(Reading time: 11 - 22 minutes)

“என்ன சிவகங்காவதி முகத்தில் இருக்கும் புன்னகையைத் தாண்டிய கலக்கம் தெரிகிறதே!!உன் வசதிக்கு ஏதும் குறைவில்லையே!!”

“அண்ணா!!என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்..வாழ்க்கையின் அதிசயம் எத்தனை அழகானது.ஈசனின் திருவிளையாடல் தான் எத்துனை விசித்திரனமானது.எங்கோ பிறந்து வளர்ந்த நம் இருவரையும் சகோரத்துவத்தால் இணைத்து எனக்குத் தேவையான நேரத்தில் உதவும் செய்திருக்கிறார்.

இப்போது நீங்கள் என் வசதிக்கு குறைவா என்று வேறு கேட்கிறீர்கள்!!இதை நான் என்னவென்று சொல்வது?”,என்று புன்னகையாய் கேட்டவளை வாஞ்சையாய் தலை வருடிக்வொடுத்தான் ரத்தன்சிங்.

“இந்த சிறு வயதில் உனக்கு இத்துனை சிரமங்கள் வாய்த்திருக்க வேண்டாம்..என்ன செய்வது விதி என்ற ஒன்றை நம்மால் மீறிவிட முடியாதே!”

“உண்மைதான் அண்ணா புல் பூண்டு புழு செடி மரம் என என்னுடைய ஆறு அற்பப் பிறவிகளிலும் எத்துனை பாவம் செய்தேனோ அதற்கான பலனை அனுபவித்துதான் தீர வேண்டும் இல்லையா!!”

“உன்னிடம் வாதாடி வெல்பவர் யார் இருக்கிறார்!!சரி அது போகட்டும் இங்கு வந்ததில் இருந்து மிகவும் சோர்ந்து காணப்பட்டாயாமே?என்னவாயிற்று?”

“பெரிதாக ஒன்றுமில்லை அண்ணா எல்லாம் தங்களின் நண்பரைப் பற்றிய சிந்தனை தான்.என்னால் தங்களின் நட்பில் இப்படி நடந்துவிட்டதே என்று மனம் சமாதானப்பட முரண்டு செய்கிறது.”

“அட இதற்காகவா இப்படி இருந்தாய் நஸீமும் நானும் மனதால் நெருங்கிய நண்பர்கள்.சில உறவுகள் நம் அருகிலேயே இருந்தாலும் மனதால் தொலை தூரத்தில் இருப்போம்.ஆனால் சில உறவுகள் எத்தனை மைற்கற்கள் தூரத்தில் இருந்தாலும் மனம் விட்டுபேசி எத்துனை திங்கள் கடந்திருந்தாலும் அந்த உறவு என்பது அப்படியே பசுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு நம் உறவையே கூறலாமே சிவகங்காவதி.நீயும் நானும் மீண்டும் சந்திப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை ஆனால் எனை சந்தித்த நொடி உனக்கு சகோதரன் என்ற உரிமை அதுவாய் வந்ததல்லவா!

அதுபோல தான் நானும் நஸீமும்.அவனின் கோபமெல்லாம் சில காலம் தான்.அதற்கு மேல் அவனாலும் அதை தக்க வைத்துக் கொள்ள இயலாது என்னாலும் இயலாது.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இப்படியும் நட்புகள் கிடைப்பது நிச்சயமாய் வரம் தான் அண்ணா!!”

“உண்மைதான்.நஸீம் என் பால்ய கால நண்பன்.அவன் பிறந்த சில தினங்களிலேயே அவனின் அன்னை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவனது தாய் வழிச் சொந்தமான பாட்டி தான் சமீரா. அவர்தான் அவனை முழுவதுமாய் வளர்த்தவர்.

அவனது வாப்பா ஆட்சியில் மிகச் சிறந்தவர் என்று கூற முடியாவிட்டலும் ஓரளவு சிறந்து விளங்கினார். அந்த காலத்தில் அவனின் இயல்பே வேறு.மிகுந்த குறும்புகள் நிறைந்தவன்,நண்பர்களோடு சேர்ந்து அவன் செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.அப்படியான காலத்தில் தான் குருகுல கல்விக்காக அண்டை நாட்டு குருகுலத்தில் என் தந்தை எனைச் சேர்ந்திருந்தார்.

நஸீமும் அவர்களின் முறை கல்வி கற்ப்பதற்காக அருகிலிருக்கும் அவர்களின் இடத்திற்கு வந்திருந்தான்.நீ அறியாதது ஒன்றுமில்லையே,மாமன்னரின் வாரிசாய் இருந்தாலும் குருகுலம் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்று தான்.

அப்படிதான் எங்களுக்கான முதல் அறிமுகம்.விடுமுறை நேரத்திலோ சற்று ஓய்வு கிடைத்தால் கூட நாங்கள் அனைவரும் எதாவது புதிதாய் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்காவது சென்று விடுவோம்.

எப்போதுமே ரஜபுத்திரர்களும் ஷேகின்ஷாக்களும் நல்ல நட்புடனேயே இருந்திருக்கின்றனர்.அதனால் எங்கள் நட்பும் வலுபெற்றுக் கொண்டே இருந்தது.எனக்கு அவனும் அவனுக்கு நானும் உயிர் சிநேகிதர்களாய் மாறிவிட்டோம்.

அனைத்தும் சரியாய் சென்று கொண்டிருந்த நேரம் ஒரு நாள் அந்த துக்க செய்தி நஸீமை எட்டியது.உடல்நலக் குறைவால் அவனது வாப்பா இறந்துவிட்டார் என்பதே அது.அவனும் என்னைத் தவிர யாரிடமும் விடயத்தை கூறாமல் என்னையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு கிளம்பிவிட்டான்.

பாதி வழியிலேயே அரை மயக்க நிலையில் சமீரா பாட்டியை நாங்கள் கண்டோம்.ஓடிச் சென்று அவருக்கு குடிக்க நீர் கொடுத்து சற்றே தெளிவுபடுத்தினோம். நஸீமை கண்டவர் கண்கள் குளமாக விஷயத்தை அவனிடத்தில் கூறினார்.

மன்னர் இறந்தவுடன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் அவரை அரண்மனையை விட்டே அடித்து அனுப்பிவிட்டு நஸீமையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டதாய் கூறினார்.

நஸீமிற்கும் எனக்கும் என்ன செய்வதென ஒன்றும் புரியாத போதும் இப்போது முதல் கடமை அவன் உயிரையும் பாட்டியையும் காக்க வேண்டும் என்று உணர்ந்து அவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் குருகுலத்திற்கேச் சென்றோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.