Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes

“சரி அப்ப மறந்துபோய் இருக்கலாம், விவரம் சொன்னா என்ன நினைப்பாளோ? என்னை ஏத்துக்குவாளா இல்லை கல்யாணம் செல்லாதுன்னு சொன்னாங்களே அப்புறம் என்ன என்னை விட்டுடுங்கன்னு சொல்வாளோ தெரியலையே மாசி”

“எதுக்கு வம்பு பேசாம லவ் பண்ணி மறுபடியும் கல்யாணம் பண்ணிக்குங்க”

“லவ்வா” என அதிர்ந்தான் சரவணன்

“ஏன் வராதா”

“தெரியலையே எனக்கு பழக்கமில்லையே”

“இனிமேல பழகு அண்ணா”

“சரி வா போய் பழகலாம்”

“அண்ணா வேணாம், அண்ணி குடும்பத்தோடு வந்திருக்கு, நீ பாட்டுக்கு போய் தர்மஅடி வாங்க வேணாம்”

“டேய் நான் தொழிலதிபர்டா, பொம்பளை பொறுக்கி கிடையாது, பாக்கெட்ல விசிட்டிங் கார்டு இருக்கு அதைக் காட்டினா யாரும் என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க”

“இந்த வீராப்பு ஜம்பமெல்லாம் சேலத்திலதான் நடக்கும், இது வேற ஊரு”

“சரி இப்ப என்னை என்ன செய்யச் சொல்ற”

“அவங்களோட வேணாம் நாம தள்ளி உட்காரலாம் வாங்க”

“முடியாது நான் அவள்கிட்டதான் போவேன், என்னை பார்த்தாலாவது அவளுக்கு ஏதாவது ஞாபகம் வருதான்னு பார்ப்பேன்” என சொல்லிவிட்டு நேராக அவள் புறம் நடந்தான் மாசியுடன்

”பார்த்தியா நான்தான் சொன்னேன்ல என் லவ் உண்மை, அதான் மறுபடியும் மறுபடியும் நாங்க மீட் பண்ணிக்கிறோம்” என சொப்னா சொல்ல அதை அப்படியே நம்பினாள் மாதவி

”நிஜமாவா”

“ஆமாம் நீ வேணா பாரேன் அவரு நம்மகிட்டதான் வந்து உட்காருவாரு பாரு பாரு” என சொல்ல மாதவியும் ஆர்வமாகப் பார்த்தாள்.

சரவணனோ எதையும் யோசிக்காமல் நேராக அந்த 3 பெண்கள் அமர்ந்த இடத்திற்கு தொலைவாகவும் இல்லாமல் மிக அருகிலும் இல்லாமல் மாதவியை பார்த்தபடி அமர்ந்தான். அவனது பார்வை மாதவி மேலே இருந்தது.

மாதவியின் பக்கம் சொப்னாவும் எதிர்புறம் சுந்தரியும் இருந்த காரணத்தால் சரவணன் பார்க்கும் பார்வையை கண்டு குழம்பிய சுந்தரி

”இவன் யாரை பார்க்கறான்னு தெரியலையே”

“என்னைத்தான்” என சொப்னா சொல்ல அதற்கு சுந்தரி

“ஏன் மாதவிகூடதான் இருக்காளே”

“இல்லைப்பா என் உள் மனசு சொல்லுது அவரு என்னைத்தான் பார்க்கறாருன்னு”

“என் கண்ணு சொல்லுது, அவன் மாதவியைதான் பார்க்கறானு” என சுந்தரி சொல்ல அதற்கு சொப்னா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உன் கண்ணு சரியில்லை போய் டாக்டரை பாரு, எப்படியோ எனக்கு ஏத்த மாப்பிள்ளை கிடைச்சிட்டாரு” என அவள் சந்தோஷமாகச் கூறவும் மாதவி சொப்னாவின் முகத்தைப் பார்த்தாள். இதுவரையில் எதற்காகவும் இவ்வளவு சந்தோஷப்படாதவள் இன்று உலகத்தையே வென்றுவிட்ட மகிழ்ச்சியில் இருப்பதைக் கண்டு அவளது லவ் உண்மை போல, எதற்கு நாம் குறுக்கே என நினைத்து அதோடு விட்டாள். அதனால் அவள் அமைதியாக தலை குனிந்துக் கொண்டு இருக்கவும் சொப்னா மட்டும் வெட்கத்துடன் சிறு புன்னகையுடனும் சரவணனை பார்த்து வைத்தாள்

”அண்ணா”

“என்னடா”

“அண்ணி பார்க்கலையே”

“தெரியுது”

“ஆனா அண்ணா”

“இப்ப என்னடா”

“கூட இருக்கற பொண்ணு உங்களையே பார்க்குதே அண்ணா” என மாசி சொல்ல அப்போதுதான் அவன் சொப்னாவை பார்த்தான். அவளின் சிரிப்பு வெட்கத்தைக் கண்டு அதிர்ந்தவன் மாசியிடம்

”இந்த பொண்ணு எதுக்கு நம்மளை பார்த்து சிரிக்குது”

“யாருக்கு தெரியும் ஆனா உன் பொண்டாட்டி, உன்னை பார்த்து சிரிக்கலையே”

”நமக்கெதுக்கு அடுத்தவன் பொண்ணு, என் பொண்டாட்டி போதும் அவளே தங்க விக்ரகம் போல ஜொலிக்கறா”

“ஆமாம் ஆமாம் எவ்ளோ நகைகள் போட்டிருக்காங்க”

“டேய் கண்ணு வைக்காத, உதை வாங்குவ”

“இல்லை அண்ணா கிரிவலத்துக்கு எதுக்கு இவ்ளோ நகைகங்கன்னு”

“ஏன் அந்தக் காலத்தில என் பாட்டி இவளை விட அதிகமா நகை போடுவாங்க தெரியுமா”

“ஓ இது வேறயா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதான் அண்ணா, அங்க பாரு ஒரு ஆளு வரான்” என அவன் திருமாலை பார்த்து பேச அவர் வந்ததும் மாதவியிடம்

”மாதவி மாதவி வாம்மா போகலாம்” என அவர் கூப்பிட மாதவியும்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-15 19:18
அருமையான பதிவு சரவணனின் நிலைமை பாவம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாViji. P 2019-04-15 18:00
super episode. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாAdharvJo 2019-04-15 16:25
:clap: :clap: nice update sasi ma'am (y) confusion is on :D facepalm Already Vaidhegi waiting...madhavi on hold (indha ponnu anaiku oduradhula busy ya irundhadhu pole irukku ;-) ) and swapna kann vizhithu swarpannam kangiral :Q: Saravana!! Govinda Govinda :dance: esply if u listen to masi arogara thaan :D

Look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாvijayalakshmi 2019-04-15 11:11
nice episode all the best saravanan madhavi ungaludun seravendum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாதீபக் 2019-04-15 08:48
Super sis story. Really going interestingly :clap: . Eagerly waiting for next part sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாmadhumathi9 2019-04-15 08:22
:Q: ippadi oru kuzhappam uruvaaguthey? Enna seivathu? Maadhavikku ean ninaivu illai enna kaaranam sasi? V.v.v.very interesting aaga irukku. :thnkx: 4 this epi. :clap: (y) :GL: sasi.nice epi.egarly waiting 4 next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 04 - சசிரேகாராணி 2019-04-15 07:48
மாதவிக்கு இப்படியொரு கஷ்டம் தன் தோழியாலயே வரனுமா இதுல சரவணன் நல்லா மாட்டிக்கிட்டேன் சரவணனால 3 பொண்ணுங்களும் கஷ்டப்படுவாங்க போல மாதவிக்கும் சொப்னாவுக்கும் சரவணனை பிடிச்சிருக்கு சரவணனுக்கு மாதவியைதான் பிடிச்சிருக்கு இதுல சுந்தரி ரொம்ப குழம்பிட்டா அடுத்த ஊர்ல இன்னும் என்னென்ன வேடிக்கை நடக்கப் போகுதோ :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top