(Reading time: 27 - 53 minutes)

"அய்யோ அப்படியில்லப்பா.. வீட்ல இருந்து பணம் கூட எடுக்காம வீட்ல இருந்து கிளம்பி ஈஞ்சப்பாக்கம் போயிருக்கா.. திரும்பி வர ஆட்டோக்கு பணம் இல்ல போல.. பஸ் ஸ்டாப்ல நிக்கும் போது சாத்விக் அந்த பக்கம் வரவே அவன் பார்த்து இங்க கூட்டிட்டு வந்திருக்கான்.. கூட அவளோட அப்பா பன்னீரும் இருந்திருக்காரு ப்பா.." என்று சொல்ல,

சாத்விக்கோடு அங்கு வீட்டுக்கு வந்தால் அர்ச்சனா ஏதாவது சொல்வாளோ என கண்டிப்பாக யோசித்து தான், அவள் இந்த முடிவை எடுத்திருப்பாள் என்பதை புரிந்துக் கொண்டவன்,

"அம்மா அதான் வீட்டுக்கு பத்திரமா வந்துட்டால்ல.. இன்றைக்கு நைட் அவ உங்கக்கூட இருக்கட்டும், காலையில் நானே வந்து கூட்டிட்டுப் போறேன்.. அவளை எதையும் நினைச்சு கவலைப்படாம மட்டும் இருக்க சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு வந்தான்.

அவர் பேசி முடித்து வைக்கவும், யாதவி உள்ளே வருவதை பார்த்தவர், "என்ன தேவி.. அர்ச்சனா பேசினது அதிகம் தான், நான் இல்லன்னு சொல்லல.. ஆனா அதுக்குன்னு மஞ்சுளாக்கிட்ட சொல்லாம கிளம்பி போயிடுவியா? எப்போதும் வெளிய போனா சீக்கிரம் வந்துடும் நீ, இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகியும் வரலன்னதும் பயந்து விபாக்கு போன் பண்ணிட்டாங்க தெரியுமா? நீ ஈஞ்சப்பாக்கம் தான் போயிருப்பேன்னு சரியா கண்டிப்பிடிச்சி சொல்லிட்டேன்.. விபா உன்னை அங்கே தேடிட்டு இருந்தான்.." என்று அவர் சொல்லவும்,

"அய்யோ நான் வீட்ல இருந்து கிளம்பும் போது அங்க போகணும்னு நினைச்சு கிளம்பளம்மா.. ஏதோ தோனவே கிளம்பிட்டேன்.. லேட்டாகும் அவங்க தேடுவாங்கன்னு நினைக்கல.. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதையும் கவனிக்கல.." என்று அவள் பதில் கூறினாள்.

"உன்னோட மனநிலை புரியுது தேவி.. ஆனா நீ நிறைய பேருக்கு தெரியக்கூடிய பிஸ்னஸ் மேனோட மனைவி.. நீ இப்படி பஸ்க்காக நின்னுக்கிட்டு இருக்கறதை யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. விபாவை தானே தப்பா பேசுவாங்க.. அதுக்கு இடம் கொடுக்கலாமா? யாரோ என்ன நம்ம வீட்ல ரூபினி ஒருத்தியே போதும், நல்லவேளை பாலாவும் அவளும் ஒரு கல்யாணம்னு ஊருக்கு போயிருக்காங்க.. இல்ல அவளே குத்தலா ஏதாவது பேசுவா.. அதுக்கு தான் சொல்றேன்.. சரி நீ வந்து ஏதாவது சாப்பிடு, இன்னைக்கு நைட் நீ இங்கேயே இருப்பியாம், நாளைக்கு வந்து உன்னை விபா கூட்டிட்டு போறதா சொல்லியிருக்கான்.. அர்ச்சனா பேசினதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம நிம்மதியா தூங்கு.."  என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றார்.

அவர் சொன்னது போலவே வீட்டுக்கு சென்றதும் பன்னீர் விபாகரனை அலைபேசியில் அழைத்தார். அவன் அலுவலகத்தில் ஒருவரை பிடித்து மாமனார் என்று சொல்லி அவனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.