(Reading time: 15 - 30 minutes)

“அவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாருனு தோணல டா ஆத்வி..பயபுள்ள பேசினாலே காத்து தான் வருது..”

“ஏன் ஜீ யாரையுமே விட்டு வைக்க மாட்டியா நீ..ரொம்ப குஷ்டம் டீ உன்னோட..”

“ரேஷ் தெர்??”

“யா யா கால் வந்துடுச்சு..சரி ரெண்டு பேருக்கும் ஒரு குட் நியூஸ் இன்னும் டூ டேஸ்ல புது படம் ஷீட் ஆரம்பிக்குது.டெல்லி போறேன்..இனி ஒரு மூணு மாசம் அங்க தான்..”

“ஹே சூப்பர்..கங்க்ராட்ஸ் ரேஷ்..ஆல் தி பெஸ்ட்..”

“யோவ் ரேஷ் ப்ரொடியூசர் காசு செலவு பண்ணி டெல்லிக்கெல்லாம் கூட்டிட்டு போறாரு..ஒழுங்கா நடிச்சு படத்தை ஹிட் ஆக்கிருய்யா..”

ஆத்விக் வாயை மூடி சிரிக்கும் ஸ்மைலி போட்டுவிட ரேஷ்வாவோ பல்லை காட்டி சிரிக்கும் ஸ்மைலி போட்டான்.

“அது அவர் தலையெழுத்து ஜீ என்னை புக் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் இட்ஸ் டூ லேட்..”

“அடப்பாவி மனுஷா..!!!”

“ஹா ஹாஹா ஜோக்ஸ் அப்பார்ட் இது என்னை நானே இன்டஸ்ட்ரீல மீட்டெடுக்க கிடைச்ச ட்ரங்கார்ட் கண்டிப்பா அதை நா மிஸ் பண்ண மாட்டேன் ஜீ..”

“கேட்க ரொம்ப ஹேப்பியா இருக்கு கண்டிப்பா படம் ஹிட் அடிக்கும் டோண்ட் வொரி.”

“தேங்க்ஸ்..அண்ட் இதை செலப்ரேட் பண்றதுக்கு என்னோட சின்ன ட்ரீட்..ட்ரீட்னு பேச்சுக்கு தான் சொல்றேன்.உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணணும் போல இருக்கு..நாளைக்கு முடியுமா?”

“எனக்கு ஓ.கே தான் ரேஷ்..ஜீ நீ நாளைக்கு காலேஜ் பங்க் அடிச்சுரு..”

“ஏன் டா நா என்ன ஸ்டூடண்டா கேவலமா பங்க் அடிக்குறதுக்கு..உடம்பு சரியில்லைனு சொல்லி லீவ் போட்டுருவேனே..”

“இப்படி கேவலமா பொய் சொல்லி லீவ் எடுக்குறியே வெட்கமா இல்ல.”

“ஓசி சாப்பாட்டுக்காக எனக்கு இல்ல செத்து போன எங்க தாத்தாக்கு உடம்பு முடிலனு கூட சொல்லுவேன் டா ப்ளடி பெக்கர்.”

“அதான நீ தான் சரியான புளுகு மூட்டைஆச்சே..ஆன்ட்டியவே நல்லா ஏமாத்துற..இதெல்லாம் உனக்கு எம்மாத்திரம்..”

“ஐயோ ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க நாளைக்கு மதியம் ஒரு மணிக்கு ஈசிஆர் ப்ளு லகூன் ரெசார்ட்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் " எதிர் எதிரே நீயும் நானும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என் ட்ரைவர்கிட்ட சொல்லிடீங்கள அவன் என்னை கூட்டிட்டு வந்துருவான்.டேய் 15 நிமிஷம் முன்னாடியே போய்ரணும் புரியுதா?”

“எல்லாம் என் விதி..வந்து தொலையுறேன்..”என்றவன் மறுநாளின் சந்திப்பிற்கு தயாரானான்.

வார நாள் என்பதால் அவ்வளவாக ஆள் நடமாட்டமின்றி இருந்தது ரெஸார்ட்.மூவருமாய் தங்களுக்கென ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

“ஹே ரேஷ் ஆல் த பெஸ்ட்”,என்று இருவருமாய் சேர்ந்து கத்த அழகிய புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டவன் இருவருக்குமாய் இரு பரிசுப் பொருள்களை நீட்டினான்.இருவரும் குழப்பமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவனே தொடர்ந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் என் லைஃபை எப்படி மாத்திருக்கீங்கனு உங்களுக்குப் புரியாது கைஸ்..தேங்க்ஸ் சொல்லி உங்க நட்பை தள்ளி வைக்க விரும்பல அதான் ஒரு சின்ன கிப்ட்..”

“பார்ரா..இந்த சீனே இங்க கிடையாது.அதான் ட்ரீட் வைக்குறீங்களே அது போதும்.”

“ப்ளீஸ் என் திருப்திக்காக வாங்கிக்கோங்க..இதான் லாஸ்ட் இதுக்கு மேல பண்ணமாட்டேன்..ட்ஸ் அ ப்ராமிஸ்.”

“ம்ம் சரி இதுக்கு மேல ஸ்ட்ரிக்ட்டிலி நோ தான்”,என்றவாறு பரிசை வாங்கிக் கொண்டனர்.அதன்பின் உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த நேரத்தில் ஆத்வி,

“ஏன் ஜீ ஆன்ட்டியை எப்படி சமாளிச்ச கண்டிப்பா எதாவது பொய் தான் சொல்லிருப்ப..”

“டேய் சும்மா சும்மா பொய் சொல்றேன்னு சொல்லாதடா எனக்கே  கொஞ்சமே கொஞ்சம் கில்டா தான் இருக்கு.இருந்தாலும் உண்மையை சொன்னா விடவும் மாட்டாங்க தேவையில்லாம பயப்படுவாங்க அதான் சொல்றதில்ல.”

“சரி சரி இப்படி பாவமா எல்லாம் மூஞ்சியை வச்சுக்காத உனக்கு செட்டே ஆகல விஷயத்துக்கு வா மா..”

“பே..நேத்து ஒருஃப்ளோல லீவ்னு உளறிட்டேன் சோ காலேஜ்னும்சொல்ல முடியாது..என்ன பண்ணனு ரொம்ப யோசிச்சுட்டு இருந்தேன்.அந்த கடவுளா பார்த்து காலையிலேயே வழி காமிச்சுட்டார்..”

“கடவுள் என்ன கூகுள் மேப்பா உனக்கு வழி காட்றதுக்கு?!”

“ப்பாபாபா..மொக்கையை நிறுத்து..இங்க பாரு..டன்டடைங்ங்ங்”,என்றவள் பையிலிருந்து அவளது திருமண அழைப்பிதழை எடுத்து நீட்டினாள்.

“ப்ரெண்ட்ஸ் மீட் பண்ணி பத்திரிக்கை குடுக்க போறேன்னு சொல்லிட்டு எஸ்கேப்..சோ நா ஒண்ணும் பொய் சொல்லல..அதெல்லாம் இருக்கட்டும் ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் புரியுதா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.