(Reading time: 7 - 13 minutes)

அவள் தனியாய் பார்த்த பிரவசத்தில் ஜனித்த முதல் சிசு அது..!! விழியின் ஓரம் இரு துளிகள்..!! மனம் முழுவதும் அத்தனை மகிழ்ச்சியாய்..!!

“டாக்டர்..”, செவிலிப்பெண் நிஷாவை மோன நிலையிலிருந்து வெளிக்கொண்டுவர..

“சொல்லுங்க சிஸ்டர்..”, என்றிருந்தாள் புன்னகைத்தபடி..

“உங்களைப் பார்க்க விசிட்டர்ஸ் வந்திருக்காங்க..”, என்றிட.. குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு தனது அறைக்கு விரைந்திட.. சிரிப்பு சத்தம் மட்டுமே அந்த அறையில் பிரதானமாக..!!

“யாருடா அது..??”, என்பதாய் இவள் அறைக்கதவைத் திறந்திட.. கவினும் பிரஜித்தும்..!!

“கவி.. பிரஜி..”, வார்த்தைகள் வெளிவரவில்லை அவளுக்கு..!! வருடங்கள் கடந்து இருவரையும் காண்கிறாள் பெண்..!!

நாதன் வெளிவந்தபின் பிரஜித் தனது மேல் படிப்பிற்காய் சென்றிட.. அவனுடனேயே கவினும்..!! என்னவோ அந்நேரத்திற்கு பிரஜித்துடன் இருக்க வேண்டும் என்று கவினுக்குத் தோன்றிட.. பிரஜினுடன் சென்றிருந்தான்..!!

இருவரும் தங்களுக்கான பாதையை நோக்கிச் சென்றிட.. நிஷா தனது இளங்கலை பட்டம் முடித்து.. இந்தியாவிலேயே மகப்பேறு மருத்துவம் படித்தாள்..!!

இப்பொழுது அரசு மருத்துவர் அவள்..!! சொல்லப் போனால் முதல் திருநங்கை அரசு மருத்துவர்..!!

வழக்கம்போல் ஏற்றம் இறக்கம் என அவளது பயணம் தொடர்ந்துகொண்டிருக்க இவர்கள் இருவரையும் இவள் இங்கு எதிர்பார்த்திடவே இல்லை..!!

அன்று என்னவோ அனைத்தும் நல்லதாகவே நடப்பதாய் ஒரு மாயத்தோற்றம் அவளுக்குள்..!!

“வீ ஆர் பேக் நிஷ்..”, இருவரும் கோரஸாக சொல்ல.. அப்படியொரு புன்னகை அவளிடம்..!!

அத்தனை கதைகள் இருந்தது மூவரும் பேசிக்கொள்ள.. கடந்துபோன காலங்கள்..!! கற்றுக்கொடுத்த பாடங்கள்..!!

“நிஷ்.. இப்போ செல்விக்கா எங்க..??”, நினைவு வந்தார்போல் கேட்டிருந்தான் கவின்..!!

“திருச்சில இருக்காங்க.. பாலா மாமாவும் அங்கேயே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க..”, பெருமையாக..

ஆமாங்க.. நம்ம பாலாவை பெரிய மனுசு பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தாரிகை..!!

திருச்சி கலெக்ட்டர் ஆபிஸ்..!!

மேகமது தூறலாய் சாரலடித்துக்கொண்டிருந்தது..!! மாலை நான்கை கடந்ததாலோ என்னவோ கொஞ்சம் வெறிச்சோடித்தான் கிடந்தது அலுவலகம்..!!

கையில் காபிக் கோப்பை குடிப்பெயர்ந்திருக்க வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் செந்தாரிகை..!!

வருடங்கள் கடந்தபொழுதும் அவளிடம் பெரிதாக மாற்றம் வந்திருக்கவில்லை..!! அதே கம்பீரம்.. அதே அழுத்தம்..!! அனைத்தும் இன்னும் கூடியது போலவே ஒரு தோற்றம்..!!

வாழ்க்கை அவளைத் துரத்தத் துரத்த அவளும் ஓடிக்கொண்டிருக்கிறாள் அதனுடன் அத்தனை வேகமாக.. களைப்பு மட்டும் இதுவரை தோன்றவே இல்லை..!!

தாய் தந்தை சமூ அக்கா மொழி அக்கா என அனைவரையும் ஒரே இடத்தில் குடியமர்த்தியள் சில காலம் அப்படியொரு ஓட்டம்..!! ஓய்வில்லா ஓட்டம்..!!

சற்றே அதற்கு கடிவாளம் இடுவதுபோல் பாலாவின் வருகை.. அவள் வாழ்க்கைக்குள்..!!

நழுவும் மீனாய் இவள் அவனிடமிருந்து விலகிட வலைவிரித்து அதுனுள் அவளுடன் மூழ்கியிருந்தான் அவன்..!!

காபிக் கோப்பை காலியாகி இருக்க அதனை மேஜை மீது வைக்க வந்தவளை வரவேற்பதுபோல் பூச்செண்டு..!!

“இவன் திருந்தவே மாட்டான்..”, சலிப்பாக முனுமுனுத்தபடி அதை அவள் கையில் எடுத்து வருடிட.. இறுக்கம் அழுத்தமெல்லாம் மறைந்து அப்படியொரு சிரிப்பைத் தத்தெடுத்திருந்தது அவள் முகம் அதில் எழுதியிருந்ததை வாசித்து..!!

பஜ்ஜியும் சொஜ்ஜியுமாய்

உன் வருகைக்காய்

காத்திருக்கிறேன் பூமயிலே..!!

தாம்தான் நீ செய்தால்

விழுங்கிவிடுவேன் என் தாரிகையே..!!

—முற்றும்—

Episode # 33

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.