(Reading time: 11 - 22 minutes)

அதன்பின் அங்கிருந்தவர்களின் உதவியோடு அவர்கள் இருவரையும் தலைமறைவாக்க உதவிசெய்தார் என் தந்தை.அங்கிருந்து பிரியும் நேரம் எனைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தான்.நிச்சயம் அடி மேல் அடி அவன் வயதுக்கு மீறிய பொறுப்புகள் என அவனை மொத்தமாய் பலமிலந்தவனாய் மாற்றியிருந்தது.

அதன்பின் அவனை நான் சந்தித்தது அவன் தந்தை இழந்த ராஜ்ஜியத்தின் மன்னனாய் தான்.அனைத்தும் நடந்தது இரண்டு வருட இடைவெளியில்.அவனை சந்திக்கச் சென்றபோது எனக்கு அத்துனை ஆச்சரியம் மொத்தமாய் இறுகிப் போயிருந்தான்.அளவான பேச்சு யாரையும் எட்டி நிற்க வைக்கும் நிமிர்வு ஆனால் அனைத்தும் சபையில் தான்.

நாம் நேற்று சந்தித்தோமே அதே இடத்தில் எனை ஆரத் தழுவி நெகிழ்ந்து நின்றிருந்தான் எங்களுக்கு கிடைத்த தனிமையில்.தேற்றும் திறனின்றி நான் தான் ஓய்ந்து போனேன்.

அப்போது அவன் கூறியது ஒன்று தான் யாரையும் எளிதில் நம்பிவிடாதே இந்த அரச வாழ்வில் துரோகங்கள் தான் நமை சூழ்ந்திருக்கின்றன.எப்போதும் எல்லோரிடத்திலும் எச்சரிக்கையுடன் இரு.எனக்கும் உனையன்றி இப்பிறவியில் நட்பு என்று யாரும் இருக்கப் போவதில்லை என்பதே

அதன்படி தான் இத்துனை வருடங்களும் அவனுக்கு சிநேகிதன் என்றால் நான் மட்டுமே.எனக்கும் அவன் மட்டுமே.அவனறியா ஓர் நிகழ்வு என் வாழ்வில் உண்டெனில் அது உன் சந்திப்பு மட்டும் தான்.அந்த ஆத்திரம் தான் அவன் என் மீதுகொண்ட கோபம்.

அவனுக்கும் எனக்கும் இடையில் நீ வந்துவிட்டாய் என்ற கோபம்தான்.ஆனால் அந்த மடையனுக்கு புரியவில்லை என்றுமே எனக்கான நண்பன் அவன் மட்டும் தான் என்று.விரைவிலேயே புரிந்து கொள்வான்.நீ எதற்கும் வருந்தாதே சிவகங்காவதி.”

“அண்ணா நீங்கள் கூறுவதையெல்லாம் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்வில் ஒவ்வொருவரருக்கும் இப்படி ஒரு நட்பு,இல்லை இல்லை நம்பிக்கை தேவை.எனக்கும் ஒருத்தி இருக்கிறாள் மணிமேகலை”,எனும்போதே அவள் உதட்டில் புன்னகை அரும்பியது.

“ம்ம் இப்போது தான் என் சிறு தங்கை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள்.இப்படியே இரு.”

“ஆமாம் வந்தவுடன் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அண்ணி அவர்களை நான் பார்க்கவேயில்லையே?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அவள் தன்னுடைய பிறந்த அகத்திற்குச் சீராடச்  சென்றிருக்கிறாள்.கணவனைப் பற்றிய அக்கறையே இல்லை இந்த பெண்களுக்கு”,என்று சலிப்பு போல் கூறுவதாய் கூறிச் சிரித்தான்.

“இதை அண்ணியாரிடம் தைரியமாக கூறுவீர்கள் என்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா!!”

“அட ஏனம்மா என் வாழ்வில் குழப்பம் ஏற்படுத்துகிறாய்.இதற்காகத் தான் என் நண்பன் திருமணமே செய்து கொள்ளாமல் நிம்மதியாய் இருக்கிறான்.”

“நானே இதைப் பற்றி கேட்க எண்ணிணேன்,ஏன் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.அதிலும் அவரின் வீர பராக்கிரமத்தை பார்த்தால் வெற்றி பெற்ற ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு திருமணம் செய்திருக்கலாமே?”

“அனைத்திலும் தனித்திருப்பவன் இதில் இன்னும் சிறந்தவன்.எங்களின் வாலிப காலம் தொட்டே அவனுக்கு பெண்களின் மேல் மிகுந்த ஈடுபாடு என்று ஒன்று இருந்ததேயில்லை.தேவையற்ற பேச்சு சிறு பார்வைகூட இருந்ததில்லை.அதற்கும் அவன் ஒரு விளக்கம் வைத்திருப்பான்.

அல்லாஹ்வின் ஆணைப்படி யாரோ ஒருத்தி எனக்காக நிச்சயம் பிறந்திருப்பாள்.அவளை பார்க்கும் நேரம் எனக்கே என் மனம் அவளால் நிறைந்து போவது புரியும்.அப்படிப்பட்ட ஒருத்தி மட்டும் தான் என் சதியாய் இருப்பாள்.அவளுக்காகவே என் வாழ்வு முழுமையையும் சமர்ப்பிப்பேன்.

அவளன்றி வேறொருத்தியை சிந்தையாலும் நினையேன்.அவளுக்காகவே காத்திருக்கிறேன் என்று கூறுவான்.ஆனால் அரைக் கிழவனாகியும் இன்னும் அப்படி ஒருத்தியை கண்டுபிடிக்கவில்லை அவன்.”

கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது.ஏனெனில் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் சிவகங்காவதி தன் தந்தையிடம் இதைத் தான் கூறுவாள்.

“எப்படி அப்பா ஒருத்தியை மணம் முடித்து அவளோடு தன் வாழ்க்கையை தீர்மானித்தப் பின் இன்னொரு பெண்ணை பற்றி சிந்திக்கத் தோன்றும்.அப்படியிருப்பின் அது எப்படி உன்னதமான பந்தமாகும்?இதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை தந்தையே எனக்காக,எனக்காக மட்டுமே தன் வாழ்வு முழுமையையும் அற்பணிக்கும் ஒருவனே என் பதியாய் வருவான்”,என்று கூறுவாள்.

சேதிராயனோ அதைக் கேட்டு குழம்பிப் போவார்.இப்படி ஒரு அரச வாரிசை நான் எங்கு சென்று தேடுவது?இராமபிரான் போன்ற மாப்பிள்ளையை அடைய நீ இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்று கூறிச் செல்வார்.இப்போது தேவையில்லாமல் மனம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எதை எதையோ சிந்திக்க ஆரம்பித்திருந்தது. 

தொடரும்...

Episode 09

Episode 11

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.