(Reading time: 16 - 31 minutes)

கால் பண்ணி பாரு டா என்னனு கேளு..”

“!!?”

ஆத்வி எந்த பிரச்சனையும் இருக்காது என்னனு கேளு..”

அவள் எண்ணிற்கு அழைத்துவிட்டு அவள்அழைப்பை ஏற்கும் சில நிமிடங்களுக்குள் கோடிமுறை செத்துப் பிழைத்திருந்தான்.அவள் தந்தைக்கு எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என லட்சம் முறை மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.அதற்குள் மறுபுறம் அவள் குரல் கேட்க பதட்டமாய்,

ஹலோ ஷான்யா..அங்கிள் எப்படியிருக்காங்க..சாரி நைட் கால் வந்ததை கவனிக்கல..”

அப்பா நல்லாயிருக்கார்..வீட்டுக்கு வந்துட்டோம்..உங்களை பார்க்கணும்னு சொல்றார்..அதான் கால் பண்ணிணேன்..”

என்ன??”

ஆமா கண் முழிச்சு உங்களைத் தான் தேடினார்..அப்பறம் உங்க ப்ரண்டையும்..முடிஞ்சா அவங்களையும் கூட்டிட்டு வாங்க..”

ஓஓ சரி ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துட்றேன்..”,என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு ஜீவிகாவிடமும் ஜெயந்திடமும் விஷயத்தை கூறினான்.

நீங்க ரெண்டு பேரும் கூட வந்தா எனக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும் ப்ளீஸ் மச்சான்..”

சரி ஆத்வி நீ வீட்டுக்கு போய் குளிச்சு ரெடி ஆய்ட்டு ஜீவியையும் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு வந்துரு..எனக்கு கடைல ஒரு சின்னவேலை இருக்கு முடிச்சுட்டு நேரா அங்க வந்துட்றேன்..உனக்கு ஓகே தான ஜீவி?”

ம்ம் சரிங்க எனக்கு காலேஜ் லீவ் தான..நான் கால் பண்ணி அத்தை மாமா கிட்ட சொல்லிட்றேன்..”

ஆத்விக்கின் வீட்டில் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு ஜெயந்த் கிளம்ப ஜீவிகா எப்போதும் போல் வளவளத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.அவளைக் கண்டதில் ஆத்விக்கை சரியாய் கவனிக்காமல் போக அவன் தனதறைக்குள் சென்று நுழைந்து கொண்டான்.

குட்டியேய் எப்படி இருக்க?மாப்பிள்ளை வரலையா?”

அவரு தான் ஆன்ட்டி வந்து விட்டுட்டு போனார்..கடையில ஏதோ வேலையாம் அவசரமா கிளம்பிட்டார்.”

எப்படி இருக்க ஜீவிம்மா..”

அங்கிள் பார்த்தா எப்படி தெரியுது ஒரு சுத்து குண்டாய்டேன் தான?மாமியார் சமையல் நல்லா கட்டு கட்டுனு கட்றேன்..”

அட ஏன் நீ சமைக்குறதில்லையா மாமியார் ஒண்ணும் சொல்லலையா?”

ஏன் சொல்லாமஎன் புருஷனும் புள்ளையும் பாவம் ஜீவிம்மா..இன்னும் கொஞ்ச நாள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு சொல்லிட்டாங்க..ஜீவிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம் இதான்…”

ஹா ஹா..பரவால்லையே தெளிவா தான் இருக்காங்க..”

அங்கிள் யூ டூ ப்ரூட்டஸ்…”

அதற்குள் ஆத்விக் குளித்துத் தயாராகி வந்திருந்தான்.ஜீவிகாவும் அவனோடு கிளம்பத் தயாராக,

என்ன டா இப்போதான் வந்தீங்க அதுகுள்ள எங்க கிளம்பி நிக்குறீங்க ரெண்டு பேரும்?”

ஆன்ட்டி போகும்போது எங்க போறீங்கனு கேக்கலாமா டூ பேட்..”

ம்ம் அப்போ வரும்போது எங்க இருந்து வருவீங்கனு சொல்லிட்டு போங்க..”

ப்பாபா டேய் ஆத்வி ஆன்ட்டி செம ஃபார்ம்ல இருக்காங்க வா ஓடிரலாம்என்றவள் அவனை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

வர வர ரெண்டும் சேர்ந்து ஏதோ களவாணித்தனம் பண்ணுதுங்க..என்னனு கண்டு பிடிக்கனும் முதல்ல..”

யாரு இதுங்களா அவ்ளோ வொர்த் எல்லாம் கிடையாதுங்கநாம இப்படியெல்லாம் யோசிச்சா நமக்கு பல்ப் குடுத்துருவாங்க..நீங்க போய் வேலையை பாருஙக..”

அங்கு வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த பென்ஞ்சில் அமர்ந்திருந்தவளின் மனதில் முந்தைய நாளின் நினைவுகள் வலம் வந்து கொண்டிருந்தன.

ஆத்விக்கை திட்டி அங்கிருந்து அனுப்பியவள் தன் தந்தையின் அறை வாசலில் பதட்டமாய் நின்று கொண்டிருந்தாள்.அவள் அன்னை ஒருபுறம் அழுது ஓய்ந்திருக்க ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்தாள்.

சில நிமிடங்களில் வெளியே வந்த டாக்டரிடம் அவசரமாய் சென்றவள் அவர் என்ன கூறுவாரோவென விழித்து நினன்றாள்.

நத்திங் டூ வொரி..ரெஸ்ட்லெஸா இருந்துருக்காரு..பீபி அண்ட் ஷுகர் அப்நார்மல் ஆகி பெய்ண்ட் ஆய்ருக்கார்.இன்ஷெக்ஷன் போட்டுருக்கேன்..கொஞ்சம் தூங்கட்டும் தென் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..அண்ட் தர்ற மெடிசின் எல்லாம் தவறாம கொடுங்க ஒன் வீக் கழிச்சு ரிவ்யூ அழைச்சுட்டு வாங்க..ஓகே?டேக் கேர்..”,என்று கூறி நகர்ந்தார்.

அதன்பின் சற்றே தெளிந்தவளாய் அன்னையையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றவள் அட்டெண்டருக்கான படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.கண் விழித்த பின் அப்பா என்ன கேட்பார் என்ற ஒரு கேள்வியே மீண்டும் மீண்டூம் அவளை அச்சுறுத்தியது.அவர் ஏதும் கூறும் முன் தானே நிலைமையை விளக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.