(Reading time: 13 - 26 minutes)

ஆம் மனதிலிருப்பதை கொட்டிவிட்டாலும் பாரம் மட்டும் இன்னும் அழுத்திக் கொண்டு தான் இருக்கிறது.அவரை சற்று நாட்கள் என் கண்களில் படவேண்டாம் எனக் கூறியிருக்கிறேன்.”

புரிகிறது..ஆனாலும் தங்கள் தமையனை..மன்னித்து விடுங்கள் அப்படிச் சொல்லலாம் அல்லவா?”

நீ சொல்லாமல் இருப்பதனால் அது உண்மையில்லை என்று ஆகிவிடாதே கங்கா..”

அவரை என்ன செய்யப் போகிறீர்கள்?”

இன்னும் சிந்தித்ததுக் கொண்டு தான் இருக்கிறேன்.மதகுரு அவர்களின் விருப்பப்படி அவரின் இடத்திற்கே அவனை அமர்த்தலாம் என்று தோன்றுகிறது.”

நல்ல முடிவுதான் ஆனால் அவர் அரியணைக்கல்லவா ஆசைடுகிறார்?”

உண்மைதான்ஆனால் அதற்கான பக்குவம் அவனிடம் இல்லை.எனை பழிதீர்ப்பதாய் நினைத்து தேவையற்ற செயல்கள் ஏதேனும் செய்துவிடுவானோ என்று அஞ்சுகிறேன்.

எனவே சிறிதுகாலம் அவன் இந்த பதவியில் இருக்கட்டும் அதன் பின்னும் அவனுக்கு நாடாளும் ஆசையிருந்தால் நிச்சயம் நான் தடுக்க மாட்டேன்.”

சிவகங்காவதி ஒன்றுமே கூறாமல் அமைதியாய் அவனையே பார்த்திருந்தாள்.

ஏன் கங்கா இப்படி பார்க்கிறாய்?”

ஒன்றுமில்லை,எனக்கு முதன்முதலாக அறிமுகமான இஷானிற்கும் இப்போது நான் பார்ப்பவருக்கும் எத்துனை வித்தியாசம்.அவர்தான் இவரென்று என்னால் நம்ப முடியவில்லை.”

உண்மைதான்.நீ முதன் முதலாகப் பார்த்த இஷானுக்கு உணர்ச்சிகள் கிடையாது,உணர்வுகளை வெளிப்படுத்தவும் மாட்டான்.காசிம் கூறியது போன்று முன்னரே அவனை சந்தித்திருந்தால் இத்துனை பக்குவமாய் இந்த விடயத்தை கையாண்டிருப்பேனா என்பது சந்தேகமே

புரிந்து கொள்ள முடிகிறது தங்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் தனிப்பட்ட விடயங்களின் தாக்கத்தால் மனம் பக்குவமடைந்து இருக்கிறது.”

சரி நீ ஒன்றை மறைக்காமல் கூறு உனக்கு எந்த இஷானை பிடித்திருக்கிறது?”

அழகாய் புன்னகைத்தவள் மென்மையாய்,”எந்த ஒரு மனிதனும் நன்மையும் தீமையும் சரிவிகிதத்தில் கலந்தவனாகவே இருப்பான்.காலத்தின் கட்டாயத்தால் யாருக்கு எந்த முகத்தை காட்ட வேண்டும் என்பதை கடவுளே நிர்ணயிக்கிறார்.

அதையும் கடந்து வெகு சிலரிடமே சிலர் என்பதை விட யாரோ ஒருவரிடம் மட்டுமே நாம் நாமாய் இருக்க முடியும்.அவர்களிடம் எவ்வித தயக்கமுமின்றி நம் கெட்டதையும் நல்லதையும் வெளிக் கொணரலாம்.

உங்களின் வாழ்வில் அப்படிப்பட்ட ஒருத்தியாய் நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.இதில் எப்படி உங்களைப் பிரித்து பார்த்துக் கூற முடியும்.உலகமே அறிந்த இஷானும் என் மனம் கவர்ந்தவர் தான்.நான் மட்டுமே அறிந்த இஷானும் என் மனம் கவர்ந்தவர் தான்.”

அவள் கூறியதைக் கேட்டவனுக்கு அப்போதே அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகியது.அவனின் பார்வை ஆயிரம் அர்த்தங்களைத் தாங்கி நிற்க முகம் செம்மையுற்றவளாய் தலை குனிந்தவாறே அவனைவிட்டு சற்று தள்ளி நின்றாள்.

ஆண்மையின் தாபம் இன்னுமாய் அதிகரித்திருக்க அவளைப் பின்னிருந்து இறுக அணைத்திருந்தான்.அவளின் எலும்புகள் முறிந்து மூர்ச்சையாகி விடுவாளோ எனும் அளவிற்கு அவனின் இறுக்கம் இருந்தது.

இஷான்..”,அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்கவில்லை அப்படியாய் ஒருநடுக்கம் அவளிடத்தில்.

அவளின் ஒவ்வொரு அசைவிற்குமான அர்த்தங்களைப் படிக்க முயன்றிருந்தவனுக்கு அவள் உடல் மொழி ஏதோ செய்தி கூற மெதுவாய் தன்புறம் திருப்பினான்.

மென்மையாய் அவள் கன்னம் பற்றி நிமிர்த்தியவனின் அழுத்தத்தில் விழி நிமிர்த்தியவள் அவனை ஏறிட என்னவென்பதாய் இருந்தது அவனின் பார்வையின் கேள்வி.

..து..நாம்..அங்கு..”,என்றவள் நந்தவனம் இருந்த இடத்தை நோக்கி கைக்காட்ட முகம் மலர்ந்தவனாய் அவளை அப்படியே கைகளில் ஏந்தியிருந்தான் நஸீம்.அவனின் உயரத்திற்கும் எடைக்கும் சிறு பதுமை போல் அவன் கைகளில் காட்சியளித்தாள் சிவகங்காவதி.

நந்தவன அறைக்குள் நுழைந்தவன் அவள் வரைந்த ஓவியத்தின் முன் சென்று அவளை இறக்கிவிட்டு நொடியும் தாமதியாது அவளது அதரங்களை தன்னுடையது கொண்டு சிறை செய்திருந்தான்.

தன் மீதான தன்னவனின் காதலை அந்த ஒற்றை முத்தத்திலேயே உணர்ந்திருந்தாள் சிவகங்காவதி.நிமிடங்கள் கடந்து விடுவித்தவனின் முகம் நோக்க முடியாது தவித்தவள் அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

ஆதரவாய் அவளை ஆரத் தழுவியவனுக்கு மனம் எல்லையில்லா நிம்மதியை அடைந்திருந்தது.தானாகவே அவனிடமிருந்து பிரிந்தவள் அவன் விழி நோக்கியவாறே மெதுவாய் அவனிடம்,”மேனுஷு ஹேஷு மாகாஷ்ட்டம்”.என்று கூறி அவன் விழி நோக்கி நிற்க நஸீமோ விழிகளில் மின்னிய குறுஞ்சிரிப்போடு அவளை இன்னுமாய் தன்புறம் இழுத்து அவள் காது மடல்களில் தன் இதழ்உரச,

நா..ன்..உன்....காத..லிக்கி..றென்….”,என்று முடித்து காது மடல்களில் அழுத்தமாய் இதழ்பதித்தான்.

இஷான்!!!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.