(Reading time: 7 - 13 minutes)

"அதுலாம் வேணாம் தமிழ் முடிஞ்சிடுச்சு" என்றாள்.

"இந்த மாதிரி நேரத்துல நீங்க ஏன் உங்கள கஷ்டப்படுத்திக்கிறீங்க?. நானும் கொஞ்சம் உதவி பண்றேன்.", தமிழ்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"நா இப்போ இவ்ளோ சந்தோஷமா இருக்கேன்ன அதுக்கு காரணம் நீ தான் தமிழ். உனக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது"

"என்ன கா நீங்க. எல்லாத்துக்கும் அந்த கடவுள் அருள் தான் காரணம்."

"இல்ல தமிழ் அன்னைக்கு கோவில்ல யாருன்னே தெரியாத நான் அழும் போது என் பக்கத்துல வந்து எனக்கு ஆறுதல் சொன்னியே "நீங்க சீக்ரம் அம்மாவாக போறீங்கன்னு" அந்த வார்த்தை அந்த கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துது. அது உண்மையாகும் போது எனக்கு உன் ஞாபகம் மட்டும் தான் வந்துது. ஆனா உன்ன கண்டுபிக்க முயற்சி பண்ணியும் என்னால முடில. அன்னைக்கு ராம் வேலை செய்யுற ஆபீஸ் விழால உன்ன பாத்த அப்போ நா எவ்ளோ சந்தோஷ பாட்டன் தெரியுமா?. உன்ன எங்க எங்கயோ தேடிட்டிட்டு இருந்தேன் ஆனா நீ என் பாகத்துலே தான் இருந்து இருக்க.", என்று அவளை அணைத்து கொண்டாள் சீதா.

"என்ன பூமில இருக்க நிலா வானத்துல இருக்க நிலாவ ரசிக்குது?", என்று கேட்டு சிரித்தாள் பூங்கொடி.

"ஹே... கொடி வா.. வா..."

"பாட்டி தாத்தாவை விட்டுட்டு தனியா மாடில நிலாவ பாத்து சைட் அடிச்சிட்டு இருக்க என்ன விஷயம்?. உன் நடவடிக்கையே சரி இல்லையே வந்ததுல இருந்து. என்ன லவ் ஆஹ்?", பூங்கொடி.

வெட்க சிரிப்பை உதிர்த்த நிலா ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.

"யார் நிலா அந்த அதிஷ்டசாலி?"

"எல்லாம் உனக்கு நல்ல தெரிஞ்சவர் தான்?", நிலா

நிலா அப்படி கூறியதும் நிலாவை உயிராக விரும்பும் தன் அண்ணன் முகம் தான் நினைவு வந்தது பூங்கொடிக்கு. "அண்ணா லவ் ஆஹ் சொல்லி ஓகே பண்ணிட்டான் போல" என்று மனதிற்குள் கூறி கொண்டு மகிழ்ந்தவள் வெளியே எதும் காட்டி கொள்ளாமல் "எனக்கு தெரிஞ்சவரா? யாரு அது?" என்று வினவினாள் அவளை சீண்ட.

"போடி..." என்று வெட்கத்தோடு கூறிவிட்டு கீழே ஓடினாள் நிலா.

"டேய் அண்ணா என் கிட்ட கூட சொல்லல நீ  இத பத்தி நீ வா உன்ன கவனிச்சிக்கறேன்" என்று மனதில் கருவிக்கொண்டாள்.

தொடரும்

Episode # 11

Next episode will be published on 19th Apr. This series is updated fortnightly on Friday morning.

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.