Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

டுத்த ஷார்ட் பிலிம் ஒரு காதல் கதையா எடுக்கணும். இந்த எழுத்தாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு நல்ல காதல் கதை எழுதித் தரச் சொல்லணும் என்று தனக்குள் சொன்னவாறே அமுதன் கதையைத் தொடர்ந்து வாசிக்கலானான்.

வெள்ளைத்தாமரை இதழ்-9     இதோ ஒரு காதல் கதை  பகுதி-9

ராபினிடம் பேசிவிட்டு, ரம்யா வகுப்புக்குத்  திரும்பியதும்  மதி  அவளை நோக்கி வேகமாக  வந்தாள்.

என்ன ஆச்சு  மதி ? ஏன் இவ்வளவு வேகமா வர்றா?

ரம்மி! லஞ்ச்  பிரேக்ல உன்னைத்தேடி  பிசிக்ஸ்  லேப் பேட்ச்மேட் பாபு  வந்தான். அவனுக்கு வேல்யூஸ் கரெக்டா இல்லையாம். நீ உன்னோட  ரெகார்ட்  நோட் தர  முடியுமான்னு  கேட்டான்.

என்ன மதி, இப்படி வேல்யூஸ் காப்பி பண்றது தப்பு தானே? நான் அவனுக்கு என் ரெக்கார்ட் நோட்லாம் குடுக்கல!

இல்லைடா ரம்மி , நீ  உன்  வேல்யூஸ் பார்த்து எழுதக் குடுக்கலைன்னா , ரிசல்ட் காட்ட முடியாது! அவனுக்கு இன்டெர்னல் மார்க்  கூட  கொறஞ்சிரும் , பாவம்  கொஞ்சம்  ஹெல்ப் பண்ணுடா.

அரைமனதுடன் சம்மதித்த ரம்யா, பாபுவிடம் ரெகார்ட் நோட் வைத்து  வேல்யூஸ் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு  இருந்தாள் ரம்யா. கீதாவைப் பார்க்கும்  சாக்கில் ரம்யாவின் வகுப்பறைக்கு வந்த  தினேஷ் கண்ணில்  அவர்கள்  பேசுவதை  கண்டதும் பொறாமை  மூண்டது..

"கீதா, கலகலன்னு உன்னை மாதிரி பேசுற யதார்த்தமான பொண்ணுங்களக் கூட நம்பிறலாம் . ஊமைக்கோட்டான்  மாதிரி இருந்துட்டு சிலது பண்ணுகிரதெல்லாமே கேடித்தனம்னு!” ரம்யா காதுகளில்  விழுமாறு சொன்னான் . 

"என்னடா சம்பந்தமே இல்லாமல் உளறிட்டு இருக்கிற?" என்றாள் கீதா.

தினேஷ் "ஆமா கீதா, நான் பேசுறதெல்லாம் உளறல் மாதிரி தான் இருக்கும்.ஆனால் அது தான் உண்மை!”. என்றான் காட்டமாக.. புரியாமல் விழித்தவளிடம் தொடர்ந்து, “சரி நான் வரேன் கீதா!”என்றவாறே கிளம்பினான் தினேஷ்..

தினேஷ் சொல்வது காதில் விழுந்தாலும், கோபம் வந்தாலும், அதை  அலட்சியம்  செய்தவாறே , பாபுகிட்ட வேல்யூஸ் சொல்லிக்கொண்டு இருந்தாள் .

“ரொம்ப தேங்க்ஸ் ரம்யா!” – பாபு.

“பரவாயில்லை பாபு, இந்த ஒரு தடவை நான் உனக்கு உதவி பண்ணிட்டேன். ஏன்னா கடைசி நிமிஷத்தில உன்னால எக்ஸ்பரிமென்ட் எல்லாமே திரும்பப்  பண்ண முடியாதுன்னு தான். அடுத்த தடவை , நீயே  வேல்யூஸ்  கரெக்டா நோட் பண்ணு! என்கிட்டே ஹெல்ப்  கேட்க கூடாது!  என்று சொன்னாள்.

“நான் ஸ்கூல்ல பிசிக்ஸ்  சரியாப் படிக்கல , அதான்   இப்ப கஷ்டமா  இருக்கு . ப்ளீஸ் ரம்யா , தெரியாத எக்ஸ்பரிமென்ட்  எல்லாம் நீ கொஞ்சம் தயவு செஞ்சு சொல்லித் தந்தால் எனக்கு ரொம்ப உதவியா  இருக்கும்”- இது பாபு .

“சரி பார்க்கலாம்!” . –  ரம்யா.

தினேஷ், உண்மையில் ரம்யாவின் வகுப்பிலிருந்து செல்லவில்லை. கண்மணியும் கார்த்திக்கும் பேசிக்கொண்டு இருக்கும் போது கார்த்திக் பின்னாடி மறைந்து தான் நின்று கொண்டு ரம்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடம் பாபு நட்பாகி  விடுவானோ  என்ற  எண்ணம்  கூட பொறுக்கவில்லை  தினேஷுக்கு. அவள் தான் அடுத்த தடவை எக்ஸ்பரிமென்ட் எல்லாம் நீயா பண்ணிக்கோன்னு சொல்றாளே. இந்த பாபு சும்மா  விடுறானா? பிட்டு பிட்டா போடுறானே! அவனை! "  என்று பல்லை கடித்து கொண்டிருந்தான் தினேஷ். உள்ளே ரம்யா என்ன பேசுகிறாள் என்று  தான்  உன்னிப்பாக கவனிப்பதில்  இருந்தான்  அவள் அறியாமல்..

கண்மணி, அப்பாடி அந்த இம்சை ஒழிஞ்சானா? சல சலன்னு என்ன ஒரு நக்கல் பேச்சு!

என்று திட்டிக்கொண்டே வெளியே ரம்யாவும் எட்டிப் பார்த்தாள். தினேஷ் அங்கிருந்து வேகமாக மாடிப்படிகளை நோக்கி நடந்தது தெரிந்தது. அய்யயோ இவன் இங்கேயா நின்னுட்டு இருந்தான்! உதட்டைப் பிதுக்கினாள் ரம்யா.  கார்த்திக் விடைபெற்றுச் செல்ல, கண்மணியும் ரம்யாவும் அடுத்த வகுப்புக்கு தயார் ஆனார்கள்.

மாலை ஆனதும், வீட்டுக்குச் செல்ல கல்லூரிப்பேருந்தில் ஏறினார்கள் ரம்யாவும், கண்மணியும்.

கண்மணி நான் ஜன்னல் கிட்ட உக்கார்றேன் ப்ளீஸ்.  

ரம்மி கார்த்திக் பஸ் ஸ்டாப்ல நிப்பான். நான் பார்க்கணும்.

தினமும் தான் அவனைப் பார்க்கிறே!இன்னிக்கு ஒரு நாள் பார்க்கலைனா ஒன்னும் ஆகாது..

அதெல்லாம் உனக்கு புரியாது ரம்மி

கண்மணி நான் ஜன்னல் கிட்டதான் உக்காருவேன் ,  இல்லாட்டி வேற சீட் போறேன்.

சரி உக்கார்ந்து தொலை!

பஸ் ஸ்டாப் வந்தது. கண்மணி ரம்யா முகத்தை பார்த்தாள், பஸ் ஸ்டாப்பில் யாரையோ ரம்யா தேடுவதாக பட்டது அவளுக்கு..

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Latest Books published in Chillzee KiMo

 • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
 • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
 • Katru kodu kannaaleKatru kodu kannaale
 • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
 • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
 • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
 • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
 • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-05-19 20:06
facepalm marubadiyum wrong place-la pause pottutingale, madam ji!! Anyway indha vaatiyum rummy :P escape agiduvanganu ninaikuren but andha paper la ena irukkum :Q:
interesting update ma'am :clap: :clap: Dhinesh oda possessiveness-ku palan kedichidicho? I mean did ramya search him @ bus stop :Q: curious to read next epi...

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-05-19 18:14
:clap: nice epi. (y) romba nalla kathai poguthu adutha epiyai eppothu padippom ena aarvama irukku. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்திSrivi 2019-05-19 11:44
Cool update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்திPrathap jansi 2019-05-19 11:06
Nice episode (y) waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top