(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 06 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

நாகராஜனும் சங்கரும் பேசிவிட்டு, phoneஐ கட் செய்தனர்.

அதே சமயம், நிலா வீட்டில்,

“சிவகாமி, ஒரு நிமிசம் இங்க வாயேன்” என்றார் சங்கர்.

“அரைத்த மாவை எடுத்துட்டு இருக்கேங்க. ஒரு 2 நிமிஷம் இருங்க வந்துடுறேன்” என்று தான் பார்த்துக் கொண்டிருந்த வேளைக்கு நடுவில் கிட்சனில் இருந்த பதில் சொன்னார் சிவகாமி.

“ஓ வேளையா இருக்கியா. அப்ப இரு நான் வரேன்” என்று கூறிக் கொண்டே கிட்சனுக்கு சென்றார் சங்கர்.

“சிவகாமி, போன முறை நாம் நம்ம பொண்ணுக்கு வரன் தேடும் போது ஒரு பையன் ஜாதகம் வந்துசே. நம்ம ஜோதிடர் கூட எல்ல பொருத்தமும் இருக்கு, இந்த சம்பந்தத்தை விட்டுடாதீங்க நு சொன்னாறே. அந்த பையன் பேரு என்ன? நினைவு இருக்கா” என்றார் சங்கர்.

வேளையைச் செய்து கொண்டே, எதற்காக இப்போது அதைப் பற்றிக் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டு “ரகுவோ இல்ல சிவாவோ நு நினைக்கிறேன். எதுக்குங்க என்ன விஷயம்” என்றார் சிவகாமி.

“இல்ல மா, இப்போ ஒருத்தர் கால் பண்ணிருந்தார். அவங்க பையனுக்கு பெண் பார்க்கிறாங்களாம். நம்ம பொண்ணு போட்டோ ஜாதகம் ஒரு செந்தகாரங்க மூலம் கிடச்சிதாம். எனக்கு என்னமோ அந்த பையன் தான் இந்த பையனா இருப்பானோனு தோனுது” என்றார் சங்கர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வேளையைச் செய்து கொண்டே தன் கணவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமி “அப்படியா சொல்றீங்க. பையன் பேரு சொன்னாங்களா” என்று கேட்டார் சிவகாமி.

“ரகுராஜன் நு சொன்னாங்க. பையன் சொந்தமா மாடலிங் ஸ்டுடியோ வச்சிருக்கானாம்” என்று பதில் கூறினார் சங்கர்.

“ஆமாங்க அந்த பையன் கூட போட்டோ ஸ்டுடியோ தான் வச்சிருக்கானு நினைக்கிறேன். அவங்கள போட்டோ எதாவது அனுப்பச் சொல்ல வேண்டியது தானே. பார்த்து உறுதி பண்ணிருக்கலாமே” என்றார் சிவகாமி.

“கேட்காமல் இருப்பேன. அவங்களும் அனுப்புறனு சொல்லிருக்காங்க. கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று சங்கர் சொல்லி முடிப்பதற்குள் அவர் கைப்பேசியில் மேசேஜ் வந்த சத்தம் கேட்டது.

Phoneஐ பார்த்தவாறே “ஏதோ புது நம்பர்ல இருந்து வாட்சாப் மேசேஜ் வந்திருக்கு. அவங்களாதான் இருக்கும்” என்று கூறிக் கொண்டே அந்த மேசேஜை ஓபன் செய்தார் சங்கர்.

அதற்குள் சிவகாமியும் வேளையை முடித்து கை கழுவி அவர் அருகில் வந்து நின்று போனை பார்த்தார். மேசேஜில் பயோடேடா, ஜாதகம் மற்றும் ரகுவின் 3 போட்டோக்களும் வந்திருந்தது. எல்லாவற்றையும் டவுன்லோட் செய்யச் சொல்லிவிட்டு டவுன் லோட் ஆவதற்கு காத்திருந்தனர்.

அது முடிந்தவுடன், முதலில் போட்டோவை ஓபன் செய்தார் சங்கர், ரகுவின் போட்டோ ஓபன் ஆனது. அதைப் பார்த்த சங்கருக்கும் சிவகாமிக்கு மிகுந்த சந்தோஷம்.

“இந்த பையன் தாங்க. என்னல நம்பவே முடியல. கை விட்டு பேச்சினு வருத்த பட்ட வரன் ஓரு வருடம் கழித்து மீண்டும் வந்திருக்குனா ஏதோ ஒரு முடிச்சு இருக்குனு தோனுதுங்க” என்று மகிழ்ச்சியில் பேசினார் சிவகாமி.

“ஆமா சிவகாமி எனக்கும் அப்படிதான் தோனுது” என்றார் சங்கர். பேசிக் கொண்டே மற்ற போட்டோக்களையும் ஓபன் செய்து பார்த்தனர்.

“ஏற்கனவே பார்த்தது தான் என்றாலும், எதுக்கும் இன்னொரு முறை நம்ம ஜோசியர் கிட்ட அனுப்பி வைங்கங்க இந்த ஜாதகத்தை. இன்னொரு முறை பார்த்திடலாம்” என்றார் சிவகாமி.

“எதுக்கு மா. அதுதான் போன முறை பார்த்தபவே நல்ல பொறுத்தமான இடமுனு தான் சொன்னாறே. மறுபடியும் எதற்கு” என்றார் சங்கர்.

“இல்லங்க போன முறை இந்த பையன பத்தி பேச்சு எடுத்துத்தான் நிலா கல்யாணம் வேணானு சொல்லி பேச்ச நிறுத்திட்டா. மீண்டும் அதே இடம் வந்திருக்குனா, இந்த தடவை நாம அத தவற விட்டுவிடக் கூடாது. இந்த முறை எந்த தடங்களும் இல்லாமல் கல்யாணம் நடக்கனும் அதற்குத்தான். எதாவது பரிகாரம் மாதிரி செய்யனுனாலும் முன்னாடியே செஞ்சிடலாம் அதனாலதான் கேக்க சொல்றேன்” என்று பதில் அளித்தார் சிவகாமி.

சிவகாமி கூறியதும் சரியன பட்டது சங்கருக்கு. உடனே தன் குடும்ப ஜோதிடருக்குக் கால் செய்து நடந்ததை பற்றிக் கூறினார் சங்கர். அவரும் ஜாதகத்தை அனுப்பி வைக்கச் சொல்ல இவர்களும் அவ்வாறே செய்தனர்.

மாலை அந்த ஜோதிடரிடம் இருந்து அழைப்பு வரவே அடண்ட் செய்தார் சங்கர். அவர்கள் எதிர் பார்த்தது போலவே நல்ல செய்தி வந்தது. இந்த முறை திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று அவர் சொல்வதைக் கேட்டு சங்கருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நன்றி கூறி கால்ஐ கட் செய்துவிட்டு தன் மனைவியிடம் phoneல் கேட்டதை கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.