(Reading time: 12 - 23 minutes)

மல்லேகூம் அஸ்லாம் நஸீம்.என்ன நடந்து கொண்டிருக்கிறது.ஆளுநராய் பதிவியேற்று சிறிது தினங்கள் கூட ஆகவில்லை.அதற்குள் இப்படி ஒரு அதிருப்தியை கொடுத்திருக்கிறாயே எனக்கு!”

அதிருப்தி வரும் வகையில் நான் என் கடமையிலிருந்து தவறவில்லையே உசூர்!!”

புத்திசாலிதனத்தை என்னிடம் காட்டும் அவசியமில்லை என்றே எண்ணுகிறேன்,நான் கூறுவது உன் நிக்காஹ் பற்றி.”

அது என் தனிப்பட்ட விடயம் உசூர் அதற்கும் நிர்வாகத்திற்கும் சம்மந்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை

நஸீம் நீ நம் மதத்தின் பெண்ணை திருமணம் செய்திருப்பின் அதைப் பற்றிய எந்த அக்கறையும் எனக்கு கிடையாது.ஆனால் அவள் பிறப்பால் ஓர் இந்து!இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று தோன்றவில்லையா உனக்கு?”

உசூர் தங்களை எதிர்த்து வாதம் புரிவதாய் எண்ண வேண்டாம்.மதமும் கடவுளும் மக்களை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி அதன் பெயர் கூறி மக்கள் தங்களுக்குள் பிரிவினை புரிவதற்கு அல்ல.

அதுமட்டுமின்றி ஒரு பேரரசரான தங்களின் கீழ் எத்தனையோ சிற்றரசுகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களே அப்படியிருக்க நான் செய்ததில் ஏதேனும் தவறு இருக்கிறதா கூறுங்கள்”

நஸீம்!!!நீ என்ன சமாதானம் கூறினாலும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.வேற்று மதத்தின் பெண் அரண்மனையின் ஆசை நாயகியாக இருக்கலாமேயன்றி அரசியாய் இருப்பதற்கு எவ்வித தகுதியும் கிடையாது

உசூர் இதற்குமேல் இதை பற்றிய வாதம் அவசியமற்றது.கங்கா இந்த இஷான் நஸீமின் மனைவி.என் சிற்றரசின் அரசி இதை யாராலும் மாற்ற இயலாது.அவளைப் பற்றிய பேச்சுகள் நிர்வாகத்திற்கு அவசியமற்றது எனவே இதற்குமேல் இதில் ஒன்றுமில்லை.நான் வருகிறேன்.”

அத்தனை திடமாய் கண்களில் ஒருவித தீவிரத்தோடு பேசுபவனை எதுவும் கூறும் வழியின்றி பேரரசர் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அதற்குள் அரசவையில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

ஷேகின் ஷாவையே எதிர்த்து பேசும் துணிவை ஆளுநருக்கு வழங்கியது எவர்!!”

கேவலம் ஒரு பெண்ணிற்காக இத்துனை பேர் முன்னிலையில் அரசரையே எதிர்க்கிறானே!”

போதும் தேவையற்ற சலசலப்பு வேண்டாம்.நஸீம் கூறியதுபோல் அது அவனது தனிப்பட்ட விடயம் அதையும் நிர்வாகப் பணிகளையும் இணைத்து வைத்து சிந்திக்க வேண்டாம் என்றே எனக்கும் தோன்றுகிறது.

இங்கு உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறவுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் யாரையும் அரசவையிலேயே வைத்திருக்க முடியாது.எனவே அவரவர் பொறுப்புகளை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது.”,என்ற பேரரசரர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட மீண்டும் அனைவருமாய் நஸீமிற்கு எதிராய் தங்கள் உரையாடலைத் தொடங்கினர்.

அவனது வலிமையும் நிர்வாகமும் கூட நம் அரசரின் வெற்றிக்கான முக்கிய காரணம்.எனவே தான் அவனைப் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் விட்டு வைத்திருக்கிறார்.”

உண்மைதான் இருந்தும் அவனுக்கெதிரான சிற்றரசர்களின் எண்ணிக்கை இந்த நிக்காஹ்ஹிற்கு பிறகு இன்னும் அதிகரித்திருக்கிறது.நஸீமை வீழ்த்துவதற்கு காத்திருந்தவர்களுக்கு இப்போது இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

கூடிய விரைவில் இந்துஸ்தானத்திற்கு புது ஆளுநர் மாறிவிடுவார் போல் இருக்கிறது”என்று  ஒவ்வொருவரும் தங்கள் மனதின் வஞ்சக எண்ணங்களைக் கருத்துகளாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்து வெளிவந்திருந்த நஸீமிற்கு பெரிதாய் எதிலிருந்தோ விடுபட்டது போன்ற ஓர் உணர்வு.கங்காவை கரம்பிடித்ததில் அவன் பெரிதாய் சிந்தித்தது அவரைப் பற்றி மட்டுமே.அவர் தன் மீது வைத்திருக்கும் நன்மதிப்பை இழப்பதென்பது வேறு.அதைக் கூட பொறுத்துக் கொள்ளவே தயாராகியிருந்தான்.ஆனால் சிவகங்காவதியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்பதே மிகப் பெரிய அச்சமாய் இருந்தது.

ஒன்று அவள் இல்லை ராஜ்ஜியம் என்று கூறியிருந்தல் கூட அவள்தான் என்று முடிவுசெய்து அனைத்தையும் விட்டுச் செல்வதற்கு தயாராகத் தான் வந்திருந்தான்.அந்த விதத்தில் இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது.இனி எதற்காகவும் அவனது கங்காவை விட்டு விலகி நிற்கத் தேவையில்லை என்றே தோன்றியது.

சில அரச பணிகள் நிலுவையில் இருந்ததால் மேலும் இரு தினங்கள் அங்கிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நஸீமிற்கு.

இங்கு சிவகங்காவதியோ மனதால் ஒடிந்து போயிருந்தாள்.தன்நாட்டை காக்க வேண்டும் என்பதையும் தாண்டி இஷான் தன்னை ஏமாற்றினான் என்பதை தாங்கிக் கொள்ளவே முடியாமல் போது.

அதுவும் முதுகில் குத்துவதற்கு அவன் கையில் ஏந்திய ஆயுதம் காதல்!!!எப்படி அவனால் இது முடிந்தது.அவனது இயல்பே ஒரு வேளை இதுதானா?என்னால் தான் இதை ஏற்க முடியாமல் போகிறதா!இப்படிபட்ட ஒருவனுக்காக என் மனதை இழக்கத் துணிந்தேனே!இத்துனை பலகீனமானவளாகவா வளர்ந்திருக்கிறேன்”,என்று மேலும் மேலும் இதைப் பற்றி எண்ணித் தவித்தவளுக்கு அவன் மேல் தான் கொண்ட காதலால் தான் இத்துனை தவிப்பும் என்பதை புரிய வைப்பவர் யார்!

அவளின் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடை ,எதிரில் இருப்பவன் இஷான் நஸீமாய் இருப்பதால் தான் தன்னை தானே நொந்து கொண்டு தவிக்கிறாளேயன்றி வேறொருவன் எனில் எப்போதோ இந்த வாழ்வை தூக்கியெறிந்து சென்றிருப்பாள் என்பதே.இந்த நொடி வரையிலும் அவள் உணராமல் இருக்கும் இதை உணர்த்துவதற்காக இன்னும் இன்னல்கள் அனுபவிக்க காத்திருக்கிறாள் என்பதை ஈசனே அறிவான்

தொடரும்...

Episode 13

Episode 15

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.