(Reading time: 8 - 16 minutes)

விஜய். சொல்லுங்க சார் உங்க படம் "எனக்குள் ஒருவன்" கடந்த வருஷம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிருக்கு நிறைய கேட்டகிரில நாமினேட் ஆயிருக்கு இதை பற்றி என்ன சொல்லபோறீங்க? நல்ல படங்களை சமுதாயத்திற்கு தரணும் அந்த நோக்கத்துல தான் நான் என்னோட எல்லா படங்களையும் எடுக்குறேன் அத மக்களும் ஏத்துக்குடாங்கனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு இந்த மாதிரி படங்களுக்கு விருதுகளும் வரவேற்பும் கிடைச்சா வருங்காலத்தில் இதை மாதிரி நிறைய நல்ல படங்கள் வரும் என்று தன் சாந்தமான குரலில் சொல்லி முடித்தார். சவுத் இந்தியா என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று அனைத்து மாநிலத்திலிருந்தும் பிரபலங்கள் அழகிய ஆடைகள் நகைகள் மேக்கப் போட்டு ். சோனாளி சற்று கையை மட்டும் அசைத்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்துக்குள் நேராக சென்றுவிட்டாள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு..............

மேரே சப்பினோன் கி ராணி கப் ஆயிகி து

ஆயி ருத் மஸ்தானி கப் ஆயிகி து

பேட்டி ஜாயி ஜிந்தகானி கப் ஆயிகி து

சலியா து சலியா..................................................

என்று பழைய ஹிந்தி பாடலை பாடிக்கொண்டே பேருந்தில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர் சில கல்லூரி மாணவர்கள். பசுமையான மலைகள் ,சுவாசிக்க சுத்தமான காற்று, செழிப்பான வனப்பகுதிகள் உடலை நடுங்க வைக்கும் குளிர் என அனைத்தையும் கொண்டுள்ளது இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அசாம் மாநிலம். இந்த அழகான சொர்க்க பூமியில் அமைந்திருக்கும் காஸிரங்கா நேஷனால் பார்க்கை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது இந்த பேருந்து.

அந்த பேருந்தில் இருந்த சிலர் இயற்கை அழகை ரசித்து வந்தனர்,ஒரு குழந்தை மாணவர்கள் பாடும் பாடலுக்கு கைத்தட்டி கொண்டு ரசித்து கொண்டிருந்தது. வயதான இருவர் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்கி கொண்டு இருந்தனர்.ஒரு ஹனிமூன் ஜோடி தங்கள் பழைய காதல் கதையை பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் விளையாட்டுதனமாக கையால் அடித்துக்கொண்டனர். வெள்ளைக்காரன் ஒருவன் "வாட் எ பியூட்டிஃபுல் வியூ" ! என்று சொல்லி தன் கையில் இருக்கும் கேமராவில் கிளிக் செய்தான்.இதை அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே கண்டக்டர் டிக்கெட்டுகளை விற்று கொண்டிருந்தார். தலையில் உல்லன் தொப்பியும் கழுத்தில் ஸ்கேர்ப்வும் போட்டு கொண்டு டிரைவர் பேருந்தை அளவான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார்.

திடீரென பேருந்து செக்கிங்கில் நிறுத்தப்பட்டது போலீஸ் இருவர் உள்ளே சென்று அனைத்து பயணிகளையும் சோதனையிட்டனர்.அப்போது அங்கு டிரைவரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ஒருவன் மிக வேகமாய் எழுந்து டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டான். ஏய் ......டிரைவர் ஒழுங்கா வண்டிய எடு இல்ல உன் கழுத்த அறுத்துறுவேன் என்று பயமுறுத்தினான்.இதை பார்த்து கொண்டிருந்த போலீஸ் டேய்....நீ யாருனு எனக்கு தெரியும் நீதான் அசாமில் படிக்கிற பல பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு "ட்ரக்ஸ்" சப்ளை பண்றது ஒழுங்கா மரியாதையா டிரைவரை விட்டுறு இல்ல உன்னை என்ன பண்ணுவோம்னு தெரியுமுல என கரத்த குறலில் மிரட்டினார். இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் டேய்....டிரைவர் வண்டிய எடுக்குறியா? இல்லையா? என கத்தியை கழுத்தின் அருகே எடுத்து செல்ல டிரைவர் முகத்தில் மரணபயம் ஏற்பட்டு சட்டென்று ஸ்டேரிங்கை போட்டு வண்டியை ஓட்டினார்.இதைப்பார்த்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் உறைந்து போய் அடங்கிவிட்டனர்.

டேய் .....டிரைவர் ஸ்பீடா போ எங்கேயும் நிறுத்தாத ஏய் போலீஸ் ஒழுங்கா கையத்தூக்கு உன் போலீஸ் வேலையெல்லாம் இங்க காட்டாத துப்பாக்கி மேல கைய வெச்ச டிரைவர் காலினு சற்றும் அசராமல் கத்தினான். அந்த பகுதியில் தற்போது புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது பாதி முடிந்த நிலையில் இருந்த அந்த பாலத்தில் இன்ஜினியர், சூப்பர் வைசர், கொத்தனார், கூலி ஆட்கள் என வேலை பார்த்து கொண்டிருந்தனர். அதிக வேகத்தில் வரும் புயலை போல பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அந்த பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு நிமிநடமும் "டிக் டிக் டிக்" என்று இதயத்தில் அடித்து கொண்டிருந்தது.

அதிரடி தொடரும்...

Episode 02

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.