(Reading time: 18 - 35 minutes)

"பயப்படாதீங்கம்மா.. யாதவி எங்கேயும் போயிருக்க மாட்டா.. வந்துடுவா, வேணும்னா கார்ல தானே போயிருப்பா, நம்ம ட்ரைவருக்கு போன் செய்து பாருங்களேன்.." என்றான் அவன்,

"யாதவி கார்ல போல விபு.. முதல் நாள் கார்ல போம்மான்னு தான் சொன்னேன்.. இல்ல பக்கத்தில் தானே நடந்தே போயிடுவேன், காரெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு போனா.. அதனால் நானும் அமைதியா இருந்துட்டேன்.. ஆனா இன்னைக்கு இன்னும் வரல, போகும் போது வேற அவ மனசு கஷ்டத்தோட போனா.." என்று அவர் சொல்லவும்,

"என்னம்மா சொல்றீங்க? மனசு கஷ்டமா? யாதவி மனசு கஷ்டப்பட்றது போல என்ன நடந்துச்சு?" என்று அவன் கேட்டான்.

அந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்கியவர், பின் அவனிடம் சொல்லத்தான் வேண்டும் என்று முடிவு செய்தவராக, "எல்லாம் நம்ம அர்ச்சனாவால் தான் ப்பா.. யாதவி இங்க வந்ததிலிருந்தே, அர்ச்சனா ஏதாவது யாதவியை திட்டிக்கிட்டே இருப்பா.. அதனால் தான் யாதவியும் அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பா, இன்னைக்கு அர்ச்சனா கொஞ்சம் அதிகப்படியா பேசிட்டா.." என்று நடந்ததை அவர் விவரமாக சொல்லவும்,

"என்னம்மா இது? நீங்க இருந்துமா அர்ச்சனாவை இவ்வளவு பேச விட்டீங்க.." என்று கோபம் கொண்டவன், சரி யாதவி எங்க இருக்கான்னு பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன்.." என்றவன், பாலா மூலம் வாங்கி வைத்திருந்த அவள் அலைபேசி எண்ணுக்கு முயற்சிக்க, அதுவோ அணைக்கப்பட்டிருப்பதாக சொல்லவும்,

ஒருவேளை பாலா வீட்டிற்கு சென்றிருப்பாளா? என்று யூகித்து அவன் பாலா வீட்டுக்கு தொடர்புக் கொள்ள, புவனா தான் அழைப்பை ஏற்றார்.

"அம்மா யாதவி அங்க வந்தாளா?" என்று அவன் கேட்கவும்,

"இல்லையே விபா.." என்று அவர் சொல்ல, அவன் வீட்டில் நடந்ததை சொல்லி, யாதவி எங்கு சென்றிருப்பாள் என்று ஏதாவது யூகம் இருக்கிறதா? என்று கேட்க,

"பயப்படாத விபா.. யாதவி ரொம்ப நேரமா வரலன்னா, அவ ஈஞ்சப்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு தான் போயிருக்கணும், நானும் அவளும் அடிக்கடி அந்த கோவிலுக்கு போவோம், அங்க கொஞ்சம் நேரம் அமைதியா தியானம் செஞ்சுட்டு, அப்படியே கோவில் பக்கத்தில் இருக்கும் பீச்ல கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு வருவோம், அதனால நீ எதுக்கோ யாதவி அங்க இருக்காளா பாரு.. போன இடத்தில் யாதவி போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கும், மத்தப்படி யாதவி தைரியமான பொண்ணு தான், நீ பயப்படாத.." என்று தைரியம் கூறினார்.

அதன்படி உடனே அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன், தனது காரை எடுத்துக் கொண்டு, சென்னை ட்ராபிக்கில் முடிந்த வரை வேகமாக ஓட்டியவன், அந்த கோவிலுக்கும் கடற்கரைக்கும் சென்று பார்க்க, அங்கே யாதவி இல்லை.

அதில் பயந்தவனாக, "5 வருஷம் கழிச்சு இப்போ தான் உன்னை கண்டுப்பிடிச்சேன்.. திரும்ப என்னை விட்டு போயிடாத யாதவி, ப்ளீஸ் நீ எங்க இருக்க.." என்று வாய்விட்டு விபாகரன் புலம்ப, யாதவியோ அந்த நேரம் சாத்விக்கின் காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். 

மையல் தொடரும்..

Episode # 32

Episode # 34

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.