Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு பைக்குடன் சென்று நின்ற முத்துநிலவன் ஃபோன் மூலம் வைஷ்ணவியை தொடர்புக் கொண்டான். ரிங் போனது உடனே கட்டானது மறுநொடி மெசேஜ் வர அது என்னவென பார்த்தான்

வெயிட்டீஸ் ஓல்டவுன்என எழுதியிருக்கவும் சிரித்தான்

நான் என்ன பஸ்ஸா இவளுக்குஎன நினைத்தவன் சுற்றி முற்றும் பார்த்தான். அங்கு சித்ராவை கண்டதும் அதிர்ந்தான்

சித்ராவோ ஹாஸ்டலில் ஒரு பெண்ணுடன் பேசியபடியே வெளியே வந்தாள். வெளியே வந்தும் 2 நிமிடம் பேசிவிட்டு விடைபெற்றவள் திரும்பிய போது முத்துவை பார்த்துவிட்டாள். பார்த்ததும் ஒரு சலனம் அவள் முகத்தில் வந்து சென்றதையும் முத்து பார்த்தான்

என்ன முகமே குழப்பமா இருக்கு என்ன நடந்திருக்கும் மருது கெட்டவன்னு கண்டுபிடிச்சிட்டாங்களோ, சரி நமக்கென்ன அவங்களா வந்தா பேசலாம் இல்லைன்னா வேணாம்என நினைத்தபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சித்ராவோ அவன் வைஷூவுக்காக நிற்பதை ஏதோ தனக்காகவே வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு கோபமுடன் அவன் முன் கோபமாக நின்றாள்

நீதானே அன்னிக்கு என்னைப் பார்க்க ஸ்போர்ட்ஸ் ரூமுக்கு வந்த

ரமேஷூம் சுரேஷூம் கபடி கோச்சிங்கல இருக்கானுங்க, நானும் கபடியில சேரனும் அதான் பார்க்க வந்தேன் மேடம்என சொல்ல சித்ரா குழம்பினாள்

ஆனா மருது அன்னிக்கு வேற மாதிரி சொன்னானேஎன முனகவே அதை நன்றாகவே கேட்ட முத்துவோ

மருதுவா அது யாரு மேடம்

எதுக்கு கேட்கற

க்ளாஸ் ரூமுக்கு வந்திருந்தாப்ல அதான் கேட்டேன்

தெரிஞ்சவரு

ஓஓஓ அப்படியா

என்ன அப்படியா

ரொம்ப பழக்கமோ மருதுவோட

உனக்கு தேவையில்லாத விசயம் இது

எனக்கென்ன வந்த்து, ஒருநாள் உங்களுக்கு அவன் தன்னோட உண்மையான முகத்தை காட்டுவான், பெரிய நாமம் போடப் போறான் உங்களுக்கு, இப்பவே அவனை விட்டு விலகிடுங்க அதான் உங்களுக்கும் நல்லது உங்க குடும்பத்துக்கும் அவமானம் வராம இருக்கும் அவனை பத்தி ஊருக்குள்ள விசாரிச்சப்ப தெரிஞ்சிக்கிட்டேன் அவன் ஒரு அயோக்கியன்னு, அது தெரியாம நீங்க அவன்கூட பழக்கம் வைச்சிருக்கீங்க இது நல்லதுக்கில்ல கவனமா இருங்க மேடம்

இதை சொல்லத்தான் லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்தியாஎன சித்ரா கேட்க அவனோ திகைத்தான்.

இங்க என் சினேகிதி இருக்கா அவளுக்காக பாயாசம் கொண்டு வந்தேன் எதேச்சையா நீங்க இருந்தீங்க அதான் எனக்கு தெரிஞ்ச விசயத்தை உங்களுக்கு சொல்லாம்னு நினைச்சேன். தப்பா மேடம்என சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து மறுபடியும் வைஷூவிற்கு ஃபோன் செய்தான்

ரிங் போனதும் அவளோ .ஃபோனை எடுத்ததும் கத்தினாள்

இருடா வரேன்

சீக்கிரமா வா நேரம் ஆகுது, ஜெராக்ஸ் கடைக்கு வேற போகனும் உனக்காக பாயாசம் வேற கொண்டு வந்தேன் ஆறிப்போறதுக்குள்ள வந்து சாப்பிடு

என்னது பாயாசமா இதோ 1 மினிட்ல உன் முன்னாடி நிப்பேன்

சீக்கிரம் வாஎன சொல்லியபடியே ஃபோனை கட் செய்துவிட்டு எதிரில் தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்ராவை பார்த்துச் சிரித்தான் சித்ரா முறைக்கவே அதற்கு முத்து சிரிப்பை விடுத்து அமைதியாகி அந்த பக்கமாக சென்ற ஆட்டோவை நிப்பாட்டினான்

உங்களுக்குதான் மேடம் இந்த ஆட்டோஎன சொல்ல அவளோ அவனின் செயலைக்கண்டு வியந்து ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோவும் கிளம்பியது.

அடுத்த நொடி வைஷூ வந்து நின்றாள் சிரித்த முகத்துடன் அவளிடம் பாயாசத்தை தர அதை வாங்கி சிறிது குடித்தாள்

பாயாசம் எப்படியிருக்கு

சூப்பராயிருக்கு

சரி வா டைம் ஆகுதுஎன சொல்ல அவளும் அந்த பாயசத்தை தனது பையில் வைத்துக் கொண்டு பைக்கில் ஏறினாள் ஹெல்மேட் இருவரும் அணிந்த உடன் நேராக ஜெராக்ஸ் கடையை நோக்கி விரைந்தான். வழியெங்கும் வைஷூ பேசிக் கொண்டே வர அதற்கு பதில் சொல்லியபடியே கடையை அடைந்தான்

நீ இங்கயே இரு நான் போய் புக் வாங்கிட்டு வரேன்

நானும் வரேன்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகாAdharvJo 2019-07-11 12:05
Indha villains munji kuda vaishu parthu irukanga but avangalai save pana nilavan munji parakama vittuttangale….Also indha 4 perukkum ivanga rendu peru adayalam kana mudiyama poche!! Waste guys ;-)

Ippadi pakathulai-a treasure vachikitu oora saladai pottu alasa viduringale sasi ma'am facepalm Anyway indha black sheep's inime no more gumbling gumbling and thappu Thanda doing steam Enama drama poduranunga paah :eek: ivangaludhu ellam oru frndhsip steam facepalm And chithra indha marudhai nambikittu irukangale….avalo solliyum ketka maten adam pidicha ena panuradhu :o hope she finds the truth soon!! interesting flow ma'am :clap: :clap: let us see what happens next. thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகாmadhumathi9 2019-07-11 05:58
:Q: antha naalvargalaal pirachinai vanthaalum muthu irukkumpodhu kavalai illaiye :-) nice epi sasi. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகாதீபக் 2019-07-10 18:36
Sis story super :clap: . Now only story gets more interesting to read :yes: . At last four people gets separate because of vaishnavi. What is going to happen to vaishnavi ? How Muthu is going to solve it :Q: eagerly waiting to know the answer the coming episodes l. :thnkx: for this update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top