathaiyil .vazthukkal nice episode. :clap: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாSrivi 2019-04-01 22:47
Different different plots for stories.. kalakks sis .
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாvijayalakshmi 2019-04-01 19:31
nice epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாShanthi S 2019-04-01 19:01
interesting plot Sasirekha.

Aswin thidirnu marita oru feel.

Mathavi enge iruka & ava POV padicha inum interesting aga irukum (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாராணி 2019-04-01 15:08
சரவணபெருமாளுக்கு அஸ்வின் ஒரு போட்டியா கதை ரொம்ப விருவிருப்பா போகுது இந்த மாதவி எங்கதான் இருக்கா தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாmadhumathi9 2019-04-01 10:12
:clap: nice epi.interesting aaga irukku. :clap: (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகாதீபக் 2019-04-01 06:44
Nice episode sis. :clap: . Great going :dance:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top