Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes

“இருக்கும்மா அதான் புக்லெட்லயே எழுதியிருக்கீங்களே”

“நல்லது இப்ப நீங்க தூங்குங்க, நான் வந்து உங்களை எழுப்பறேன், லக்கேஜ் பத்திரம், ஜன்னல் எல்லாம் சாத்திடுங்க, பஸ் கூட லாக் பண்ணிடுங்க யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது. நீங்க எங்கேயும் போகாம இருங்க, ரெஸ்ட் ரூம் போறப்ப கூட கவனம் தேவை, அக்கம் பக்கம் ஆளுங்களை பார்த்துக்குங்க, இதை ஏன் சொல்றேன்னா இன்னிக்கு பௌர்ணமி, வெவ்வேறு ஊர்ல இருந்து ஆளுங்க வந்திருக்காங்க, அவங்கள்ல பல பேர் நல்லவங்களாவும் இருப்பாங்க, கெட்டவங்களாவும் இருப்பாங்க அதனாலதான் நான் சொல்றேன் சரியா” என சொல்லவும் அவரும் சரியென தலையாட்ட பஸ்ஸை விட்டு இறங்கியவள் அதற்குள் தன்னுடன் வந்தவர்கள் முன்னே நடப்பதைக் கண்டு அவளும் அவர்களிடம் செல்ல வேகமாக நடந்தாள்.

நடக்கும் போது அவளையும் அறியாமல் அவள் கால்கள் நின்றது. அவள் பார்க்கும் திசையில் ஒரு ஸ்கார்பியோ காரை விட்டு ஒரு இளைஞனும் ஒரு டிரைவரும் இறங்கினார்கள். இறங்கிய இளைஞனைப் பார்த்தாள், பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், நகைகளும் அணிந்திருந்தான். பார்க்கவே மாப்பிள்ளை போல இருந்தான். பார்த்த உடனே மாதவிக்கு அவனை பிடித்துவிட்டது.

அவன் அணிந்திருந்த சட்டையை மீறி அவனது திடகாத்திரமான உடல் தெரிந்தது. கைகளும் கால்களும் உறுதியாக இருந்தது. அவனது முகம் தெளிவாகவும், அவன் டிரைவரிடம் பேசும் போது பேச்சில் இருந்த அதிகாரமும், தெளிவும், நல்ல தமிழும் அவளைக் கவர்ந்தது. அவன் கையிலிருந்த ஃபோனை கூட வண்டியில் வைத்துவிட்டு நிற்பதைக் கண்டுச் சிரித்தாள். அதைப் பார்த்த அவனின் டிரைவர் ஏன் என கேட்க

”கோயில்ல எதுக்குடா ஃபோனு. அப்படியே ஃபோன் கொண்டு போனா நம்ம கையும் சும்மாயிருக்காது, ஃபோன் வராமயே அதை எடுத்து எடுத்து பார்ப்போம், போர் அடிச்சா எவனுக்காவது ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுவோம். எதுக்கு இங்க வந்தது சாமியை பார்க்கத்தானே, நாம வந்த வேலையை கெடுக்கற எந்த விசயமும் வேணாம், அதான் வைச்சிட்டேன் நீயும் வைச்சிடு அதான் என்கூடவே இருக்கியே யார் உனக்கு ஃபோன் பண்ண போறாங்க சொல்லு”

“அதுவும் சரிதான் இருந்தாலும் அங்கங்க நின்னு செல்பி எடுக்கலாமே”

“வேணாம்டா செல்பி எடுக்கற வேலையே வேணாம், நீ எங்கயாவது நின்னு போட்டோ எடுக்க உனக்கு பின்னாடி, அருகில் அப்ப பார்த்து ஏதாவது பொண்ணு க்ராஸ் ஆச்சி உனக்கு தர்ம அடிதான் கிடைக்கும், மக்கள் கூட்டம் வேற அதிகமா இருக்கு, செல்போன் பிக்பாக்கெட் அடிச்சாக்கூட கஷ்டம்தான் நாம தொழிலதிபர்கள் நாமளே பொறுப்பில்லாம இருந்தா எப்படி? உன் செல்போன் தொலையாம இருக்கனும்னா ஃபோனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வண்டியில வைச்சிட்டு வண்டியை லாக் பண்ணிடு” என சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்.

அவர்கள் பேசுவதைக் கேட்டவளுக்கு அவன் சொன்ன கருத்து பிடித்துப் போகவே அவனிடம் பேச எண்ணி அவன் புறம் நடந்தவளைப் பிடித்தார்கள் சொப்னாவும் சுந்தரியும்

”எங்க போற மாதவி வா வா, அங்க எல்லாரும் உனக்காகதான் வெயிட்டிங்” என சொல்லி இழுத்துக் கொண்டுச் சென்றார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மாதவியோ திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

அவனோ தனக்கு முன்பிருந்த பஸ்ஸிற்கு சென்று கஷ்டப்பட்டு இறங்கிக் கொண்டிருந்த பாட்டியை கையை பிடித்து இறக்கினான், அப்படியே மற்றவர்களையும் இறக்கிவிட்டுவிட்டு டிரைவருடன் முன்னோக்கி நடந்தான். அதைப் பார்த்த மாதவி தனக்குள்

”பரவாயில்லையே ஹெல்பிங் நேச்சர் கூட இருக்கே, வயசானவங்களுக்கும் சரி, மத்தவங்களுக்கும் சரி உதவி பண்றாரே பரவாயில்லை” என நினைத்துக் கொண்டே திருமாலிடம் வந்தாள்

”எங்கம்மா போன”

“நான் டிரைவர்கிட்ட இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லிட்டு இருந்தேன்ப்பா”

“சரி சரி இப்ப யார் யார் கிரிவலம் சுத்தப் போறீங்கன்னு சொல்லுங்க”

“நான் சுத்தறேன்பா”

“நீயா ஆனா இவ்ளோ நகைகள் போட்டுக்கிட்டு நீ சுத்தறது உனக்கு ரிஸ்க்மா”

“அப்பா எனக்கு எதுவும் ஆகாது, நான் வருஷக்கணக்கா இப்படித்தான் நகைகளோட இருக்கேன், அப்பவே எனக்கு எதுவும் ஆகலை இப்பவா ஆகப்போகுது”

“ஆனாலும் எனக்குப் பயமா இருக்கேம்மா”

“அப்பா எனக்கு கராத்தே தெரியும், நான் பார்த்துக்கிறேன் சரி நீங்களும்தானே வர்றீங்க”

“ஆமா உங்களை விட்டுட்டு எப்படி நானும்தான் சின்ன பொண்ணுங்க நீங்க 3 பேரும்தான் மீதியிருக்கற பெண்கள் கோயில்ல சாமி தரிசனத்திற்கு போகட்டும் இல்லையா இங்கிருக்கற சத்திரத்தில தூங்கட்டும். நானும் சரி மற்ற ஆம்பளைங்களும் சரி உங்களோட கிரிவலம் சுத்தறோம்.” என சொல்லிவிட்டு தன் மகள் சொப்னாவை பார்த்தார்

”கிரிவலம் சுத்தறப்ப வேண்டிக்க, இந்த கனடா மாப்பிள்ளை கூட கல்யாணம் எந்த பிரச்சனையில்லாம நல்லபடியா நடக்கனும்னு புரியுதா”

“புரியுதுப்பா” என்றாள் சொப்னா அடுத்து சுந்தரியை பார்த்தார்

”சுந்தரி நீயும் வேண்டிக்க”

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-15 19:18
அருமையான பதிவு சரவணனின் நிலைமை பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாViji. P 2019-04-15 18:00
super episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாAdharvJo 2019-04-15 16:25
:clap: :clap: nice update sasi ma'am (y) confusion is on :D facepalm Already Vaidhegi waiting...madhavi on hold (indha ponnu anaiku oduradhula busy ya irundhadhu pole irukku ;-) ) and swapna kann vizhithu swarpannam kangiral :Q: Saravana!! Govinda Govinda :dance: esply if u listen to masi arogara thaan :D

Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாvijayalakshmi 2019-04-15 11:11
nice episode all the best saravanan madhavi ungaludun seravendum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாதீபக் 2019-04-15 08:48
Super sis story. Really going interestingly :clap: . Eagerly waiting for next part sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாmadhumathi9 2019-04-15 08:22
:Q: ippadi oru kuzhappam uruvaaguthey? Enna seivathu? Maadhavikku ean ninaivu illai enna kaaranam sasi? V.v.v.very interesting aaga irukku. :thnkx: 4 this epi. :clap: (y) :GL: sasi.nice epi.egarly waiting 4 next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராணி 2019-04-15 07:48
மாதவிக்கு இப்படியொரு கஷ்டம் தன் தோழியாலயே வரனுமா இதுல சரவணன் நல்லா மாட்டிக்கிட்டேன் சரவணனால 3 பொண்ணுங்களும் கஷ்டப்படுவாங்க போல மாதவிக்கும் சொப்னாவுக்கும் சரவணனை பிடிச்சிருக்கு சரவணனுக்கு மாதவியைதான் பிடிச்சிருக்கு இதுல சுந்தரி ரொம்ப குழம்பிட்டா அடுத்த ஊர்ல இன்னும் என்னென்ன வேடிக்கை நடக்கப் போகுதோ :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top